*10 செகண்ட் கதைகள்:*

*ஸீட்*
தன் மகன், அரசுக் கல்லூரியில் இலவச ஸீட் வாங்குவதற்காக, தனியார் பள்ளியில் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தார் தந்தை!
=============

*தமிழன்டா*
சென்னையைவிட்டு அமெரிக்கா சென்ற நண்பன் சந்தோஷமாகச் சொன்னான்..."அங்கே நிறைய தமிழ் ஆளுங்க இருக்காங்கடா!"
===============

*திருட்டு*
"பென்சில் திருடினதுக்கு மிஸ் அடிச்சிட்டாங்க" எனக் கேவிக்கேவி அழுத மகளிடம், "திருடுறது தப்பு...'பென்சில் வேணும்'னு அப்பாகிட்ட கேட்டிருந்தா ஆபீஸில் இருந்து கொண்டு வந்திருப்பேன்ல!" என்றார் அப்பா.
===============

*பணம்*
பள்ளிக் கட்டணம் கட்டாததால், மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள்....இரண்டு மாதமாக சம்பளம் வாங்காத ஆசிரியை!
=============

*பழ(ங்)கதை* "தம்பிதானே....விட்டுக்கொடுப்பா" என மகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் பழநி மலைக்கோயில் வரிசையில் நின்றிருந்த தந்தை!
===============

*அக்கறை*
கோயில் திருவிழாவில் தன் குழந்தையைத் தவறவிட்டு 'காணவில்லை' என அழுதபடி தேடிக்கொண்டிருந்தவளின் இடது கையில் பத்திரமாக இருந்தது கைபேசி!
===============

*விதி*
"துப்பாக்கியில் சைலன்ஸர் இருந்தும் எப்படி மாட்டிக்கிட்ட?" என்றான் சக கைதி. "செத்தவன் கத்திட்டானே!" என்று சோகமாகச் சொன்னான் கொலைகாரன்!
=============

2017-10-19 11:11:11 by SekarGV

என்ன டின்னர்?
மதியம் மிச்சமான சோத்துல முட்டையை, மிளகு போட்டு தாளிச்சு வச்சு இருக்கேன்.
எனக்கு பசிக்கலை.!

காட்சி-2:
என்ன டின்னர்?
பெப்பர் எக் ஃப்ரைட் ரைஸ்
அட சூப்பர்.!

நீதி:
சோறு வைக்கிறது பெருசு இல்லை...
அதுக்கு பேரு வைக்கணும்.!

2017-09-15 13:55:06 by SekarGV

ஒரு வாலிபன் தன்னுடைய குருவிடம்...

எனக்கு என் தாயார் திருமணம் முடிக்க ஆசைப்படுகிறார். குருவே எனக்கும் அதில் ஆசைதான்... நான் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்வது என்றான்...
குருநாதர் சொல்கிறார்...


அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும்,

அழகில்லாதவளை முடிக்காதே! ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமலும் போகும்,

உயரமானவளை முடிக்காதே! ஒவ்வொரு வார்த்தைக்கும் உன் கழுத்து சுலிக்கக் கூடும்,

குள்ளமானவளை முடிக்காதே! உனக்கு அது சரியான ஜோடியாக இருக்காது,

பருமனானவளை முடிக்காதே! உன் வருமானம் அவளுக்கு போதாது,

மெலிந்தவளை முடிக்காதே! வீட்டில் அவள் எங்கே என நீ தேடுவாய்,

வெள்ளையானவளை முடிக்காதே! அவளை காணும்போதெல்லாம் உனக்கு மெழுகுவர்த்திதான் ஞாபகம் வரும்,

கருத்தவளை முடிக்காதே! இருட்டில் அவளை கண்டு நீயே பயப்படக் கூடும்,

படிக்காதவளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்துகொள்ளமாட்டாள்,

படித்தவளை முடிக்காதே! உன் பேச்சையே அவள் கேட்கமாட்டாள்,

பணக்காரியை முடிக்காதே! உனக்கு அந்த இடத்தில் மரியாதை இருக்காது,

ஏழையை முடிக்காதே! உனது மரணத்திற்கு பிறகு உன் குழந்தைகளும் சிரமப்படும்,

அதிக அன்பானவளை முடிக்காதே! நீ வாழவும் இயலாது சாகவும் இயலாது,

கோபக்காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகிவிடும்,

அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே! உன் மீது சந்தேகம் கொள்வாள்,

ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே! நீ வீட்டு வேலைக்காரனாய் மாறிவிடுவாய்,

அமைதியானவளை முடிக்கதே! நீ இறந்துபோனாலும் அவள் மௌனமாகத்தான் இருப்பாள்,

பரபரப்பானவளை முடிக்காதே! நீ சொல்வது அவள் காதில் விழாது,

ஊருக்குள்ளே பார்த்து முடிக்காதே! தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் அதை காண ஓடுவாள்,

தூரத்தில் பார்த்தும் முடிக்காதே! அடிக்கடி பயணம் செய்வதிலேயே உன் வாழ்க்கை முடிந்து போகும்,
என்று கூறி பெறும் மூச்சுவிட்டார் குருநாதர்...


