250  2

பிஸ்தா பர்பி

தேவையான பொருட்கள்:

பால் – நான்கு லிட்டர்
சர்க்கரை – ஒண்ணேகால் கிலோ
பிஸ்தா – 250 கிராம்
பிஸ்தா கலர் – 2 சொட்டுக்கள்

செய்முறை:

பாலை அடிகனமான பாத்திரம் அல்லது வாணலியில் ஊற்றி சுண்டக் காய்ச்சவும்.

கோவா பதத்திற்கு பால் சுண்டியதும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

பிஸ்தா பருப்பை பொடியாக துருவவும்.

துருவிய பிஸ்தா எசன்ஸை கோவாவுடன் சேர்த்துக் கிளறி ஒரு தட்டில் கொட்டி பரப்பவும்.

ஆறியவுடன் வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போடலாம்.

2016-02-07 11:59:42 by Sasi

                          12    3   1   5   1    1     1   10  810  2   1   12

கிராமத்து மீன் குழம்பு

வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் அந்த மீனை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, நம் கிராமத்து ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் கிராமத்து மீன் குழம்பின் சுவையே தனி தான். இங்கு கிராம பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த குழம்பில் உங்களுக்கு பிடித்த எந்த மீனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மீன் - 1/2 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்)
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

தேங்காய் - 1 கப் (துருவியது)
சின்ன வெங்காயம் - 10
வறுத்து அரைப்பதற்கு...
வரமிளகாய் - 8-10
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக பேஸ்ட் செய்து கொள்ளவும்.

பின் அதில் தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த பேஸ்ட் மற்றும் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரியும் போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, மீன் நன்கு வெந்து எண்ணெய் பிரியும் போது இறக்கினால், சுவையான கிராமத்து மீன் குழம்பு ரெடி!!!

2016-02-04 09:21:27 by Sasi

   1015  12    1   1   1   14   14                        5     1

வெண்டைக்காய் சிப்ஸ்

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 10-15
குடைமிளகாய் - 1/2 கப் (நீளமாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
அரிசி மாவு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, குடைமிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து இறக்கினால், வெண்டைக்காய் சிப்ஸ் ரெடி!!!

2016-01-23 14:55:35 by Sasi

மட்டன் சேமியா

தேவையான பொருட்கள்:

சேமியா - 1 பாக்கெட்மட்டன்(கொத்தியது) - 150 கிராம்தக்காளி - 2 (சிறியது)புதினா - 7, 8 இலைகள்கொத்தமல்லிதழை - சிறிதளவுஇஞ்சி - 1/2 டீ ஸ்பூன்பூண்டு - 1/2 டீ ஸ்பூன்தனியா தூள் - 1 டீ ஸ்பூன்மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்கேசரி பவுடர் - சிறிதளவுநெய் - 50 கிராம்எண்ணெய் - 1 ஸ்பூன்வெங்காயம் - 1பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 1கரம் மசாலா பவுடர் (அ) சிக்கன் மசாலா - 1/2 டீ ஸ்பூன்உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.புதினா கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.கறியை தண்­ணீரில் சுத்தம் செய்து வைக்கவும்.கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.பின் வெங்காயம் சேர்த்து சிவக்க தாளிக்கவும்.பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.பச்சை வாசனை போனவுடன் கறி, தனியாதூள், மிளகாய் தூள், கேசரி பவுடர், கரம் மசாலா பவுடர் போட்டு வதக்கவும்.2 கிளாஸ் தண்ணீ­ர் ஊற்றி கொதிக்கவிடவும். உப்பு சேர்க்கவும். மேலும் 1 கிளாஸ் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் ஒவ்வொரு சேமியா சீக்கிரம் வெந்துவிடும் ஆனால் சில சேமியாவிற்கு நிறைய தண்­ணீர் தேவைப்படும்.தண்ணீ­ர் வற்றியதும் மூடி போட்டு மேலே கனமான சாமான் வைத்து சிம்மில் வைக்கவும். 5 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

2016-01-12 20:44:21 by thulasi

ஜிஞ்சர் சிக்கன் கிரேவி

தேவையான பொருட்கள்:

