drop

காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது
பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார்.

( , "இடது பக்கம் சட்டை கிழிந்துள்ளது அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை போட்டுள்ளேன்" )

உடனே பத்திரிகையாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர்.

காமராஜரோ ஒன்றும் இல்லை , சும்மா தான் போட்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார்.

பத்திரிகையாளர்களோ அவரை விடவில்லை. துண்டு மாற்றி போட்டதற்கு காரணம் என்ன?

என்று துளைக்க ஆரம்பித்துள்ளனர்.
உடனே காமராஜர் ஒண்ணும் இல்லையா ,

"இடது பக்கம் சட்டை கிழிந்துள்ளது அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை போட்டுள்ளேன்" என்றாராம் ,
வேணும்ன்னா பாருங்கள் என்று துண்டை எடுத்து கிழிந்த சட்டையை காண்பித்தாராம்.

Pin drop silence....

அதைக்கண்ட பத்திரிக்கையாளர்கள்
அனைவரும் தலைகவிழ்ந்தனர்.

இப்படியும் ஒரு முதல்வர்! இவரையும்
தேர்தலில் தோற்கடித்த நன்றி கெட்ட மனிதர்கள் தாம் நாம். ".

மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள்.
நாம் அமைதி காப்போம்" இது தான் தேர்தலில் தோற்றபிறகு அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது!!

இந்த பெருந்தன்மை எத்தனை
அரசியல்வாதிகளுக்கு வரும்?
.
.

2016-05-06 10:13:28 by arul unique

Kamarajar

Kamarajar

2016-02-03 11:12:07 by Selvi

Karma Verar Kamarajar

Karma Verar Kamarajar

2016-01-28 09:00:23 by Vino

Kamaraj

Kamaraj

2016-01-23 13:44:14 by Deepa

ஒருநாள் காமராஜ் அவர்கள், சட்டமன்றத்தக்கு செல்லும்போது மேல்தளத்துக்கு செல்ல மின்தூக்கியில் (லிப்ட்)சென்றார்.

அப்போது கண்ணீருடன் மனுவை கொடுத்தார் லிப்ட்டில் பணிபுரிபவர்.வாங்கி சட்டைபையில் வைத்துக்கொண்டு என்ன..என்று கேட்டார்.

அதற்கு அவர்,ஐயா தொழில்துறையிலிருந்து அரசானை வந்திருக்கிறது, பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் மட்டுமே.. பணியில் இருப்பார்களாம்..., கவலையோடு சொன்னவரை ,நான் பார்க்கிறேன், என்று தட்டிகொடுத்துவிட்டு, சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர் கர்ஜித்தார்.

ஏழையின் வயிற்றில் அடிப்போதுபோல் அரசானை பிறப்பித்தது யார்,பொத்தானை அழுத்தினால் மேல போவதற்கும்,பொத்தானை அழுத்தினால் கீழே வருவதற்கும்,பத்தாவது வரை படிக்கனுமா, அப்படியென்றால் நான் எட்டாம்வகுப்புவரை தானேன படிச்சிருக்கேன்...எனக்கு அந்த லிப்ட துடைக்கிற வேலைகூட கிடைக்காதே...

என்று குரல் உயர்த்தியதும்
வாயடைத்து போனார்கள் அதிகாரிகள்.

தன்னை இகழ்ந்து பிறரை புகழும் குணம்,உயர்ந்த மனிதர்களிடம் மட்டுமே காணப்படும்
நாமும் முயற்ச்சிப்போமா...

Relaxplzz

2016-01-16 20:38:47 by Naveenk218

Varalatru suvadugal

Varalatru suvadugal

2016-01-12 22:13:04 by Sasi

ஒருநாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதியை மட்டுமே சோவியத் ரஷ்ய நாட்டில் தங்கள் விருந்தினராக வர.வேண்டும் என்று அழைப்பார்கள் ஆனால் அந்த மரபுகளை மீறி ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரை க்ரம்ளின் மாளிகை (ரஷ்ய அதிபர்மாளிகை) அழைத்து சிவப்புகம்பள வரவேற்புகுடுத்தது இது இந்தியாவில் வேறு எவறுக்கும் கிடைக்காத மரியாதை
இந்த பயணத்தின் போது ரஷ்யா குளிர்பிரதேசம் மேல் கோட் அணிந்துகொள்ளுங்கள் என்று பலர் வலியுறுத்தியும் எளிமையின் சிகரமான நம் தலைவர் அதை மறுத்து ஒரு துண்டை மட்டும் தோளில் போட்டுக்கொண்டு ராணுவமரியாதையை ஏற்றுக்கொண்டார் இது ரஷ்யர்களையே ஆச்சர்யபடவைத்தது

