5   100   corn flour  25   6              100   100                                                                                                                                    6

பெங்காலி ஸ்வீட்ஸ் என்றவுடன் நமது நினைவிற்கு முதலில் வருவது ரசகுல்லாதான். சொல்லும் போதே! நாக்கில் எச்சில் ஊற்றெடுக்கிறதா? சரி! அதன் செய்முறையை பாருங்கள்
தேவையான பொருட்கள்
பால் – 5 லிட்டர்
வினிகர் – 100 மில்லி
சோள மாவு (corn flour) – 25 கிராம்
சீனி – 6 கிலோ
தண்ணீர் – இரண்டரை லிட்டர்
செய்முறை

முதலில் பாலை நன்கு கொதி வரும் வரை காய்ச்சவும். காய்ச்சிய பாலை இறக்கி வைத்து, 100 மில்லி வினிகரை 100 மில்லி தண்ணீரில் கரைத்து பாலில் ஊற்றவும். வினிகரை அப்படியே ஊற்றினால், அதிக புளிப்பு தன்மை காரணமாக பால் திரிந்து சற்று கெட்டியாக கிடைக்கும். பனீர் தயாரிப்பதற்கு வினிகரை அப்படியே ஊற்றலாம்.

வினிகரை தண்ணீரில் கரைத்து ஊற்றினால்தான் ரசகுல்லாவிற்கு ஏற்றார்போல் சற்று மிருதுவாக கிடைக்கும். இப்போது பால் திரிந்து பஞ்சு பஞ்சாக திரண்டு வரும். சிறிது தண்ணீரையும் அதில் ஊற்றி ஒரு கரண்டியால் லேசாக கிளறிவிடவும். பால் திரிந்து தனியாகவும், தண்ணீர் தனியாகவும் இருப்பதை நாம் பார்க்கலாம்.

தண்ணீரை தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். அடுத்தடுத்த முறைக்கு பாலை திரியச் செய்ய வினிகருக்கு பதில் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். கடைகளில் இந்த புளித்த நீரைத்தான் பயன்படுத்துகின்றனர். திரிந்த பாலை ஒரு மெல்லிய துணியில் கொட்டி வடிகட்டிக் கொள்ளவும். நீர் முழுவதும் வடிவதற்காக அதனை அப்படியே கட்டி தொங்கவிடவும்.

சுமார் ஒரு மணி நேரம் சென்றபின் அந்த துணியை அவிழ்த்து பார்த்தால், திரிந்த பால் நீர் வற்றி சற்று கெட்டியாக காணப்படும். அதனை மேலும் சற்று கெட்டியாக்க அத்துடன் சோளமாவை சேர்த்து பிசையவும். இதனை நன்றாகப் பிசைந்து சற்று மிருதுவாக்கிக் கொள்ளவும்.

அத்துடன் நான் விரும்பிய வண்ணத்தினை சேர்த்து பிசைந்து கொள்ளலாம். நல்லத் தரமான வண்ணத்தை சேர்க்கவும். சுவை, மணத்திற்கு விரும்பினால் சில துளிகள் எசன்ஸ் சேர்க்கலாம். பிசையும் போது, அழுத்தி கெட்டியாக பிசைந்து விடக் கூடாது.

பிசைந்து வைத்துள்ளதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். விரும்பிய வடிவத்தில் உருட்டிக்கொள்ளலாம்.

அடுத்து பாகு காய்ச்ச வேண்டும். 6 கிலோ சீனிக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். பாகு கொதித்து வரும் போது அதில் கால் லிட்டர் பால் ஊற்றவும். தீயை குறைத்து வைக்கவும். இப்போது அழுக்கு அனைத்தும் திரண்டு மேலே மிதக்க ஆரம்பிக்கும். அவற்றை கரண்டி அல்லது சாரணியால் அரித்து எடுத்து விடவும்.

