1

கோதுமை ரவை அல்வா

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை – அரை கப்

பால் – இரண்டு கப்
சீனி 1 கப்

நெய் – நான்கு தேகரண்டி

முந்திரி – பத்து

பாதாம் – பத்து

ஏலக்காய் தூள் – சிறிதளவு

செய்முறை

குக்கரில் கோதுமை ரவை மற்றும் பால், சீனி, சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கி கொள்ளவும்.

பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பாதாம் சேர்த்து பொன்னிறமாக வந்தவுடன் கோதுமை ரவை கலவையை போட்டு கிளறவும்.

பிறகு, நெய் ஊற்றி கிளறவும்.

ஒரு தட்டில் நெய் தடவி அதில் அந்த கலவையை ஊற்றி பாதாம் துருவி மேலே துவி பரிமாறவும்.

2016-01-06 22:10:37 by yamuna

     1   14   14   14  1

சீப்பு சீடை: தீபாவளி ஸ்பெஷல்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
உளுத்தம் மாவு - 1/4 கப்
கடலை மாவு - 1/4 கப்
கெட்டியான தேங்காய் பால் - 1/4 கப்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சுடுநீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும். பின்னர் அதில் தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் போதாமல் இருந்தால், சுடுநீரை கொஞ்சம் ஊற்றி பிசைந்து கொள்ளலாம். பின்பு முறுக்கு உழக்கை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சை எடுத்து பொருத்தி, பின் அதில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழிய வேண்டும். பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, பின் அதனை உருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதைப் போட்டு பொரித்து எடுத்தால், சீப்பு சீடை ரெடி!!!

2016-01-06 22:10:12 by yamuna

                           1  3  2   45  1   3   2   12  12   1   34    2   1  2                        4              10

சத்தான... பாசிப்பருப்பு பசலைக்கீரை கடைசல்

தென்னிந்தியாவில் பருப்பு மிகவும் பிரபலமானது. அதிலும் பருப்பை கடைந்து, சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிடுவது வழக்கம். அதே சமயம் பருப்புக்களுடன் காய்கறிகள் அல்லது கீரைகளை சேர்த்து சமைக்கவும் செய்வார்கள். அப்படி பாசிப்பருப்புடன் பசலைக்கீரையை சேர்த்து சமைத்து சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். பசலைக்கீரையை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! இங்கு அந்த பாசிப்பருப்பு பசலைக்கீரை கடைசலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இன்று செய்து சுவைத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்
பசலைக்கீரை - 3 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4-5 பற்கள்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 3/4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
தண்ணீர் - 2 கப்

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் தக்காளியை போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். பின்பு அதில் பாசிப்பருப்பை கழுவிப் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, குக்கரை மூடி, 4 விசில் விட்டு இறக்க வேண்டும். பின் விசில் போனதும் குக்கரை திறந்து, மத்து கொண்டு கடைந்து, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பசலைக்கீரை, தேங்காய் பால் மற்றும் கரம் மசாலா சேர்த்து வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் கீரையை நன்கு வேக வைக்க வேண்டும். கீரை நன்கு மென்மையாக வெந்ததும், குக்கரை இறக்கி சாதத்துடன் பரிமாறினால், பாசிப்பருப்பு பசலைக்கீரை கடைசல் ரெடி!!!

2016-01-06 22:09:38 by yamuna

                            10  1   2  2   1 12   1   5  12  5    2  2  14    1                                            3

மசாலா வடை குழம்பு

அனைவருக்கும் மசாலா வடை பற்றித் தெரியும். ஆனால் மசாலா வடை குழம்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், மசாலா வடையைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு அருமையான சுவையில் இருக்கும். மேலும் வித்தியாசமான குழம்பு செய்து சாப்பிட நினைப்போருக்கு மசாலா வடை குழம்பு ஏற்ற ஒன்றாக இருக்கும். இங்கு மசாலா வடை குழம்பின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை செய்து சுவைத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலா வடை - 10
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
மல்லிப் பொடி - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
துருவிய தேங்காய் - 5 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 5
இஞ்சி - சிறு துண்டு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 2
மிளகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மல்லி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு மற்றும் முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் அதில் தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி, பின் இஞ்சி சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, கிராம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும். பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். அடுத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மசாலா வடைகளைப் போட்டு, குழம்பில் வடை நன்கு ஊற்றியதும், அதனை இறக்கினால், மசால் வடை குழம்பு ரெடி!!!

