6 நாட்களில் ரூ.100 கோடி வசூல்: 'தெறி'

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'தெறி' திரைப்படம் 6 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா, இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'தெறி'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்திருக்கிறார்.

ஏப்ரல் 14ம் தேதி வெளியான இப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. செங்கல்பட்டு விநியோக ஏரியா பிரச்சினையால் பல்வேறு திரையரங்குகளில் இப்படம் வெளியாகவில்லை. முதல் நாள் மட்டும் தமிழகத்தில் 13 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

இந்நிலையில், இப்படம் 6 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை தொட்டு இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'தெறி'யும் 100 கோடி வசூலைத் தொட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வட அமெரிக்கா மற்றும் கனடாவில் வசூலில் 1 மில்லியனை கடந்து சாதனை படைத்திருக்கிறது 'தெறி'.

'தெறி' படத்தைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு மே முதல் வாரம் தொடங்க இருக்கிறது.

--http://tamil.thehindu.com--

2016-04-23 12:03:14 by sekar

Director atlee with his wife priya

Director atlee with his wife priya

2016-01-12 19:42:54 by Sasi

Director Atlee wedding photo

Director Atlee wedding photo

2016-01-11 09:03:54 by yamuna

Snap of Ilayathalapathy  Atlee playing Badminton  VJ59

Snap of Ilayathalapathy & Atlee playing Badminton !! @VJ59

2015-11-22 20:56:34 by Sasi

Atlee

Atlee

2015-11-16 19:37:13 by yamuna

Thala Deepavali for Atlee and Priya

Thala Deepavali for Atlee and Priya

2015-11-12 20:09:31 by yamuna

Thala Deepavali for Atlee and Priya

Thala Deepavali for Atlee and Priya

2015-11-12 20:09:08 by yamuna
Back to Top

Popular Tufs

The Worlds Most Influential Voices

The Worlds Most Influential Voices

Actor Vikrams New Look

Actor Vikrams New Look

Related Tuf

Related Tuf

Interesting imagination if Whatsapp existed

Interesting imagination if Whatsapp existed

Atlee Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Atlee category.