தெளிவான பாகில் மூன்றில் ஒரு பங்கினை ரசகுல்லா ஊறவைப்பதற்கு தனியாக எடுத்து விடவும். பிறகு திரிந்த பாலில் இருந்து பிரித்து எடுத்த புளித்த தண்ணீரில் இரண்டு மேசைக்கரண்டி எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மைதாவை கரைத்து பாகில் சிறிது தெளிக்கவும். இப்போது பாகு நன்கு நுரைத்து, பொங்கி வரும். அப்படி வரவில்லையெனில் மேலும் சிறிது கரைசலை தெளிக்கவும்.

நுரைத்து வரும் பாகில் உருட்டி வைத்துள்ள ரசகுல்லாக்களை போட்டு வேகவிடவும்.ரசகுல்லாக்கள் அனைத்தும் பாகில் நன்கு வேகவேண்டும். அளவில் பெரியதாகவும், மிருதுவாகவும் மாறும் வரை சாரணியால் அவ்வபோது கிளறிவிட்டு வேகவிடவும்.

பின்னர் அடுப்பில் இருந்து பாத்திரத்துடன் அப்படியே இறக்கி, பாகை அள்ளி அள்ளி ரசகுல்லாக்களின் மேல் விட்டு சற்று ஆறவிடவும். இப்படி செய்வதன் மூலம் ரசகுல்லா இன்னும் மிருதுவாக மாறும்.

அதன் பின்னர் ரசகுல்லாக்களை எடுத்து, முன்பு தனியே எடுத்து வைத்துள்ள பாகில் போட்டு ஊறவிடவும்.

ரசகுல்லாக்கள் பெரும்பாலும் வண்ணம் சேர்க்காமல் வெண்மை நிறத்தில் இருக்கின்றன. வெண்மை நிறத்திற்காக ஒரு சிட்டிகை ஹைட்ரோசில் சேர்க்கின்றார்கள். இந்த வண்ணம்தான் என்ற கட்டாயம் கிடையாது. உங்கள் விருப்பத்திற்கு சேர்த்துக் கொள்ளலாம்.
கடைகளில் செய்யும்போது பாகை இரண்டாகப்பிரித்து வேக வைப்பதற்கு ஒரு பகுதியையும், ஊற வைப்பதற்கு ஒரு பகுதியை யும் பயன்படுத்துகின்றனர். நாம் வீடுகளில் செய்யும் போது அப்படி செய்யத் தேவையில்லை என்கின்றனர். பாகைப் பிரிக்காமல் வேகவைத்து இறக்கி அதிலேயே ஊற வைத்துவிடலாம். இப்படி செய்யும் பட்சத்தில் நுரைப்பதற்காக சேர்க்கப்படும் மைதா + புளி த்த நீர் கரைசலை தவிர்த்துவிடலாம். கடைகளில் தயாரிப்பது போல் இரண்டாக பிரித்து செய்தால், வேக வைத்த பாகு வீணாகி போகும். கடைகளில் அவற்றை வேறு எதற்காவது பயன் படுத்திக் கொள்வார்கள்.
அளவுகள் சற்று அதிகமாக இருக்கும். வீடுகளில் செய்யும் போது இதனை குறைத்துக் கொள்ளலாம். அனைத்துப் பொருட்களையும் ஒரே விகிதத்தில் குறைத்துக் கொள்ளவும்.

2015-12-23 09:27:33 by yamuna

    1   750   5       20                                                                                        2

அதிரசம்

தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கிலோ
வெல்லம் - 750 கிராம்
ஏலக்காய்த்தூள் - 5 கிராம்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
நெய் - 20 மி.லி
செய்முறை:
பச்சரிசியை நன்றாக ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தவும்.

உலர்த்திய அரிசியை அரைத்து மாவை சலித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, சிறிது நீர் கலந்து அடுப்பில் வைத்துப் பாகு போல் காய்ச்சவும்.

வெல்லப்பாகு கம்பிப் பாகு போல் வரும் போது மாவைச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.

கையில் நெய் தடவி மாவைத் தொட்டால் மாவில் கையில் ஒட்டாமலிருந்தால் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

மாவின் மீது நெய் தடவி ஆறியபின்பு மூடி வைத்து விடவும்.

இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கனமாகத் தட்டவும்.

ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தட்டிய அதிரசங்களைப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சில குறிப்புகள் :-
கிளறிய மாவு கெட்டியாக இருக்கனும், தண்ணியாக இருந்தால் மீண்டும் அரிசியை ஊறவைத்து அரைத்து போடவும்.

அதிரசத்திற்க்கு ஈரமாவு தான் பயன்படுத்த வேண்டும்.

மாவை கிளறி உடனே சுடுவதை விட 2 நாள் கழித்து சுட்டால் நன்றாக இருக்கும்.

அதிரசத்தை எண்ணெயிலிருந்து பொரித்ததும் ஒரு கிண்ணத்தை வைத்து அழுத்தி எடுத்தால் எண்ணெய் வந்து விடும். ஆறியதும் மெத் மெத்தென்று இருக்கும்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

2015-12-23 09:26:38 by yamuna

    1          4   2

தேங்காய்பால் முறுக்கு

தேவையான பொருட்கள்
அரிசிமாவு – 1 கப்
தேங்காய்ப் பால் – ¼ கப்
கடலைமாவு – ¼ கப்
சீரகம் – 4 ஸ்பூன்
வெண்ணெய் – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
அரிசிமாவுடன் கடலை மாவு, தேங்காய்ப்பால், உப்பு, வெண்ணெய் சேர்த்துப் பிசைந்துக் கொள்ளவும். இந்த மாவை சிறிது எடுத்து தேன்குழல் அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து நன்றாக வேகவிட்டு எடுங்கள். எளிமையான வகையில் செய்யலாம். தேங்காய்ப்பால் உடன் சேர்ப்பதால் முறுக்கு மிகவும் டேஸ்டாக இருக்கும்.
இது ஒரு தீபாவளி ஸ்பெஷல் முறுக்கு.

2015-12-23 09:26:09 by yamuna

    2          2    14   1                                                                                           1

முதலில் உப்பு சீடை

தேவையானவை :

பச்சரிசி 2 கப்
ஒரு பிடி உளுத்த மாவு ( வறுத்து அரைத்தது )
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
எள் கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
வெண்ணை 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

முதலில் அரிசியை களைந்து உலர்த்தனும்.
இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
அரிசி காய்ந்ததும், மிக்சி இல் மாவாக அரைத்து , சலித்து வைக்கவும்.
எள்ளை பொறுக்கி வைக்கவும்
தேங்காய்யை துருவி அளந்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பேசினில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி, உப்பு , வெண்ணை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
வெண்ணை நன்கு கலந்ததும், துளி தண்ணீர் விட்டு பிசையவும் .
மாவு நல்ல கெட்டியாக இருக்கணும். (சப்பாத்தி மாவை விட கெட்டி )
ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக ‘சீடை’ யாக மொத்த மாவையும் உருட்டிவிடவும்.
அடுப்பில் எண்ணை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
‘கரகர’ ப்பான ‘உப்பு சீடை ‘ ரெடி புன்னகை

குறிப்பு: இதில் துளி கல் மண் இருந்தாலும் சீடை வெடிக்கும்.
ரொம்ப ஜாக்கிரதையாக செய்யவேண்டிய பக்ஷணம் இது புன்னகை
1 கப் உளுந்து எடுத்து நன்கு சிவக்க வறுத்து மிக்சி இல் பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். அப்படி செய்வதால் எல்லா பக்ஷணத்துக்கும் போட சௌகர்யம். மீந்து விட்டால் ‘டாங்கர்’ பச்சடி’ செயல்லாம். செய்முறை அப்புறம் சொல்கிறேன்.

2015-12-23 09:25:13 by yamuna

                                                                                               12                                                                                                                                                                75    4   50   6                                                              200

இதுவரை வெளிவராத இட்லியின் கதை!

