Adorable girl meets kitten for the first time and cries tears of pure joy!! - Marley & Ella - YouTube youtube.com

9 year old girl gets surprised with a new kitten!! -------------------------------- * Jukin Media Verified * Find this video and others like it by visiting h...

www.youtube.com/watch?v=Zg_vjRKIjak
Adorable girl meets kitten for the first time and cries tears of pure joy!! - Marley & Ella

2017-02-06 15:20:36 by muthu

செவ்வாய் மண்ணில் கார்பன்: உயிரினம் இருந்திருக்க வாய்ப்பு?


செவ்வாய் கோள் ஆராய்ச்சில் இன்னும் ஒரு முக்கிய திருப்பமாக அந்த கிரகத்தின் மண்ணில் கார்பன் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் ஒரு காலத்தில் செவ்வாய் கோளில் உயிரி னங்கள் இருந்திருக்கலாம் என்ற நம் பிக்கை வலுப்பட்டுள்ளது.

செவ்வாய் கோளிற்கு நாசா அனுப்பி யுள்ள கியூரியாசிட்டி விண்கலத்தின் ஆய்வின் மூலம் இது தெரிய வந்துள்ளது. இருப்பினும் இது ஆரம்ப கட்ட கண்டு பிடிப்புதான். இந்த ஆய்வை வைத்து அங்கு உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு உறுதியாக வந்து விட முடியாது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கியூரியாசிட்டி விண்கலமே நடத்திய மண் மாதிரி ஆய்வின்போது, மண்ணில் கார்பன் மூலக்கூறுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கார்பன், உயிரினங்களின் உருவாக்கத்தை நிர்ணயிக்கும் கார்பனா அல்லது வேறு ஏதேனுமா என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளது.

மேலும் இந்தக் கார்பன் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டியுள்ளது.

ஒரு வேளை இந்த கார்பன், செவ்வாய் கிரக மண்ணிலேயே இயற்கையாகவே இருந்தது என்றால் நிச்சயம் உயிரினம் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கைக்கு வர முடியும் என்றும் நாசா கூறுகிறது. உயிரினம் வாழ மொத்தம் மூன்று விஷயங்கள் அவசியம். முதலில் தண்ணீர், சக்தி ஆதாரம் மற்றும் கார்பன்.


இது போக சல்பர், ஆக்சிஜன், பாஸ்பரஸ், நைட் ரஜன் ஆகியவையும் கூட தேவை. கடந்த நான்கு மாதமாக செவ்வாய் கிரகத்தில் நிலை கொண்டுள்ள கியூரியாசிட்டி விண்கலம், பல்வேறு வகையான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது.

அதில் முக்கியக் கண்டுபிடிப்பாக தற்போது கியூரியாசிட்டி போய் இறங்கியுள்ள பகுதியில் ஒரு காலத்தில் அபரி மிதமான தண்ணீர் இருந்தது என்பதுதான்.

மேலும் அங்குள்ள நீர்ப் படுகையில், தாதுக்களும் அடங்கி யிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது.

2016-01-02 15:53:16 by muthu

டெஸ்ட் போட்டிகளுக்கான சர்வதேச தரநிலைப்பட்டியல்:ஆல்ரவுண்டராக அஷ்வின் முதலிடம்


டெஸ்ட் போட்டிகளுக்கான சர்வதேச தரநிலைப்பட்டியலில், பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்திய வீரர் அஷ்வின் முதலிடம் பிடித்தார்.
இவ்வாண்டு ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஷ்வின் 61 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டும் 31 விக்கெட்டுகளை அவர் சாய்த்துள்ளார்.
இதன் மூலம் பிஷன் சிங் பேடிக்கு பிறகு, ஆண்டின் இறுதியை சர்வதேச தரநிலையில் முதலிடத்துடன் நிறைசெய்யும் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஷ்வின் பெற்றார்.
டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் ஆல் ரவுண்டர்களுக்கான தரநிலைப்பட்டியலிலும் அஷ்வின் முதலிடம் பிடித்தார்.                          61     4      31

2016-01-02 13:47:41 by muthu

இனி ரூ.1000-க்கு ஸ்மார்ட்ஃபோன்?


ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 6 எஸ் இந்திய சந்தையில் அறிமுகமாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் அறிமுகம் ஆகும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
டேட்டாவிண்ட் நிறுவனத்துடன் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் இணைந்து, இந்த புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன      6

2016-01-02 13:39:06 by muthu

இணைய உலகில் புதுப் புரட்சி: WiFi” ஐ விட அதிவேகமான ‘Li-Fi’ உருவாக்கம்


“WiFi” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட்வொர்க் இணைப்பு(wireless நெட்வொர்க்).
இந்த இணைப்பு wired நெட்வொர்க் காட்டிலும் எளிதாக மற்றும் மலிவானதாக இருப்பதால் பல பேர் தங்கள் இல்லங்கள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு “WiFi” ஐ தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.
இந்த சேவையை பெற phone socket தேவைப்படாத காரணத்தினால் கம்ப்யூட்டர் ஐ எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்திக் கொள்ளலாம்.அதுமட்டும் இல்லாமல் விரைவாகவும் எளிதாகவும், ஒரு இணைய இணைப்பைக் கொண்டு பல கணினிகளை இணைக்க இந்த சேவை அனுமதிக்கிறது.
பல முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிமுகப்படுத்தி wifi சேவையை வழங்குவதால், இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் wifi என்பது மிக முக்கியமாக இன்றியமையாத ஒரு சாதனமாக இருந்து வருகிறது.
தற்போது ‘Wi-Fi’ வை விட 100 மடங்கு வேகம் கொண்ட தொழில்நுட்பத்தை எஸ்டோனியா நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதற்கு ‘Li-Fi’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
‘Wi-Fi’ இல் 1 ஜி.பி தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ அதை விட 100 இல் 1 மடங்குதான் ‘Li-Fi’ நேரம் எடுத்துக் கொள்கிறது.
தகவல் தொழில் நுட்பத்தில் ‘Li-Fi’ புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.     WiFi    LiFi WiFi          wireless   wired              WiFi      phone socket                           wifi       wifi         WiFi   100          LiFi  WiFi  1         100  1  LiFi      LiFi

2016-01-02 13:35:06 by muthu

ரகசிய அணுசக்தி நகரத்தை இந்தியா கட்டி வருவதாக அமெரிக்க பத்திரிகை தகவல்


அணுஆயுதங்களை தயாரிக்கும் திறன் கொண்ட ரகசிய அணுசக்தி நகரத்தை இந்தியா கட்டி வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
கர்நாடக மாநிலம் சல்லக்கரே என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் இந்த நகரம் 2017ல் நிறைவடையும் என்றும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்நகரத்தில் அணு சக்தி ஆய்வகங்கள், அணுஆயுதங்கள் தாங்கிய ராக்கெட்டுகளை சோதிக்கும் வசதிகள் என பல்வேறு வசதிகள் இருப்பதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிடம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அதிகளவில் இருப்பது சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டுகளை தயாரிக்க வழிவகுக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் இப்பத்திரிகை கூறியுள்ளது.
சில நாடுகளின் அரசு அதிகாரிகள் சிலரிடம் இருந்து திரட்டிய தகவல் படி இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்தியாவின் அணுசக்தி நகர திட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் அப்பத்திரிகை கூறியுள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து அதிகரித்து வரும் சவால்களை சமாளிப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.                                2017

2016-01-02 13:26:14 by muthu

பருவநிலை மாற்றம் காரணமாக பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தகவல்


