HOT

Hcl   11

Hcl ல் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் 11ஏக்கர் நிலம் வாங்கி விடுமுறை நாட்களில் விவசாயம் செய்கிறார்கள் நாமும் வாழ்த்துவோமே பிரண்ட்ஸ்

2016-12-20 18:03:22 by te ramesh raj
HOT

  7                              100    40

டைம் பத்திரிகையின் பட்டியலில் 7 இந்தியர்கள்
உலகின் செல்வாக்கு மிக்கவர் களின் பட்டியலை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஏழு இந்தியர்கள் உள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீரர் சானியா மிர்சா, நடிகை பிரியங்கா சோப்ரா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, சுற்றுச் சூழல் ஆர்வலர் சுனிதா நரைன் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.
ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டியன் லகார்ட், ஆஸ்கார் விருதினை வென்ற டி காப்ரியோ ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.
இந்த பட்டியலில் பிரதமர் மோடியும் பரிசீலனை செய்யப்பட்டார். ஆனால் முதல் 100 இடங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த வருடம் இந்த பட்டியலில் மோடி இருந்தார். பட்டியலில் 40 பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.
விளாதிமிர் புடின், ஹிலாரி கிளிண்டன், பாரக் ஒபாமா, டொனால்ட் டரம்ப், ஜான் கெரி, டிம் குக், மார்க் ஸூகர்பெர்க் உள்ளிட்ட பலரும் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

2016-09-08 10:12:46 by arul unique
HOT

நம்மாழ்வார் விழுப்புரத்தில் உள்ள சிறு கிராமத்தில், ஒரு விவசாயிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த விவசாயி, “ ஐயா.. இந்த பலா மரம் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக இருக்கு... ஆனால், இது நாள் வரை ஒரு பழம் கூட தரல.. இந்த மரத்தின் நிழலால், பயிர்களும் வளர்வதில்லை... அதான், வெட்டிடலாம்னு இருக்கேன்” என்கிறார் ..
“பறவையெல்லால் கூடு கட்டி இருக்கே...?” என்று உடைந்த குரலில் கேட்கிறார் நம்மாழ்வார்.
“இல்லைங்கய்யா... நமக்கு எந்த பயனும் இந்த மரத்தால இல்லை...”
இதை கேட்டவுடன் ஓடி சென்று, நம்மாழ்வார் மரத்தை கட்டிப்பிடித்து கொள்கிறார்... ஓவென்று அழுகிறார்... பின்பு மரத்திடம், “உன்னை பிரயோஜனம் இல்லாதவன்னு சொல்றானே.. அவனுக்கு நீ ஏன் பழம் தர மாட்டேங்கிற...?” என்று மரத்துடன் உணர்வுப்பூர்வமான, ஒரு நீண்ட உரையாடல் நடத்துகிறார். இதை பார்த்த விவசாயியின் மனம் மாறுகிறது. மரத்தை வெட்ட வேண்டாம் என்று முடிவு செய்கிறார்.
ஆனால், இத்துடன் இது முடியவில்லை... ஓராண்டுக்கு பிறகு, அந்த விவசாயி ஒரு பெரிய பலாப்பழத்துடன் திருச்சி மாவட்ட திருவானைக்காவலில் இருந்த நம்மாழ்வாரை சந்திக்க வருகிறார். “அய்யா... அந்த மரத்துல காய்ச்ச பழம்யா...” என்று உச்சகட்ட சந்தோஷத்தில் அழுது கொண்டே பழத்தை கொடுக்கிறார்.

# ஆம்..இயற்கையோடு நாம் பேசலாம்...
மனிதர்களை விட மரங்கள் நம்மை புரிந்து கொள்ளும்..!

2016-08-18 10:45:56 by Vishnu

இந்த காலத்தில் இப்படியா

2016-05-30 07:44:44 by Vaishu

                               2016 2017  25     25  12    13

'கிண்டலடித்த' நாடுகளுக்கு, இதோ இந்தியாவின் 'பதிலடி'..!!
"ராக்கெட் பாகங்களை சைக்கிள்லயும், மாட்டு வண்டியிலயும் வச்சி தள்ளிட்டு போன நாடு தானே இந்தியா..!?" என்று நம் நாட்டின் வளர்ச்சி காலத்தை கேலி செய்த, கிண்டலடித்த நாடுகளுக்கு, இதோ 'நம் பொன்னான காலம்' கொடுக்கும் பதிலடி..!
சூப்பர் பவர் நாடுகள் தொடங்கி குட்டி நாடுகள் வரை, இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டு நாளுக்கு நாள் வியந்து கொண்டே இருக்கிறது என்பது தான் நிதர்சனம், முக்கியமாக விண்வெளி துறை வளர்ச்சியை கண்டு வாய் பிளக்கிறது என்றே கூறலாம். அதற்கு மேலுமொரு எடுத்துகாட்டு தான் இது..!
அந்நிய நாட்டு செயற்கைகோள் : 2016 - 2017 என்ற காலக்கட்டத்திற்குள் மொத்தம் 25 அந்நியநாட்டு செயற்கைகோள்களை, இந்தியா விண்ணில் செலுத்த உதவ இருக்கிறது.

மொத்தம் : அந்த 25 செயற்கை கோள்களில் 12 செயற்கை கோள்கள் அமெரிக்காவிற்கு சொந்தமானது என்பதும், மீதமுள்ள 13 செயற்கை கோள்களும் ஜெர்மனி, கனடா, அல்ஜீரியா, ஜப்பான் , இந்தோனேஷியா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளை சேர்ந்தவைகளாகும்.