தமிழனுக்கு சாம்பார் இட்லியும் தெரியும், குஷ்பு இட்லியும் தெரியும். ஆனால் அதன் வரலாறு தெரியாது. உளுந்து எனும் அரிய தானிய வகையின் தாயகம் இந்தியா. குறிப்பாக தமிழகத்தின் தஞ்சை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாக விளைவிக்கப்பட்டு பிறகு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலும் அதிகம் விளைவிக்கப்படும் பயறு வகையாக இருக்கிறது. உழுந்தைப் பற்றிய குறிப்புக்கள் அகநாறு, புறப்பாடல், முத்தொள்ளாயிரம் ஆகிய சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. சங்கத்தமிழ் இலக்கியங்களுக்கு இணையான மூப்பு கொண்ட பிறமொழி இந்திய இலக்கியங்கள் எதுவும் இல்லாத நிலையில், உழுந்தையும் – அரிசியையும் கொண்டு ஈரமா செய்து இட்லியை கண்டுபிடித்த பெருமை தமிழனையே சாரும். உரலில் இடித்த அரிசிமா கொண்டு, அப்பம், பனையோலை, பூவரசு இலைக் கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை ஆகியவற்றை கண்டறிந்த தமிழன், அதன் தொடர்ச்சியாகவே இட்லியைக் கண்டறிந்தான் என்கிறார் தமிழகத்தின் பண்பாட்டு அதிர்வுகளை ஆய்வு செய்துவரும் பேராசிரியர் தோ.பரமசிவன். 'இட்டரிக' என்று ஏழாம் நூற்றாண்டிலும் 'இட்டு அவி' 12 ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட நிலையில் பின்பு 'இட்டு அவி' என்ற இரட்டைச் சொல் மருவி 'இட்டலி' என்ற ஒரு சொல்லாய் திரிந்து அதன் பின்னர் 'இட்லி' என்று ஆனதாகக் தெளிவாகக் குறிப்பிடுகிறார் அவர். முதலில் உருண்டை வடிவிலான இட்டலிகளே இருந்திருக்க வேண்டும் என்றும், பின்னர் உருண்டை வடிவிலான இட்லிகளின் மேல் பகுதிகள் மென்மையாகவும், நடுப்பகுதி கடினமாகவும் இருக்கக் கண்டு, பிறகு தட்டை வடிவில் அவிக்க தமிழர்கள் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்கிறார். இட்லியின் வரலாறு தமிழர்களின் உணவுப் பண்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க, இன்று இட்லிக்கு பெயர்பெற்ற ஊராக விளங்குகிறது தமிழகத்தின் மதுரை. மதுரை இட்லியைப் போலவே, செட்டிநாடு இட்லி, தஞ்சாவூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி ஆகியன பிரபலமாக இருக்கின்றன. அதேபோல அரிசி மா இல்லாமல் ரவை மாவில் உளுந்து மா கலந்து செய்யப்படும் ரவை இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி என்று புதிது புதிதாக தமிழன் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தினாலும் அரிசிமாவும் உழுந்து மாவும் கலந்து அவிக்கப்படும் இட்லியுடன் சாம்பார், தேங்காய் சட்னி, பொடி, புதினா சட்னி, வெங்காயச் சட்னி விதவிதமான வகையில் சைடிஸ் உணவுடன் சாப்பிடும் சுவைக்கு பிட்சாவோ, பர்கரோ கூட ஈடாகமுடியாது. இட்லியில் என்ன இருக்கிறது? இப்படிப்பட்ட தமிழரின் கண்டுபிடிப்பான இட்லியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாவிட்டால் நாம் தமிழராக இருந்து என்ன பயன்? இட்லியின் அடிப்படைப் பொருட்களான அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கல்சியம், பொஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உடலில் செயலாற்றுகின்றன. மென்மையான எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது இட்லி. 75 கிராம் எடை கொண்ட 4 இட்லிகளோ அல்லது 50 கிராம் எடைகொண்ட 6 இட்லிகள் சாப்பிடுவதால் அமினோ அமிலங்களும் பன்மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயற்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன. லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது. இட்லியுடன் அவ்வப்போது நீங்கள் புதினா அல்லது கொத்தமல்லி சட்னி சேர்த்துக் கொண்டால் இதன்மூலம் லைசின் அமிலம் உடலுக்கு கிடைத்துவிடும். என்றாலும் இரவில் இட்லி எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் 200 கிராம் அளவைத் தாண்டாமல், அதாவது நான்கு இட்லிகளுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