பருவநிலை மாற்றம் காரணமாக உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால்,கடல் நீர் மட்டம் அதிகரித்து அதன் மூலம் பூமி சுற்றும் வேகம் குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து ஆராய்ச்சி செய்த கனடாவின் அல்பெர்டா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மேத்யூ டம்பெரி ஆகியோர்,பூமியின் வெப்பம் அதிகரித்து அதன் மூலம் துருவப் பகுதிகளில் உள்ள பனிமலைகள் உருகி வருவதால் கடல் நீர்மட்டம் அதிகரித்து அதன்மூலம் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
துருவப் பகுதிகள் உருகி வருவதால்,துருவங்களின் அடர்த்தி குறைந்து வருகிறது அது மட்டுமல்லாது நிலவின் ஈர்ப்பு சக்தியும் குறைந்து வருகிறது.இவை இரண்டுமே பூமியை மெதுவாக சுழலச் செய்வதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இவ்வாறு பூமி மெதுவாகச் சுழல்வதால் ஒரு நாளின் நீளம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ள மேத்யூ டம்பெரி அடுத்த நூற்றாண்டிற்குள், ஒரு நாள் பொழுதில், 1.7 மில்லி நொடிகள் நீளும் என கணக்கிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் பருவநிலை மாற்றம், கடல் நீர்மட்ட உயர்வு போன்றவற்றின் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, கடலோர நகரங்களில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அதற்காக, இலட்சக்கணக்கான கோடிகளை செலவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2016-01-02 13:14:48 by muthu

மழை தண்ணீர் கடலில் இருந்து வருவதால் அடை மழைக்கு பிறகு கடலில் தண்ணீர் குறையுமா?


பூமியிலுள்ள நீர் நிலைகளிலிருந்து வானத்திற்கு நீராவி சென்று, பிறகு குளிர்ச்சியால் மழையாக மீண்டும் பூமி மீது பொழிகிறது. இது பாலபாடம். மழை தண்ணீர் கடல்களிலிருந்து மட்டும் வருவதில்லை. நிலப் பகுதியிலுள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள்,

சாலைகளில் தேங்கியிருக்கும் நீர்களில் இருந்தும் நீராவி மேலே போகிறது. ஆனால், பூமியின் மிகப் பெரிய நீர் நிலை கடல்கள் தான். கடல் நீரிலுள்ள உப்பு, நீர் ஆவியாகும் வேகத்தை, 2 முதல், 3 சதவீதம் வரை குறைக் கிறது. இதுவும்கூட, கடல் பகுதிகளில் நிலவும் வெப்பநிலை, கடல் நீரின் வெப்பநிலை, வீசும் காற்றின் தன்மை போன்ற வேறு சில காரணிகளால் ஆவியாகும் விகிதம், வேகம் மாறுபடுகிறது.

சில கடல் பகுதிகளில் இந்த காரணிகளின் கை ஓங்கும்போது, அந்தப் பகுதி கடலில் ஆவியாதல் அதிகமாகத் தான் செய்கிறது.

இதனால், கடலின் உப்புத் தன்மை மேலும் அதிகரிக்கும். பூமி நீர் ஆவியாகி, மேகத்தில் குளிர்ந்து, மீண்டும் மழையாகும் சுழற்சியில், இயற்கை பெரும்பாலும் சமநிலையை கொண்டு வரப்பார்ப்பதால் நாம் தப்பித்து வருகிறோம்.

ஆனால், மனிதனால் உருவாக்கப்படும் பூமி வெப்பமாதல், இந்த சமநிலையை குலைக்க ஆரம்பித்துள்ளது. பொதுவாக பூமி வெப்பநிலை அதிகரித்தால் ஏற்படும் பல விளைவுகளில், கடலின் இயல்புத் தன்மை பாதிக்கப்படுவதும் ஒன்று.                                                     2  3

2016-01-02 13:07:02 by muthu

கவலையினால் ஆயுள் குறைந்துவிடாது!


அதிகம் கவலைப்படுவதால் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு, ஆயுள் குறைந்து விடாது என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பிரிட்டனில் 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் இது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் 7,19,671 பெண்களின் உடல் நிலையும், மகிழ்ச்சி குறித்த மனநிலையும் தொடர்ந்து கண் காணிக்கப் பட்டு வந்தது. அந்தப் பெண்களின் சராசரி வயது 59-ஆக இருந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் அவர்களது உடல் நலனும் அவர்களது மன நிலையும் தொடர்ந்து ஆய்வுக்கு உள்ளானது.

அவை பற்றிய ஆய்வுக் குறிப்புகள் மின்னணு முறையில் தொடர்புபடுத்தப்பட்டு வந்தது. ஆய்வு நடைபெற்ற கால அளவில் 30 ஆயிரம் பெண்கள் காலமானார்கள். இவர்களில் வயோதிகம் காரணமாக காலமானோர், புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள், இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களும் அடங்குவர்.