இதை கேட்ட அந்த வாலிபன் கடுமையான கோபத்தோடு சொல்கிறான்...

"ஏன் குருவே இதற்கு நீங்கள் திருமணமே வேண்டாம்!" என்று சொல்லிவிடுங்களேன். :(
குரு மென்மையான ஒரு சிரிப்புடன் சொல்கிறார்...
"சொன்னா எவன்பா! கேட்கிறான்!" :)
மண் மீது ஆசைபட்ட பல்வாழ் தேவனும் இறந்து விட்டான். பெண் மீது ஆசைபட்ட பாகுபலியும் இறந்துவிட்டான்...

எதற்கும் ஆசைபடாத கட்டப்பா இறுதி வரை உயிருடன் இருந்தார்...

கெட்டப்பா வாழ்றத விட கட்டப்பா மாதிரி வாழலாம்....

2017-07-21 10:56:32 by SekarGV

சிஷ்யன்:- உயரமான மலையில் குளிரில் தவம் இருக்கும் குருவிடம் புதிதாக சேர்ந்த சிஷ்யன் கேட்டான்.
*"எப்பிடி சுவாமி இந்த குளிரை தாக்கு பிடித்து தனிமையில் இருக்கீங்க என்று...!!!"*

சுவாமி:- *"அது வேறொன்றுமில்லை... உடம்பை சூடேற்ற துளசியும், க்ரீன் டீயும் தான் காரணம் . இதில் உனக்கு எதாவது ஒன்று கேள் தருகிறேன்"*

சிஷ்யன்:- *"க்ரீன் டீ குடுங்க சுவாமி"*

சுவாமி உள்ளே குரல் கொடுத்தார்

















*"துளசி ஒரு க்ரீன் டீ எடுத்து வாம்மா"*

சிஷ்யன்:-

# அடடடா... வடை போச்சே..

2017-07-21 10:56:03 by SekarGV

Husband : Sorry dear...naan veettukku varamudiyaadhu polirukku...

Wife : Ean ennaachi??

Husband : Car la stearing, gear, clutch,brake, accilator ellaathayum evano thirudittu poittaan..ippo enna pandrathunne theriyala

Wife : Thanni adichirukkiyaa??

Husband : ....hi..hi..hi..summa light aa darling...

Wife : Ninachen..loosu..loosu...mudhalla back seat lerndhu irangi..poi front seatla ukkaarndhu...vandiya eduthukkittu seekkiram vandhu thola..

Husband:

2017-07-21 10:43:26 by SekarGV

இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிநவீன ஏவுகணை விண்ணில் ஏவப்பட உள்ளது .

2017-07-21 10:41:34 by SekarGV

"சி. எம். ஏன் கோவமா இருக்காரு "?

" நேத்திக்கு நடந்த ஜனாதிபதி தேர்தல்ல நாலு MLA`ஸ் ஓவியாவுக்கு வோட்டு போட்டுட்டாங்களாம் ".

2017-07-19 09:13:55 by SekarGV

#அமைச்சர்செல்லூர்ராஜீ வின் அடுத்த திட்டங்கள்

1. கடல்நீர் ஆவியாவதை தடுக்க குடை பிடிக்கும் திட்டம்...

2. ஒசோனில் உள்ள ஒட்டையை cello tape கொண்டு ஒட்டும் திட்டம்..

3. வெப்பத்தை குறைக்க சூரியனை கம்பளி போர்வையால் போர்த்தும் திட்டம்...

4. அடிபம்பில் இருந்து ஆயில் எடுக்கும் திட்டம்

5. வெயிலின் தாக்கத்தை குறைக்க தமிழகம் முழுவதும் பந்தல் போடும் திட்டம்...

6. ஆற்றுநீர் கடலில் கலப்பதை தடுக்க வாட்டர் பாட்டலில் சேமிக்கும் திட்டம்...

7. அனல்காற்றை தடுக்க தமிழகத்தில் 4 மூலைகளிலும் Ac வைக்கும் திட்டம்...

8. சாக்கடையில் இருந்து சால்னா எடுக்கும் திட்டம்.

9. கொசுவுக்கு குடும்பகட்டுபாடு திட்டம்...

10. மழை நீரை சேமிக்க ஆற்றில் மணல் அள்ளும் திட்டம்...

11. சாலை விரிசலை அடைக்க சிமெண்ட் போட்டு ஒட்டும் திட்டம்...

2017-04-27 07:20:01 by Zhang Wei

ஸ்டூடென்ட் 1: ஏண்டா உன்னை HOD திட்டினாரு?

ஸ்டூடென்ட் 2:HOD அவரோட நாயை காணவில்லை'னு பேப்பர்ல விளம்பரம் குடுக்க சொன்னாரு.

நான் "HOD நாயை" காணம்ணு விளம்பரம் குடுத்துட்டேன்.

2017-04-11 20:30:01 by William James

Funny Jokes || Dad And Son Funny Jokes  Dad And Son

2017-03-05 03:50:01 by Priyadharshini
Back to Top

Popular Tufs

Just believe that good things

Just believe that good things

default thumb image

Brinda Parekh Indian Actress

Butterfly is mental so is

Butterfly is mental so is

MI 481 50

MI 481 50

Tamil Jokes Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Tamil Jokes category.