எது நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார்.

பெருக்கிச் சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதைக் குறைவின்றி சிறப்பாகச் செய்து வந்தார். கோவில், விட்டால் வீடு என்றுதான் வாழ்ந்து வந்தார். இதைத் தவிர அவருக்கு வேறொன்றும் தெரியாது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர்.

‘இறைவன்
இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே…
அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய
அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்குப் பதிலாக
நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன்.

நீ
சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்டார்.இறைவன்,

“எனக்கு நிற்பதில் ஒன்றும் பிரச்னையில்லை. எனக்குப் பதிலாக நாளை ஒருநாள் நீ நில். ஆனால், ஒரு முக்கிய
நிபந்தனை, நீ என்னைப் போலவே அசையாமல் நிற்க
வேண்டும்.

வருபவர்களைப் பார்த்துப் புன்முறுவலுடன்
ஆசி வழங்கினால் போதுமானது. யார் என்ன சொன்னாலும் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ கடவுள் சிலை என்பதை மறந்து விடக்கூடாது.

என்
மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூறினார். அதற்கு அந்தப் பணியாளும் சம்மதித்தார்.

அடுத்த நாள், இறைவனைப்
போலவே அலங்காரம் செய்து கொண்டு, கோவில் கருவறையில் நின்றார்.

இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்றுக்
கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யத் தொடங்கினார்.

முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன்
வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும்
என்று இறைவனிடம் வேண்டி, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினான்.

அவன் திரும்பிச் செல்லும் போது, தவறுதலாகத்
தனது பணப்பையைத் தவற விட்டுச் சென்றான்.

இதைக்
கருவறையில் கடவுள் வேடத்தில் நின்று கொண்டிருக்கும்
பணியாளர் பார்த்தார். ஆனால், இறைவன்
நிபந்தனை ஞாபகத்துக்கு வர பேசாமலிருந்தார்.

அப்படியே அசையாது நின்றார். சிறிது நேரம்
கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான்.

அவனிடம்
உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது.
அவன், “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர
முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல, என்னை ஆசிர்வதிக்க வேண்டும்.

எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மிகக் கஷ்டமாக இருக்கிறது. என்னுடையப்
பிரச்சனைகளை எல்லாம் உன்னிடமே விட்டுவிடுகிறேன்.

நீயே எனக்கு ஒரு நல்ல வழியைச் செய்” என்று மனமுருகக் கண்களை மூடி நம்பிக்கையுடன்
வேண்டினான்.

சில வினாடிகள் கழித்துக் கண்களைத் திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவற விட்ட பணப்பை கண்ணில் பட்டது.

அதனுள்ளே பணம்
மட்டுமில்லை, தங்கக் காசுகளும் வைரங்களும் கூட
இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு
செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக் கொள்கிறான்.

இறைவன் வேடத்தில் நின்று கொண்டிருந்த, அந்தப் பணியாளரால்
தற்போதும் எதுவும் சொல்ல முடியவில்லை.

அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூரப் பயணமாக கப்பலில் அன்று அவன்
செல்லவிருப்பதால், இறைவனைத் தரிசித்து ஆசி பெற வேண்டி வந்தான்.

இறைவனிடம்
பிரார்த்தனை செய்தான்.அந்த நேரம் பார்த்து, பணப் பையைத் தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்பக் கோவிலுக்கு வந்தான்.

அங்கு, கப்பல்
வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என்பணப்பையை எடுத்திருக்க வேண்டும்.

இவரைப் பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற,
காவலர்களும் அந்தக் கப்பல் வியாபாரியைப் பிடித்துச்
செல்கிறார்கள்.

இறைவா என்
பணத்தை அபகரித்தவரை அடையாளம்
காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன்
இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு சென்றார். சிலையாக நின்ற பணியாளர் இறைவனை நினைத்தபடி,

“கடவுளே இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க
முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்றபடி நடந்த
உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார்.

உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய்,
உண்மையைக் கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர்.

இரவு வருகிறது.
கோவில் வாசல் மூடப்படுகிறது. இறைவன் வருகிறார்.

மூலஸ்தானத்தில் நின்று கொண்டிருந்த பணியாளரிடம், இன்றைய பொழுது எப்படியிருந்தது? என்று கேட்டார்.

“மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன்.
ஆனால் ஒரு நல்ல செயல் செய்தேன்….”
என்று காலை கோவிலில் நடந்ததைக் கூறினார். இறைவனோ
இதைக் கேட்டவுடன் அதிருப்தியடைந்தார்.

இறைவன் அதிருப்தியைப் பார்த்த பணியாளர் பதற்றமானான்.

இறை
வன், “நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ
ஏன் நடந்து கொள்ளவில்லை…?

என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என்
நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்.?

உனக்கு என்
மீது நம்பிக்கை இல்லை.
இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது.

அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, நான்
பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளத்
தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.

ஆனால்
அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என்
மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க
வந்தான். அன்போடு அதைக் கொடுத்தான். இந்தச்
சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும்
இல்லை. இருந்தாலும்,

இன்றைக்கு அவன்
திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தைச்
சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன்
கப்பலும் காணாமல் போயிருப்பார்கள்.

அதிலிருந்து அவனைக் காக்கவே அவனைத்
தற்காலிகமாகத்திருட்டுப் பட்டம் சுமக்கச் செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன்.

அந்த
ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக
எண்ணிப் போற்றுவான்.

இதன் மூலம் அந்த
செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும்.
அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும்.

இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ஆசிர்வாதம் செய்ய நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும்
பாழ்படுத்திவிட்டாய்.” என்றான். பணியாளர், இறைவனின்
கால்களில் விழுந்து தன்
தவறுக்கு மன்னிக்கும்படி வேண்டினான்.

“இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும்
மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது.

அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொரு பொழுதையும் கழிக்கிறேன்.
அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன்.

நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது” என்றான்...

ஒரு நாளும் இறைவன் தப்புக்கணக்கு போட்டதி

-

2017-10-27 10:21:16 by SekarGV

*வெற்றியின் வீட்டுக்கு எப்படி போகணும்?*

நேரா போய் ரைட் எடுத்தா,
ஒரு தோல்வி வரும் ..
அங்கருந்து லெப்ட் போனா
பெருசா ஒரு துரோகம் இருக்கும்..
கொஞ்ச தூரம் போயி ஒரு யு டேன் அடுச்சா, அங்க கடன் என்கிற ஒரு பெரிய பள்ளம் இருக்கும்..
அந்த பள்ளத்துல விழுந்து மூஞ்சி மொகர எல்லாம் பேந்து எந்திருச்சு நேரா போனா,
ஏமாற்றங்கர ஒரு சிக்னல் இருக்கும், அதையும் தாண்டி போனா,
போட்டி, பொறாமைங்கர
ஸ்பீடு பிரேக்கர்கள் வரும்,
அவற்றையும் தாண்டி டாப் கியர் போட்டு போயிகிட்டே இருந்தால் ஒரு மேடு வரும் அதில அகங்காரம் என்கிற கியர்ல ஏறாம பணிவு என்கிற கியர்ல ஏறுனா உச்சீல இருக்கிறதுதான் நீங்க கேட்ட வெற்றியின் வீடு.

2017-09-20 14:45:27 by SekarGV
HOT

மனைவிக்கு பின் கணவர்களின் நிலை withfriendship.com

மனைவிக்கு பின் கணவர்களின் நிலை

2017-09-01 10:31:36 by P Ravichandran59a441e2448

ஒரு குட்டிக்கதை

ஒரு கட்டுமான எஞ்சினியர்…
13 வது… மாடியிலே வேலை செய்து
கொண்டு இருந்தார்…
.
ஒரு
முக்கியமான வேலை…
.
கீழே ஐந்தாவது
மாடியில் வேலை செய்து கொண்டு
இருந்த கொத்தனாருக்கு முக்கியமான
செய்தி சொல்ல வேண்டும்…
.
செல் போனில் கொத்தனாரை
கூப்பிட்டார் எஞ்சினியர்..
.
ம்ஹும்..கொத்தனார் வேலை
மும்முரத்தில்,
சித்தாளுடன் பேசிக் கொண்ட இருந்தார்…
.
போனை எடுக்க
வில்லை..
.
என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்..
.
அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே
பார்க்கவில்லை…
.
இவ்வளவுக்கும்…
கொத்தனார் வேலை செய்யும் இடத்தில்
இருந்து , அவரால் என்ஜினியரை
நன்றாகப் பார்க்க முடியும்…
.
எஞ்சினியர் என்ன செய்வதென்று
யோசித்தார்…
.
ஒரு பத்து ரூபாய்
நோட்டை எடுத்து,
மேலே இருந்து,
கொத்தனார் அருகில் போட்டார்…
.
ரூபாயைப் பார்த்த கொத்தனார்,
அதை எடுத்து பையில் போட்டுக்
கொண்டார்…
.
ஆனால்சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை…
.
என்ஜினியருக்கு ஒரே கோபம்..
.
இருந்தாலும் பொறுத்துக் கொண்டு…
.
ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார்…
.
அதையும்
எடுத்து சட்டைப் பையில் வைத்துக்
கொண்டு…
கொத்தனார் மும்முரமாக
இருந்தார்…
.
எஞ்சினியர்.. பொறுமை
இழந்து
ஒரு சின்ன கல்லை எடுத்து,
கொத்தனார் மீது போட்டார்…
.
அது அவரது தோள் மீது பட்டு நல்ல
வலியோடு, மேலே பார்த்தார்…
.
அப்பொழுதுதான் எஞ்சினியர் தன்னை
அழைத்தார் என்பதை உணர்ந்தார்…
.
மனிதனும்
அப்படித்தான்….

மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது
அவனுக்கு புரிவதில்லை… உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்...

இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்...

அப்பொழுதும் அவன் இறைவனை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை...

ஆனால் ஒரு
துன்பம் நேரும் பொழுது தான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.

துன்பங்கள் வரும் நேரம்…
இறைவன்
உன்னைத் தேடி அழைக்கும் நேரம்
என்று பொருள்.

படித்ததில் பிடித்தது.....

2017-08-30 09:59:49 by SekarGV

*ஞானியும் பணக்காரனும்!!*

ஞானி ஒருவரை சந்தித்த பணக்காரன் ஒருவன், “சுவாமி! என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. விளை நிலங்களும் ஏராளமாக உள்ளது. உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது. எனவே நான் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. எவரிடமிருந்தும் எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை!” எனப் பெருமையடித்துக் கொண்டான்.

புன்சிரிப்போடு அதைக் கேட்ட ஞானி, “வா! சற்று தூரம் நடந்துவிட்டு வரலாம்!” என்றார். “கடுமையான வெயிலில் போக வேண்டுமா?” என தயங்கினாலும், ஞானி கூப்பிடும்போது மறுப்பது நன்றாக இருக்காது என்பதால் கிளம்பினான்.

சிறிது தூரம் சென்றதுமே வெப்பம் தாங்காமல் தவித்த பணக்காரன், ஏதாவது நிழல் இருந்தால் சற்று ஒதுங்கலாமே என எண்ணி சுற்றும் முற்றும் பார்த்தான். எந்த நிழலும் தென்படவில்லை.

ஞானி கேட்டார், “என்ன தேடுகிறாய்?”

“நாம் சற்று இளைப்பாற ஏதாவது நிழல் இருக்கிறதா எனப் பார்த்தேன்.”

“ஏன் உன் நிழல் உள்ளதே, அதில் நீ ஒதுங்கிக்கலாமே?”

“சுவாமி! என் நிழலில் நான் எப்படி இளைப்பாற முடியும்?”

“என்னப்பா இது... நீ யாரையும் எதையும் சார்ந்து வாழத் தேவையில்லை. உன் பொருட்களே உன்னைக் காப்பாற்றும் என்று சற்று முன்புதானே கூறினாய்? ஆனால், இப்போது உன் நிழலே உனக்கு உதவவில்லை என்கிறாயே?” என்றார்.

செல்வந்தன் உண்மையை உணர்ந்தான் !

2017-08-30 09:59:24 by SekarGV

Good

Good Morning..

2017-08-09 10:37:25 by SekarGV

நீ ஏமாற்றியது உன்மீது வைத்த நம்பிக்கையை..

2017-02-28 14:08:32 by priyaganesh
HOT

But

Think.. But Act..

2016-12-16 18:00:56 by thulasi
HOT

Panam paththum

Panam paththum seiyum...

2016-09-19 10:50:58 by Sanju
HOT

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.**
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
***
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
***
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
***
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
***
குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
***
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

கவலைகளை விட்டொழியுங்கள்.
***
#சந்தோசமாய் இருங்கள்,..

2016-08-24 11:11:40 by Vinoth_805
Back to Top

Popular Tufs

Heavy Firing by Pakistani Troops

Heavy Firing by Pakistani Troops

Need these types of ladies

Need these types of ladies

Name one thing that money

Name one thing that money

Related Tuf

Related Tuf

Thathuvangal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Thathuvangal category.