2016-01-06 22:08:58 by yamuna

   2  5        1

ஆப்பம்

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 2௦௦ கிராம்

உளுத்தம் பருப்பு – 5௦ கிராம்

வெந்தயம் – கால் தேகரண்டி

உப்பு – தேவைகேற்ப

தேங்காய் பால் – ஒரு கப்

சோடா மாவு – கால் தேகரண்டி

எண்ணெய் – 1௦௦ மில்லி லிட்டர்

செய்முறை
புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊறவைத்து நன்றாக மசிய அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவை ஒரு நாள் இரவு முழுவதும் வைத்து விடவும்.

பிறகு, தேங்காய் பால், உப்பு, சோடா மாவு ஆகியவற்றை மாவுடன் சேர்க்கவும்.

வாணலியை சூடு செய்து ஒரு கரண்டி மாவை அதன் உட்புறம் ஊற்றவும்.

பின்பு, மாவு வாணலியின் ஓரத்தில் பரவும்படி வாணலியை மெதுவாக சுழற்றவும்.

ஆப்பம் நன்றாக மிருதுவாக வேகும்வரை மூடிவைக்கவும். (ஓரத்தில் தோசை போன்றும், நடுவில் இட்லி போன்று இருக்கும்.)

தேங்காய் பாலுடன் இதனை பரிமாறவும்.

2016-01-06 22:08:18 by yamuna

                     12  200  100    4                                      12   14     14

கேழ்வரகு இட்லி

இட்லி என்றால் அரிசி, உளுந்து போட்டு அரைத்து எப்பொழுதும் ஒரே மாதிரியாகத் தான் செய்கின்றோம். அதற்கு பதிலாக சற்று வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமான ஒரு இட்லியை செய்து சாப்பிட நினைத்தால் கேழ்வரகு ஸ்டப்டு இட்லியை செய்யுங்கள். இங்கு அந்த கேழ்வரகு ஸ்டப்டூ இட்லியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையானப் பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 1/2 கிலோ
உளுந்து - 200 கிராம்
கொண்டைக்கடலை - 100 கிராம்
வெல்லம் - சிறிதளவு
வரமிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்ததாக கேழ்வரகு மாவில் உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரந்துக் கொள்ளவேண்டும். பிறகு இந்த இரண்டு கலவையையும் ஒன்றாக சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முதல் நாள் இரவே செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் அதனை வேக வைத்து வடிகட்டி அத்துடன் மிளகாய், வெல்லம், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைத்து வைத்து கொள்ள வேண்டும். இறுதியாக, இட்லித் தட்டில் எண்ணெய் தடவி முதலில் கேழ்வரகு, உளுந்து மாவு கலவையை 1/2 கரண்டி விட்டு அதன் மேல் 1/4 கரண்டி கொண்டைக்கடலை கலவையை விட்டு, மீண்டும் கேழ்வரகு, உளுந்து மாவு கலவையை 1/4 கரண்டி விட்டு இட்லியை வேக வைத்து எடுத்தால் சுவையான கேழ்வரகு ஸ்டப்டு இட்லி ரெடி....

2016-01-06 22:07:38 by yamuna

                          12   2   2   4     14   1    1    1     14                          3

இனிப்பான தினை குழிப்பணியாரம்

டயட்டில் இருப்போர் காலை வேளையில் தானியங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அத்தகைய தானியங்களில் ஒன்று தான் தினை. இந்த தினையைக் கொண்டு உப்பு, பணியாரம், இட்லி என்று எது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். ஆனால் இங்கு தினையைக் கொண்டு பணியாரம் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தினை குழிப்பணியாரமானது இனிப்பானது என்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த தினை குழிப்பணியாரத்தின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

தினை - 1/2 கப்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) நாட்டுச்சர்ச்சரை - 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் தினையை நீரில் போட்டு 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து, ஓரளவு கெட்டியான பாகு தயார் செய்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தினையை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தினை பேஸ்ட்டை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, தேங்காய், வெல்லப் பாகு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கிளறி, தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் நல்லெண்ணெயை தடவி, பணியார மாவை ஊற்றி, மூடி வைத்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், இனிப்பான தினை பணியாரம் ரெடி!!!