2016-01-02 19:01:52 by Sasi

பெருந்தலைவர் காமராஜர் .

2015-12-31 13:49:07 by ramesh raj

காமராஜர்

2015-12-30 15:07:40 by ramesh raj

ரேசன் அரிசியே சாப்பிட்டார் காமராஜர்
**********************************************************
வட்ட செயலாளர் ஆகி விட்டாலே, தங்கத் தட்டிலில் சாப்பிடும் காலம் இது. ஆனால் எளிமையாக வாழ்ந்த காமராஜர் உணவு பழக்க வழக்கத்திலும் எளிமையை கடைபிடித்தார்.
சாதம், ஒரு குழம்பு, கொஞ்சம் கீரை மசியல், ஒரு பொரியல் சிறிது மோர் என்ற அளவில் மிக எளிமையாக உணவு வகை இருந்தாலே காமராஜருக்குப் போதுமானது.
அவரிடம் உதவியாளராகவும் சமையல்காரராகவும் இருந்த பைரவனிடம் அவர், நாம் அனாவசியமாக செலவு செய்யக் கூடாது.
ரேசன் அரிசியைத்தான் வாங்கிச் சாப்பிட வேண்டும். சாதாரண மக்கள் எந்த உணவைச் சாப்பிட்டு வருகிறார்களோ, அதைத்தான் நாம் சாப்பிட வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தார்.
ரேசன் அரிசி என்றால், இப்போது உள்ள உயர் ரக அரிசி அல்ல.
அந்தக் காலத்தில் கொட்டை கொட்டையாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் மிக மோசமானதாகவும் ரேசன் அரிசி இருக்கும். அதை வாங்கித் தீட்டிக் கல் பொறுக்கிச் சுத்தப்படுத்தி தான் சமைக்க வேண்டும்.
அப்படிச் சமைத்தாலும் சாதம் நாற்றமெடுக்கும்.
இதனால் சாதாரண மக்களே ரேசன் அரிசியை வாங்குவதற்குத் தயங்கிக் கொண்டிருந்தனர். பரம ஏழைகளும் கூலித் தொழிலாளர்களும் தான் ரேசன் அரிசியைச் சமைத்து உண்பார்கள்.
இப்படிப்பட்ட நாற்றமெடுத்த ரேசன் அரிசியைக் கொண்டு சமைத்த சாதத்தைத்தான் காமராஜர் பல ஆண்டு காலம் முகம் சுளிக்காமல் சாப்பிட்டு வந்தார்.
ரேசன் அரிசி சாதத்தில் வரும் நாற்றத்தைச் சரிக்கட்ட சாப்பாட்டில் ஓரிரு சொட்டு நெய்யை விட்டாலே போதும் என்று யாரோ சொல்ல காமராஜர் ஐம்பது கிராம் நெய்யை வாங்கி வரச் செய்து, தினசரி இரண்டு சொட்டு நெய்யைச் சாப்பாட்டில் தெளித்துக் கொண்டு சாப்பிட்டு வந்தாராம்.
நெய் வாங்கும் போது ஐம்பது கிராமுக்கு மேல் வாங்கக் கூடாது ஒரு மாதத்திற்கு அந்த நெய்யைத்தான் செலவிட வேண்டும் என்று காமராஜர் கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தார்.

2015-12-27 14:42:59 by te ramesh raj
Back to Top

Popular Tufs

The black hole

The black hole

default thumb image

Preparations at Tiruppur for the

There is nothing like a

There is nothing like a

It takes some more time

It takes some more time

K Kamaraj Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the K Kamaraj category.