1  34  14   1   4   12   1        1                        35

தேங்காய் பர்ஃபி

சிறுவயதில் நாம் அதிகம் விரும்பி வாங்கி சாப்பிட்ட தேங்காய் பர்ஃபியை, இப்போது கடைகளுக்குச் சென்று கேட்டால் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அந்த அளவில் அது மிகவும் அரிதாகவே கிடைக்கும். ஆனால் அந்த தேங்காய் பர்ஃபியை கடைக்கு எல்லாம் செல்லாமல் வீட்டிலேயே எளிமையாக செய்து சாப்பிடலாம்.

அதிலும் மாலை வேளையில் இதனை செய்தால், வீட்டில் உள்ள குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் அல்லவா! சரி, இப்போது அந்த தேங்காய் பர்ஃபியை எப்படி வீட்டிலேயே ஈஸியாக செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப் தண்ணீர் - 1/4 கப்
நறுக்கிய முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 4 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கித் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு தட்டில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி தடவி தனியாக வைத்துக் கொள்ளவும் பின்னர் ஒரு நான்-ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும். சர்க்கரை நன்கு கரைந்து, ஓரளவு கெட்டியாக வரும் போது, அதில் துருவிய தேங்காயை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

அப்படி கிளறிவிடும் போது, நுரைக்க ஆரம்பிக்கும் தருணத்தில் முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து 3-5 நிமிடம் கிளறி, ஓரளவு கெட்டியாகும் போது அடுப்பை அணைத்து, தட்டில் அக்கலவையைக் கொட்டி பரப்பி, கத்தியால் துண்டுகளாக்கினால், தேங்காய் பர்ஃபி ரெடி!!!

2015-12-22 22:14:31 by yamuna

                        1  1    1   1  1   12   1  2  1  2       3  5

உருளைக்கிழங்கு மொச்சை வறுவல்:-

உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு ஓர் அருமையான மற்றும் வித்தியாசமான உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இந்த ரெசிபியின் ஸ்பெஷல் உருளைக்கிழங்குடன் மொச்சையை சேர்த்து வறுவல் செய்வது தான்.

இது சாம்பார் சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு மொச்சை வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து வீட்டில் முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1 (பெரியது)
மொச்சை - 1 கப் உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது

மசாலாவிற்கு...

தேங்காய் - 1/2 கப் (துருவியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு - 2 பற்கள்

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கு மற்றும் மொச்சையை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, 3 விசில் விட்டு, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

பின்னர் விசில் போனதும் குக்கரை திறந்து, நீரை முற்றிலும் வடிகட்டி, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு கத்தியால் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் மொச்சையை சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து, நன்கு நீர் வற்றும் வரை பிரட்டி இறக்கினால், உருளைக்கிழங்கு மொச்சை வறுவல் ரெடி!!!

2015-12-22 22:13:21 by yamuna

                       2   1  12  2  1   12     1     35       10                          1

பீட்ரூட் அல்வா

பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம். அதிலும் அதனை பொரியல், சாம்பார் என்று செய்து சாப்பிடாமல், அல்வா செய்தால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு பீட்ரூட் அல்வா எப்படி செய்வதென்று தெரியவில்லையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு பீட்ரூட் அல்வாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

துருவிய பீட்ரூட் - 2 கப்
கொதிக்க வைத்த பால் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பாதாம், முந்திரி - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக வதக்கி விட வேண்டும். பின்னர் அதில் பால் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் மென்மையாகும் வரை வேக வைக்கவும். பின் பால் வற்றும் வரை அடுப்பில் வைத்து, பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அப்படி கிளறி விடும் போது, கலவை அடிப்பிடிக்கும் வகையில் வரும். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி விட வேண்டும். பின் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். அதே சமயம் மற்றொரு அடுப்பில், சிறு வாணலியை வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அல்வாவில் சேர்த்து பிரட்டினால், சுவையான பீட்ரூட் அல்வா ரெடி!!!