2016-01-06 22:07:13 by yamuna

                         6  1    2  2   14  1   2   1   2     1       2   1    1                                      2         12  3

சரவண பவன் கைமா இட்லி

இரவில் செய்த இட்லி மீதம் உள்ளதா? அப்படியானால், அதனை தூக்கிப் போட வேண்டாம். மாறாக அதனை காலையில் எழுந்து சரவண பவன் ஸ்பெஷலான கைமா இட்லியை செய்யுங்கள். இந்த கைமா இட்லியானது குழந்தைகளால் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் மதிய வேளையில் சாப்பிடுவதற்கு கூட ஏற்றதாக இருக்கும். இங்கு அந்த சரவண பவன் கைமா இட்லியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

இட்லி - 6
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 2 (அரைத்தது)
பச்சை பட்டாணி - 1/4 கப்
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டீஸ்பூன்
சோம்பு பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் இட்லிகளை துண்டுகளாக்கிக் கொண்டு, வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த எண்ணெயில் இட்லிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்த தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும். அதற்குள் பட்டாணியை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வேக வைத்த பட்டாணி மற்றும் குடைமிளகாயை வாணலியில் போட்டு கிளறி, பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இறுதியில் பொரித்து வைத்துள்ள இட்லியை வாணலியில் போட்டு நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறினால், சரவண பவன் கைமா இட்லி ரெடி!!!

2016-01-06 22:06:36 by yamuna

                    14  12   14   18  100   2  12   14   12      2   1     4              68

காஞ்சிபுரம் இட்லி

இட்லியில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் காஞ்சிபுரம் இட்லி. இந்த இட்லி மிகவும் ஆரோக்கியமான, அதே சமயம் மிகுந்த சுவையுடையது. இது காஞ்சிபுரத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. இந்த இட்லியை சாம்பார், சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். இங்கு அந்த காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1/4 கப்
அரிசி - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/8 கப்
முந்திரி - 100 கிராம்
பச்சை மிளகாய - 2 (நறுக்கியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
இஞ்சி - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பபிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடலைப் பருப்பையும் தனியாக நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி, ஓரளவு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை அதனை 6-8 மணிநேரம் வெதுவெதுப்பான இடத்தில் நொதிக்க விட வேண்டும். பிறகு அதில் தயிர், முந்திரி, பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சி, மிளகு தூள், கறிவேப்பிலை, நெய், உப்பு மற்றும் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியில் அந்த மாவை இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுத்தால், காஞ்சிபுரம் இட்லி ரெடி!!!

2016-01-06 22:05:58 by yamuna

                     1   1  2   2  3  1   2   12   1    1     4

கடலைப்பருப்பு அரிசி உப்புமா

காலையில் எழுந்ததும் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? அதிலும் வித்தியாசமான சுவையில் அதே சமயம் ஆரோக்கியத்தை தரும் வகையில் என்ன சமைப்பது என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் கடலைப்பருப்பு அரிசி உப்புமாவை செய்யுங்கள். இந்த ரெசிபியை செய்வது மிகவும் ஈஸி. இப்போது அந்த கடலைப்பருப்பு அரிசி உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
வரமிளகாய் - 3
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் கடலைப்பருப்பு மற்றும் புழுங்கல் அரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இட்லி தட்டில் அரைத்து வைத்துள்ள மாவை இட்லிகளாக ஊற்றி எடுக்க வேண்டும். பிறகு அந்த இட்லியை ஒரு தட்டில் உதிர்த்துவிட்டுக் கொள்ளவும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் சீரகப் பொடியைப் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சுவையான கடலைப்பருப்பு அரிசி உப்புமா ரெடி!!!

2016-01-06 22:03:58 by yamuna
Back to Top

Popular Tufs

The images of Baal Shamin

The images of Baal Shamin

default thumb image

56 Girls

default thumb image

Rahul Gandhi pays tribute to

GL 15810 200

GL 15810 200

Tamil Recipe Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Tamil Recipe category.