கோழி – அரை கிலோஎண்ணெய் – தேவையான அளவுமிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்இஞ்சி – 2 துண்டுபூண்டு – 7 பல்மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்உப்பு – தேவையான அளவுகறிவேப்பிலை – சிறிதளவுபட்டை – 1லவங்கம் – சிறிதளவுகிராம்பு – 2இலை – 2

செய்முறை:

முதலில் சிக்கனை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.பட்டை, லவங்கம், கிராம்பு, இலை இவை எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.அதன் பிறகு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதில் சிக்கனைப் போட்டு நன்றாக கிளறி வைத்து கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள பொடியையும் போட்டு குக்கரில் இரண்டு விசில் வரும்வரை மூடி வைக்கவும்.பின்பு சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வரும் வரை கிளறவும்.கடைசியில் கறிவேப்பிலையை போட்டு இறக்கவும்.

2016-01-12 20:43:10 by thulasi

     2    4   4

பாம்பே சாம்பார்

தேவையானவை:

வெங்காயம், தக்காளி – தலா ஒன்று,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – சிறு துண்டு,
பூண்டு – 4 பல்,
கடலை மாவு – 4 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், கடுகு – தாளிக்க தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும், இஞ்சி, பூண்டு இரண்டையும் தோல் நீக்கி, நசுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு தாளித்து… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, உப்பு போட்டுக் கிளறவும். கடலை மாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து இதில் ஊற்றவும். நன்கு கொதி வந்த பின்பு நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கினால்… இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ள ஏற்ற சூப்பர் சைட் டிஷ் ரெடி

2016-01-12 19:43:18 by Sasi

   4  4  1  2  3    1

பிரெட் பனீர் பணியாரம்

என்னென்ன தேவை?

பிரெட் - 4 ஸ்லைஸ்,
பனீர் - 4 துண்டு,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
தேங்காய் - 3 துண்டு,
கறிவேப்பிலை - சிறிது,
அரிசி மாவு - 1 கப்,
எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

பிரெட், பனீரைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அதை பிரெட்-பனீர் கலவையுடன் சேர்க்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்க்கவும். இவை அனைத்தையும் அரிசி மாவுடன் சேர்த்து மாவாகக் கரைக்கவும். குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி சிவக்க வைத்து எடுக்கவும்.

2016-01-09 20:18:05 by yamuna

   500     50      25              20

மல்லி வடை !

என்னென்ன தேவை?

கடலை மாவு - 500 கிராம்,
பொடியாக உடைத்த முந்திரி,
பிஸ்தா, பாதாம் - தலா 50 கிராம்,
மிகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - தேவையான அளவு,
நெய் - 25 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?

எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, லேசாகத் தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, இந்தக் கலவையை 20 நிமிடங்களுக்கு வேக விடவும். நன்கு ஆறியதும், விருப்பமான வடிவங்களில் வெட்டி, சூடான எண்ணெயில் மொறு மொறுப்பாகப் பொரித்தெடுக்கவும். புளிப்புச் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன், சூடாகப் பரிமாறவும்.

2016-01-09 20:11:47 by yamuna

படியுங்கள் : அம்மா/மனைவி யிடம் சொல்லுங்கள் : பின்பற்றுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கையை கையாளுங்கள்:

*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால்
கையில் சிறிதளவு உப்பைத்
தடவிக் கொண்டால் கையில்
சப்பாத்தி மாவு ஒட்டாது.

*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில்
பாத்திரங்களை கழுவினால்
பாத்திரங்கள் பளபளப்பாக
இருக்கும்.

*அரிசி மற்றும் காய்கறிகள்
கழுவிய தண்ணீரை வீணாக்காமல்
செடிகளுக்கு ஊற்றினால்
செடிகள் செழிப்பாக இருக்கும்.

*வெயில் காலத்தில் பெருங்காயம்
கட்டியாகி விடும்.
அப்படி ஆகாமலிருக்க
பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல்
பெருங்காய டப்பாவில் போட்டால்
பஞ்சு போல் மிருதுவாக
இருக்கும்.

*ரவா,மைதா உள்ள டப்பாவில்
பூச்சி, புழுக்கள் வராமல்
இருப்பதற்கு கொஞ்சம்
வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி,
புழுக்கள் வராது.
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல்
இருக்க இஞ்சியின்
தோலை சீவி விட்டு கொஞ்சம்
தட்டி தயிரில் போட்டால்
புளிக்கவே புளிக்காது.