2015-12-22 22:11:30 by yamuna

               2         12   10   2  1   3    12   12    14  14       12

செட்டிநாடு புளிக்குழம்பு

செட்டிநாடு ரெசிபிக்களில் பல உள்ளன. அதில் ஒன்றான செட்டிநாடு புளிக்குழம்பின் செய்முறையை தமிழ் போல்ட் ஸ்கை இங்கு கொடுத்துள்ளது. இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இந்த புளிக்குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இதனை 2 நாட்கள் கூட வைத்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த செட்டிநாடு புளிக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 1/2 கப் (தோலுரித்தது)
பூண்டு - 10 பல் (தோலுரித்தது)
தக்காளி - 2 (நறுக்கியது)
புளி - 1 எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வடகம் - சிறிது
சோம்பு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு புளிக்குழம்பு ரெடி!!!

2015-12-22 22:10:26 by yamuna

                     2   100   3     2  1   12   5      14        12

கடலைப்பருப்பு சட்னி

சட்னியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கடலைப்பருப்பு சட்னி. இந்த சட்னியானது தோசை, இட்லி, பஜ்ஜி, போண்டா போன்றவற்றிற்கு மிகவும் சுவையாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். அதுமட்டுமின்றி, பேச்சுலர்கள் கூட இதனை செய்து சுவைக்கலாம். சரி, இப்போது அந்த கடலைப்பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
தேங்காய் - 100 கிராம் (துருவியது)
வரமிளகாய் - 3
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைத்து, வரமிளகாய் சேர்த்து வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்த கடலைப் பருப்பு சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மிக்ஸியில் வறுத்த கடலைப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து, அதோடு துருவிய தேங்காய், புளி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும். பின்பு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றினால், கடலைப்பருப்பு சட்னி ரெடி!!!

2015-12-22 22:09:21 by yamuna

                       2  4   1   5   1    1   1   12   1    2  2                        45       56          34

தக்காளி பட்டாணி சாதம்

இதுவரை தக்காளி சாதம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த தக்காளி சாதத்துடன் பட்டாணி சேர்த்து சமைத்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் முயற்சித்துப் பாருங்களேன். இங்கு தக்காளி பட்டாணி சாதத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தக்காளி பட்டாணி சாதமானது காலையில் மட்டுமின்றி, மதிய வேளையிலும் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது தக்காளி பட்டாணி சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்
தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பட்டாணி - 5 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி, பட்டாணயை சேர்த்து 4-5 நிமிடம் பிரட்டி விட வேண்டும். பிறகு தக்காளி சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு தூவி நன்கு 5-6 நிமிடம் வதக்கி, பின் அரிசியை கழுவிப் போட்டு, அரிசி மசாலாவுடன் நன்கு ஒன்று சேர கிளறி விட வேண்டும். இறுதியில் அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கினால், தக்காளி பட்டாணி சாதம் ரெடி!!!

2015-12-22 22:08:27 by yamuna

                            1    2   1   2   1                1      2

ராம்நாடு நன்னாரி பால் சர்பத்

கொளுத்தும் கோடையில் பலரும் நன்கு குளிர்ச்சியாக ஜூஸ் குடிக்க விரும்புவோம். ஆனால் கார்பனேட்டட் பானங்களை குடித்தால், உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகும் என்று பலருக்கும் தெரிந்த ஒன்றாதலால், பலரும் அதனை தவிர்க்க ஆரம்பித்துவிட்டனர். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அருமையான ஒரு நன்னாரி பால் சர்பத் ரெசிபியைக் கொடுத்துள்ளது. இந்த நன்னாரி பால் சர்பத் ராம்நாடு பகுதியில் மிகவும் பிரபலமானது. சரி, இப்போது அந்த ராம்நாடு நன்னாரி பால் சர்பத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பால் - 1 கப் ஊற வைத்த
பாதாம் பிசின் - 2 டேபிள் ஸ்பூன்
நன்னாரி சர்பத் - 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - 2

செய்முறை:

முதலில் இரவில் படுக்கும் போது, 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசினை ஒரு பௌலில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். ஒருவேளை அதில் ஏதேனும் ப்ரௌன் நிறத்தில் ஏதேனும் இருந்தால், அதனை நீக்கிவிட்டு போட வேண்டும். மறுநாள் ஒரு டம்ளரை எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நன்னாரி சிரப் ஊற்றி, அத்துடன் ஊற வைத்துள்ள பாதாம் பிசின் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து, ஐஸ் கட்டிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். பின்பு அதில் பால் ஊற்றி, ஸ்பூன் கொண்டு நன்கு கலந்துவிட்டால், நன்னாரி பால் சர்பத் ரெடி!!!