மரணத்துக்கு முந்தைய அவர்களுடைய உடல் நலன், அவர்களின் தினசரி வாழ்க்கை முறையையும், சராசரியான ஆரோக்கிய நிலையில் உள்ள பெண்களின் உடல் நலன் ஆகியவற்றையும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டுப் பார்த்தனர்.

நோய் பாதிப்பினால் காலமானவர்களைப் பொறுத்த வரையில், அவர்களைப் பீடித்த நோய், அவர்களுக்கு ஏற்பட்ட ஏதாவது ஒரு வகையிலான இழப்பு, உடற்பயிற்சி இல்லாதது, வாழ்க்கைத் துணை இல்லாமல் தனித்து இருப்பது போன்ற காரணங்கள் அவர்களுடைய மகிழ்ச்சியின்மைக்கு காரண மாக இருந்திருக்கிறது.

இது போன்ற காரணங்கள் இல்லாமல், பொதுவாக மகிழ்ச்சியுடன் இயல்பு வாழ்க்கை வாழ்ந்து, முதுமை காரணமாக காலமானவர்களின் மன நிலை குறித்த புள்ளிவிவரங்களும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டது. அவற்றை ஒப்பிட்டபோது, கவலையினால் ஆயுள் குறைந்ததாகவோ, கவலையின்றி மகிழ்ச்சியுடன் இருந்ததால் ஆயுள் காலம் அதிகரித்ததாகக் கூற முடியாது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்ட றிந்தனர்.

நோய் பாதிப்பு ஏற்பட்டதால் உடல் நலம் காரணமாக மட்டுமே பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் புற்றுநோய் ஆய்வுப் பிரிவு ஆதரவுடன் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்,

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையின் புற்றுநோய் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். 1996ஆம் ஆண்டு முதல் 2001 வரை ஆய்வுக்குள்படுத்தப்பட்ட பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, 2012 வரை ஆய்வு நடைபெற்றது.                10         719671               59  10                     30                                                                                                                                    1996   2001      2012

2016-01-02 13:03:36 by muthu

மங்கள்யான் எப்படி தகவல்களை, பூமிக்கு அனுப்புகிறது?

மங்கள்யானை தொடர்பு கொள்ளவும், அதற்கு கட்டளை கள் இடவும், 'இந்தியன் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்' என்ற அதிதொலைவு விண்வெளி தகவல் வலைப் பின்னலை இஸ்ரோ பயன்படுத்துகிறது. இந்த ரேடியோ சமிக்ஞை நிலையம் பெங்களூருவிலிருந்து, 40 கி.மீ., தொலைவிலுள்ள பையலாலு என்ற இடத்தில் இருக்கிறது.



இந்த நிலையத்தின், 32 மீட்டர் விட்டமுள்ள பிரம்மாண் டமான டிஷ் ஆன்டனா மூலம், செவ்வாய் கிரகத்தை வட்டமிடும் மங்கள்யானுக்கு சமிக்ஞைகள் அனுப்பவும், மங்கள்யான் திருப்பி அனுப்பும் தகவல்களை பெறவும் முடியும்.



பையலாலு நிலைய ஆன்டனாவால், பூமிக்கு மேலே உள்ள வான் வெளியில், மூன்றில் ஒரு பங்கைத்தான் கவனிக்க முடியும். எனவே இங்கிருந்து, 8 மணி நேரத்திற்கே மங்கள்யானுடன் தொடர்பிலிருக்க முடியும்.



மீதி, 16 மணி நேரத்திற்கு, அமெரிக்க விண்வெளி அமைப் பான, 'நாசா'விற்கென்று உலகெங்கும் உள்ள ஆன்டெ னாக்களை இஸ்ரோ பயன்படுத்துகிறது.



https://www.tufing.com/img-inline-share/main-qimg-f54d64edbeb3db77b0c3d67a8f1daf-783696.png

மங்கள்யான்

2016-01-02 12:59:35 by muthu
Back to Top