*காய்கறிகளை வேகவைக்கும்போது
அதிக தண்ணீர் வைத்து வேக
வைக்க கூடாது. ஏன் என்றால்
காய்கறிகளில் உள்ள வைட்டமின்
சத்துகள் போய்விடும். அதில்
உள்ள மனமும் போய்விடும்.
காய்ந்த
மிளகாயை வறுக்கும்போது நெடி வரும்.
அவை வராமல்
இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால்
நெடி வராது.

*பச்சை மிளகாயை காம்புடன்
வைக்காமல்
காம்பை எடுத்து விட்டு நிழலான
இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

*நெய் ப்ரெஷ்ஷாக
இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால்
ப்ரெஷ்ஷாக இருக்கும்.

*காபி டிகாஷன்
போடுவதற்கு முன்
சுடு தண்ணீரில் டிகாஷன்
பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன்
போட்டால் சீக்கிரம் காப்பித்தூள்
இறங்கிவிடும்.

*சீடை செய்யும்போது அது வெடிக்காமல்
இருப்பதற்காக சீடையை ஊசியால்
குத்திய பிறகு எண்ணெய்யில்
போட்டால் வெடிக்காது.

*சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும்
கட்டையில் முதலில்
உருண்டையாக
போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக
மடித்து உருட்டி போட்டால்
சப்பாத்தி மிருதுவாக
இருக்கும்.

*முட்டைகோசில் உள்ள
தண்டை வீணாக்காமல் சாம்பாரில்
போட்டு சாப்பிட்டால் மிகவும்
சுவையாக இருக்கும்.
கொழுக்கட்டை மாவு பிசையும்
போது ஒரு கரண்டி பால்
சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால்
விரிந்து போகாமல் இருக்கும்.

*எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில்
வைக்கும்போது உப்பைத்
துணியில் முடிந்து வைத்தால்
காரல் வாடை வராது.
இட்லி சாம்பாரில் கடைசியாக
மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்,
கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில்
போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில்
அரைத்து சாம்பாரில் போட்டால்
கூடுதல் சுவையாக இருக்கும்.

*சமையலில் உப்பு அதிகமாக
போய்விட்டால்
உருளைகிழங்கை அதில்
அறிந்து போட்டால்
உப்பை எடுத்துவிடும்.

*தோசை சுடும்போது தோசைக்கல்லில்
மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல்
இருந்தால் அதற்கு கொஞ்சம்
புளியை ஒரு வெள்ளைத்துணியில்
கட்டி, அதை எண்ணெய்யில்
தொட்டு கல்லில்
தேய்த்துவிட்டு தோசை சுட்டால்
நன்றாக வரும்.

2016-01-08 08:48:41 by yamuna

   2 12    12  12    1  50  12

தேங்காய்ப்பால் தேன்குழல் !!

என்னென்ன தேவை?

பச்சரிசி 2 1/2 கப்,
முழு வெள்ளை உளுத்தம் பருப்பு 1/2 கப்,
தேங்காய்ப்பால் 1/2 கப்,
உப்பு சுவைக்கேற்ப,
சீரகம் 1 டீஸ்பூன்,
வெண்ணெய் 50 கிராம்,
பெருங்காயம் 1/2 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் பொரிக்க.
எப்படிச் செய்வது?

அரிசியையும் பருப்பையும் மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். ஆறியதும், சலித்து, எல்லா பொருட்களையும் சேர்த்து, தேங்காய்ப்பாலை சிறிது சிறிதாக விட்டு நன்றாக கட்டியில்லாமல் கெட்டியாகப் பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு, தேங்காய் எண்ணெயில் பிழியவும். இருபுறமும் திருப்பிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

2016-01-07 22:12:21 by yamuna
Back to Top

Popular Tufs

Jayalalitha to Undertake Aerial survey

Jayalalitha to Undertake Aerial survey

MI 1393 150

MI 1393 150

Uri Attack Probe Soldiers were

Uri Attack Probe Soldiers were

True love is like a

True love is like a

Samayal Kurippugal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Samayal Kurippugal category.