2015-12-22 22:07:24 by yamuna

              12  3  12  14  2 12  2  14  6  10          30                       3

அரிசி தேங்காய் பாயாசம் 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பலரும் பல வகையான இனிப்புக்களை சுவைத்து மகிழ்வார்கள். அதில் ஒன்று தான் பாயாசம். அதிலும் அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் சுவையாக இருக்கும். இங்கு அந்த அரிசி தேங்காய் பாயாசத்தின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. 

தேவையான பொருட்கள்: 

துருவிய தேங்காய் - 1/2 கப் 
பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன் 
வெல்லம் - 1/2 கப் 
காய்ச்சிய பால் - 1/4 கப் 
தண்ணீர் - 2 1/2 கப் 
நெய் - 2 டீஸ்பூன் 
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன் 
முந்திரி - 6 
உலர் திராட்சை - 10 

செய்முறை: 

முதலில் வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை தட்டிப் போட்டு, லேசாக சூடேற்றி வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அரிசியை நீரில் போட்டு நன்கு கழுவி, பின்னர் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்சியில் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் தேங்காய் போட்டு, சிறிது தண்ணீர் உற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள கலவையைப் போட்டு, நெருப்பைக் குறைத்து, நன்கு கிளறி விட வேண்டும். கலவையானது ஓரளவு மென்மையாகி கெட்டியானதும், அதில் வெல்லப் பாகு சேர்த்து, 3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். அதே நேரம் மற்றொரு அடுப்பில் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து நன்கு வதக்கி விட்டு, அதனை பாயாசத்துடன் சேர்த்து இறக்கினால் அரிசி தேங்காய் பாயாசம் ரெடி!!!

2015-12-22 19:59:38 by yamuna

மல்லி சாதம் - கீற்று keetru.com

தேவையானவை:பச்சரிசி/பாஸ்மதி அரிசி............1 ஆழாக்கு

மல்லி..........................................150 கிராம் (நைசாக அரைத்து வைக்கவும்)

காய்ந்த மிளகாய்........................3

கடுகு, உ.பருப்பு............................1/2 தேக்கரண்டி

இஞ்சி............................................சின்ன துண்டு (பொடியாக நறுக்கவும்)

காரட்............................................1 ( துருவி வைக்கவும்)

முந்திரி பருப்பு...........................10

எண்ணெய்............................... 1 தேக்கரண்டி

நெய்........................................... 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை .............................1 கொத்து

உப்பு............................................. தேவையான அளவு.செய்முறை:அரிசியை நன்கு களைந்து, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் உப்பு போட்டு வேகவைக்கவும். ஆவி போன பின் ஒரு பாத்திரத்தில் போட்டு நெய் விட்டு உதிர்த்து விடவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, காய்ந்ததும், மிளகாயை இரண்டாக ஒடித்துப்போட்டு, கடுகு, உ.பருப்பு போட்டு சிவந்ததும், அதில் முந்திரி, கறிவேப்பிலை போட்டு சிவந்த பின், காரட், இஞ்சி போட்டு வதக்கவும்.பிறகு அதில சாதம் + அரைத்த மல்லி போட்டு கிளறவும். இறக்கி பரிமாறவும். துணைக்கு அப்பளம், பச்சடி, முட்டைப் பொரியல் எது வேண்டுமானாலும் சூப்பராக இருக்கும். செய்து பாருங்களேன்.

keetru.com/index.php/2014-03-08-04-41-57/2014-0...

2015-11-30 15:38:24 by muthu
Back to Top

Popular Tufs

Square Root of 729

Square Root of 729

KKR 835 150

KKR 835 150

Like A Boss

Like A Boss

Kakkhi Movie

Kakkhi Movie

Tamil Recipe Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Tamil Recipe category.