2016-05-11 18:07:14 by arul unique
HOT

                                                                                                        11   13     21

அவனுக்கு வெங்கட்ராம் என்று பெயர் வைத்தார்கள். ஆனால், எல்லோரும் ராமன் என்றே அழைத்தார்கள். ராமன் பிறந்தது திருச்சியில் இருக்கும் திருவானைக்காவல். அப்பாவின் பெயர், சந்திரசேகர். அவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியர். அம்மா, சப்தரிஷி பார்வதி. ராமனையும் சேர்த்து வீட்டில் ஐந்து குழந்தைகள். அதில் ராமன் இரண்டாவது பிள்ளை.

ராமனுக்கு மூன்று வயதாக இருக்கும்போது அம்மாவோடு அவர்கள் விசாகப்பட்டினத்துக்கு மாறினார்கள். மற்ற பிள்ளைகள்போல் இருக்காமல், ராமன் எப்போதும் அம்மாவோடு ஒட்டிக்கொண்டு, ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு நச்சரிப்பான்.
ஒளி மற்றும் ஒலி ஆகியன பற்றியே திரும்பத் திரும்ப அவனது கவனம் சுழன்றது.

விசாகப்பட்டினத்தில் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போது என்ன செய்தான் தெரியுமா? நல்லெண்ணெய், கடலை எண்ணெய், மண்ணெண்ணெய் என விதவிதமான எண்ணெய்களை வாங்கிவந்து அவற்றில் ஏற்றும் விளக்கின் சுடரில் வித்தியாசம் இருக்குமா என்று ஆராய்ச்சி செய்தான்.

அம்மா ஆடிப்போனார். ''டேய் நெருப்புடா'' என்று பதறினார். அதற்கு அவன் கவலைப்பட்டால்தானே!
அடிக்கடி முகம் பார்க்கும் கண்ணாடி காணாமல் போய்விடும். எங்கே எனத் தேடினால், தோட்டத்தில் அல்லது மொட்டை மாடியில் சூரிய ஒளியைக் கண்ணாடியில் எதிரொளிக்கவைத்துப் பல வகை அறிவியல் விளையாட்டுகளை ராமன் விளையாடிக்கொண்டு இருப்பான். எப்போதும் அவனைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும்.

ஒரு நாள் சாதாரணக் கண்ணாடி மற்றும் ரசம் பூசப்பட்ட முகம் பார்க்கும் கண்ணாடி ஆகிய இரண்டையும் அடுத்தடுத்து வைத்து ஒளி எதிரொளிப்பு, ஒளி ஊடுருவல், இரண்டையும் ஒப்பிட்டு விளையாடினான். அப்போது முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்துவிட்டான். அம்மா கடுமையாகத் திட்டினார்.
'இனி எந்தப் பொருளையும் தொடக் கூடாது’ என்று வீட்டில் உத்தரவுபோட்டார்கள். ஆனால், சும்மா விடுவானா ராமன்? அன்று மாலையே மொட்டை மாடியில் அதேபோல் அவனைச் சுற்றிலும் கூட்டம். மாலை நேரச் சூரிய ஒளியில் கை, கால்களை அசைத்து விதவிதமான நிழல்களைத் தோற்றுவித்தான். அடுத்து, ஒளி பற்றிய ஆராய்ச்சி அங்கே நடந்துகொண்டு இருந்தது. 'மதியம் நிழல்’ என்பான் ராமன். உடனே எல்லோரும் 'குட்டை’ என்பார்கள். யாராவது மாற்றிச் சொன்னால் அவுட். 'காலை நிழல்’ என்றால், 'மேற்கு’. 'மாலை நிழல்’ என்றால், 'கிழக்கு’ என நிழல் விழும் திசையைச் சொல்ல வேண்டும். இப்படி விளையாட்டும் அறிவியலுமாக மிளிர்ந்தான் ராமன்.

அவனது அறிவுப் பசிக்கு தீனிபோடுவது யானைக்குத் தீனி போடுவதைவிடவும் கஷ்டமாக இருந்தது. அப்பா, சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் பேராசிரியர் ஆனார். மிக வேகமாக பள்ளிப் படிப்பைப் பத்தே வயதில் முடித்தான் ராமன். இதற்கே அசந்துவிட்டால் எப்படி?
11 வயதில் கல்லூரி சென்ற ராமன், 13 வயதில் இயற்பியலில், பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனாகத் தேறித் தங்கப்பதக்கம் பெற்றான். அவனோடு படித்த (21 வயது தாண்டிய) 'அண்ணன்கள்’ எல்லாம் உறைந்துபோனார்கள்.

எதிர்காலத்தில் சர்.சிவி.ராமனாக இந்தியாவுக்கான முதல் அறிவியல் நோபல் பரிசைத் தட்டிவருவதற்கான அனைத்து அம்சங்களோடும் விளங்கினான் ராமன்.

2016-05-05 09:43:30 by arul unique

  5 2

வெனிசுலா நாட்டில் இனி வாரம் 5 நாட்கள் விடுமுறை.. 2 நாட்கள் வேலை பார்த்தால் போதும்!

2016-04-28 11:44:35 by arul unique

Tamilnadu

Tamilnadu cricketers...

2016-04-17 20:54:00 by Sanju

News

News

2016-04-01 15:45:01 by sundu
Back to Top

Popular Tufs

default thumb image

Related Tuf

Idea Vodafone India Announce Merger

Idea Vodafone India Announce Merger

IND 593 150

IND 593 150

Highlights Sri Lanka v

Highlights Sri Lanka v

Swarasyamana Seithigal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Swarasyamana Seithigal category.