2015-12-23 09:24:29 by yamuna

       12                                   1

அவித்த பனங்கிழங்கு

எப்படி அவிப்பது?
தேவையான பொருட்கள்;
பனங்கிழங்கு - 12
அவிக்க உப்பு ,மஞ்சள் தூள்( விருப்பப்பட்டால்) சேர்த்துக் கொள்ளலாம்.
செய்முறை:
பனங்கிழங்கின் மேல் தோலை உரித்து விட்டு கொண்டையை நறுக்கிக் கொண்டு விளிம்பையும் சிறிது நறுக்கி இட்லி சட்டியில் கீழ் பாத்திரத்தில் தாராளாமாக தண்ணீர் வைத்து மேலே தட்டில் தோலுடனோ அல்லது உரித்த கிழங்கை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கலாம்.அல்லது
குக்கரில் என்றால் தண்ணீருடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்,தேவைக்கு உப்பு சேர்த்து கிழங்கையும் போட்டு ஒரு பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கலாம்.
சுவையான பனங்கிழங்கு ரெடி.
அப்படியே இரண்டாக பிளந்து நடுவில் இருக்கும் குருத்தை எடுத்துவிட்டு நார் நீக்கி துண்டு துண்டாக ஒடித்து அப்படியே சாப்பிடலாம்.

அப்படியே கிழங்கை துருவியில் துருவி தேங்காய்த்துருவல் சீனி சேர்த்து விரவியும் சாப்பிடலாம்.
பனங்கிழங்கை வீட்டில் கரி அடுப்பு இருந்தால் தோலுடன் சுட்டு, பின் தோலெடுத்து ஒடித்தோ அல்லது சீவியோ மணக்க மணக்க சாப்பிடலாம்.

2015-12-23 09:13:36 by yamuna

                                                                                                                         10  12

சமோசா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
மைதா மாவு – ஒன்றரை கோப்பை
வெண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் – அரைத் தேக்கரண்டி
சீரகம் – அரைத் தேக்கரண்டி
உருகைக்கிழங்கு – அரைக் கிலோ
பச்சைபட்டாணி – முக்கால் கோப்பை
பொடியாக நறுக்கிய வெங்காயம் – இரண்டு
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – இரண்டு
துருவிய இஞ்சி – ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – கால்தேக்கரண்டி
கரம்மசாலா – அரைத்தேக்கரண்டி
புதினா தூள் – அரைதேக்கரண்டி
அல்லது புதினா தழை – ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி – ஒரு பிடி
உப்புத்தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – இரண்டு கோப்பை
செய்முறை
இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
உருளைகிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைக்கவும். பச்சைப்பட்டாணியை வேகவைத்த கிழங்குடன் சேர்த்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி காயவைத்து, நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியைப் போட்டு வதக்கவும்.
அதன் பிறகு எல்லாத் தூளையும் போட்டு கிளறவும்.
பின்னர் மசித்த கிழங்கு கலவையை கொட்டி, கொத்தமல்லி, புதினாவை அத்துடன் சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து, வேகவிட்டு இறக்கி நன்கு ஆறவைக்கவும்.
பிறகு மைதாமாவில் உப்புத்தூள், சூடுபடுத்திய வெண்ணெய், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து கைகளால் நன்கு பிசையவும். பிறகு தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பூரி மாவு போல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக 10 – 12 உருண்டைகள் செய்து வைக்கவும்.
பிறகு ஒரு உருண்டையை எடுத்து பூரி போல், ஆனால் மெல்லியதாக தேய்த்து, இரண்டாக வெட்டவும். பின்பு ஒரு அரை வட்டத்தில் உருளைகிழங்கு கலவையை வைத்து மூடி ஓரங்களை தண்ணீரால் தடவி அழுத்தி ஒட்டவும்.
இதைப் போலவே எல்லா உருண்டைகளையும் சமோசக்களாக செய்து வைக்கவும். பிறகு ஒரு குழிவான சட்டியில் எண்ணெய்யை ஊற்றி, நன்கு காய வைத்து, பிறகு அடுப்பின் அனலை பாதியாக குறைத்து வைத்து சமோசாக்களை இரண்டு அல்லது மூன்றாக போடவும்.
அவை பொன்னிறமாக வேகும் வரை வேகவிட்டு, திருப்பிப்போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும். பிறகு மீண்டும் அனலைக் கூட்டி, பின்பு குறைத்து மேற்கூறிய முறையில் எல்லாவற்றையும் பொரித்து எடுக்கவும்.
சுவையான சமோசா தயார். குறைந்தது இருபது சமோசாக்களை இந்த அளவில் செய்யலாம். இதனுடன் இனிப்பு, காரம் கலந்த புளி சட்னி அல்லது புதினா கொத்தமல்லி சட்னியை பக்க உணவாக வைத்து சூடாக பரிமாறவும்.

2015-12-23 09:12:48 by yamuna

        1    4  1  2   1 1 2                               5

மொறு மொறுப்பான வெங்காய பக்கோடா

தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்
பெரிய வெங்காயம் – 4
சீரகம் – 1 / 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் – 1 1 /2 தேக்கரண்டி
ஆப்ப சோடா – அரை சிட்டிகை
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலை மாவுடன் சீரகம், மிளகாய்த்தூள், ஆப்ப சோடா,உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தை விட கெட்டியாக
பிசைந்து வைக்கவும்
வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்
5 நிமிடங்கள் கழித்து வெங்காயத்தை பிழிந்து எடுத்து மாவுடன் சேர்த்து பிசறி வைக்கவும்.
எண்ணெயை நன்கு காய வைத்து சிறிது சிறிதாக உதிர்த்து விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.

2015-12-23 09:12:12 by yamuna

North Indian food    1   1   10  10  10

North Indian food

பாசந்தி தேவையான பொருட்கள்

பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 1 கப்
பாதாம் – 10
பிஸ்தா – 10
முந்திரி – 10
குங்குமப் பூ – சிறிதளவு

பாசந்தி செய்முறை

பாலை அடுப்பில் வைத்து, கை விடாமல் நன்கு கிளறிக் கொண்டே வரவும். ஏடு வர ஆரம்பிக்கும் போது சர்க்கரையைப் போட்டு நன்கு கிளறவும். சர்க்கரை முழுவதும் நன்றாகக் கரைந்து, பால் கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விட்டு, ஒரு பரிமாறும் பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். பாதாம், பிஸ்தா, முந்திரியைப் பொடிப் பொடியாக நறுக்கவும். பரிமாறும் சமயம் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து பருப்புகள் மற்றும் குங்குமப் பூ தூவி பரிமாறவும்

2015-12-23 09:11:43 by yamuna

நேந்திரம் பழம் அப்பம்

தேவையான பொருட்கள்

பழுத்த நேந்திரம் பழம் – இரண்டு

மைதா – இரண்டு கப்

அரிசி மாவு – இரண்டு டீஸ்பூன்

சர்க்கரை – நான்கு டேபிள்ஸ்பூன்

பால் – சிறிதளவு

எண்ணெய் – தேவைகேற்ப

ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

செய்முறை

பாலில் சர்க்கரை, மைதா மாவு, அரிசி மாவு, ஏலக்காய் தூள் போட்டு கலக்கவும்.

நேந்திரம் பழத்தை நன்றாக பிசைந்து அதில் சேர்க்கவும்.

கலவையை நன்றாக கலக்கி கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு கரண்டியாக விடவும்.

உப்பி வந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.

2015-12-23 09:11:24 by yamuna
Back to Top

Popular Tufs

Funny Red Panda

Funny Red Panda

Chocolate

Chocolate

Stars celebrating birthday on June

Stars celebrating birthday on June

Surya Pratap Shahi of BJP

Surya Pratap Shahi of BJP

Tamil Recipe Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Tamil Recipe category.