சத்ரபதி சிவாஜியைக் கொண்டாடுவது தமிழனுக்கு அழகல்லவென்று தூண்டி விடும் ஆட்களும், தமிழ், தமிழன்னு பேசுற ஆனியன்ஸ் எத்தனை பேர் இன்னிக்கு தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரைக் கொண்டாடினார்கள்?

ஓ... இன்னிக்குத் தான் தமிழ்த் தாத்தா பிறந்த நாளா? அவர் எத்தனைக் கவிதை எழுதியிருக்கார்? நாவல் எழுதியிருக்கார் என்று யோசிக்கும் அளவிற்கே தமிழகத் தமிழ் ஊனர்வாளர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியம் என்று அரசியல் செய்யும் அறிவை கெடுத்துக் கொண்டவர்கள் எத்தனை பேர் இன்றைக்கு தமிழ்த்தாத்தாவின் நினைவாக விழா எடுத்துக் கொண்டாடினார்கள்?

ஒன்னு மட்டும் புரிஞ்சுக்குங்க... இவனுகளுக்குத் தமிழ் அறிவும் கிடையாது. தமிழர்கள் மீதும் அக்கறை கிடையாது. பிரிவினையைத் தூண்ட காசு வாங்கிக் கொண்டு குரைப்பவர்கள்.
இவனுக பின்னாடி போய் உங்களையும் கெடுத்துக்கிட்டு நாட்டையும் கெடுத்துடாதீங்க!
- ஆனந்தன் அமிர்தன்

2018-02-20 08:39:57 by Vaishu

வாங்க சார்! என்ன வேணும் ?

ஃபிரிட்ஜ் வேணும்

என்ன ரேட்ல சார் வேணும் ?

12 ல இருந்து 15 ஆயிரத்தில்

இந்தா இருக்கு பாருங்க சார்

இதையே எடுத்துக்கிறேன்... ஆனா என்கிட்டே 1300 ரூபாய்தான் இருக்கு.

பரவாயில்ல சார்! இன்ஸ்டால் மெண்ட்ல கட்டலாம் சார். நீங்க என்ன வேலை பார்க்கிறிங்க?

இப்போதைக்கு வேலை இல்லை. வேலை தேடிகிட்டு இருக்கேன். ஆனா அடுத்த மாதம் ஃபுல்லா செட்டில் பண்ணிருவேன்.

என்ன சார் நீங்க! பணமும் இல்லை, வேலையும் இல்லை, உங்களை நம்பி எப்படி சார் கொடுக்கிறது.

சார் எங்க வீட்டில 6 பேர் இருக்கோம்.
நான் இருக்கிறது ஆர் கே நகர் தொகுதி.

என்னாது! ஆர் கே நகர் தொகுதியா! இதை வந்தவுடனே சொல்லக்கூடாதா சார்... முதல்ல உக்காருங்க சார்!

ஃபிரிட்ஜ் மட்டும் போதுமா... இல்லை
வேற ஏதாவது வேணுமா சார்

இப்போதைக்கு இது போதுங்க... அடுத்து பொது தேர்தல் வரும்போது...

ஓ கே சார்!
டேய் தம்பி... சாருக்கு கூல்ட்ரிங்ஸ் கொண்டு வா

2017-11-28 11:20:06 by SekarGV

Think and vote in next election

Think and vote in next election

2017-11-25 10:49:12 by SekarGV
HOT

காமராஜர் மறைவையொட்டி துக்ளக் இதழில் ஆசிரியர் சோ அவர்கள் எழுதிய தலையங்கம் !!

இன்றும் இது பொருந்தும்.

பெருந்தலைவர் திரு. காமராஜர் மரணத்தின் போது அவர் எழுதிய இரங்கல் கட்டுரை இதோ!!!
''இனிமேல் என்ன இருக்கிறது?" என்ற கேள்விதான் மற்ற எல்லாக் கேள்விகளையும்விட முதலில் எழுந்தது . மீண்டும் மீண்டும் எழுகிறது.
யாராலும் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் தோன்றிவிட்டது என்ற எண்ணம்தான் மேலிடுகிறது...
மனம் சாய்ந்தபிறகுதான் சாய்ந்தது அந்த உடல். சந்தேகமில்லை. அந்த மனத்தைச் சாய்த்தவர்கள் பலரும் ஒன்றுகூடி சாய்ந்துபோன உடலுக்கு மரியாதை செலுத்தினோம். வாழும்போது அவர் மனத்துக்கு நாம் செய்த தவறுகளைப் பொறுத்துக்கொண்ட அந்த மனிதன், செத்த பிறகு அவர் உடலுக்கு நாம் செய்த மரியாதையையும் பொறுத்துக்கொண்டார் என்ற நினைப்புத்தான் நெஞ்சை அழுத்துகிறது.
''ஒரு சரித்திரம் முடிந்தது" என்று சொல்வார்கள் . "ஒரு சகாப்தம் முடிந்தது" என்று சொல்வார்கள். "ஒரு தியாக பரம்பரை முடிந்தது'' என்று சொல்வார்கள் . ''எல்லாமே முடிந்துவிட்டது" என்று சொல்வதுதான் உண்மையோ என்ற சஞ்சலம் வாட்டுகிறது.
மனவேதனை பெரிதாக இருக்கிறதென்றால் , வெட்கமும் அவமானமும் அதைவிடப் பெரிதாக இருக்கிறது. துக்கம் பெரிதாக இருக்கிறதென்றால் , விரக்தி அதைவிட அதிகமாக இருக்கிறது.
வருடத்திற்கு ஒருமுறை நாம் நினைத்துப்பார்க்கும் நல்லவர்கள் பட்டியலில் அவரும்
சேர்ந்தாகிவிட்டது. நாம் நினைத்துப்பார்க்கும் நம் வயிறுகள் மிஞ்சியிருக்கின்றன. கோடானுகோடி வயிறுகளின் நினைப்பையே தனது மனத்தில் நிறுத்தியிருந்த அந்த மனிதர் போய்ச்சேர்ந்துவிட்டார்.
மற்றவர்களையெல்லாம் வாழவைக்க நினைத்த அந்த மனிதனை , வாழவேண்டிய விதத்தில் வாழவைக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து "வாழ்க'' என்ற கோஷம் வானதிரக்கிளப்பி , அவரை வானுலகிற்கு அனுப்பிவிட்டோம்.
நேர்மை விடைபெற்றுக்கொண்டுவிட்டது. பொதுப்பணி , சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டுவிட்டது. தியாகம், நமது நன்றி தேவையில்லை என்ற எண்ணத்தில் நம்மைவிட்டு எங்கோ மறைந்துவிட்டது.
திரு.காமராஜ் அவர்களின் மறைவு நம்மை ஒரு சூன்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதை இப்போது நாம் உணரமாட்டோம். வருங்காலத்தில் "அவர்மட்டும் இப்போது இருந்திருந்தால்...!" என்ற வருத்தம் அடிக்கடி தோன்றத்தான் போகிறது. சந்தேகமில்லை.
காலம் நமக்குப்புகட்டாத பாடத்தை , காலதேவன் நமக்கு சொல்லிக் கொடுத்துவிட்டான். ''எடுத்துச் செல்கிறேன் இவரை! அனுபவியுங்கள் இனி!" என்று சாபமிட்டிருக்கிறான் காலதேவன். செய்த தவறுகளுக்கெல்லாம் அனுபவிப்போம்.... நமக்கு வேண்டியதுதான்.
யாரும் , யாருக்கும் அனுதாபம் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை. சொல்லவேண்டிய அனுதாபங்களை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம். அழவேண்டிய அழுகைகளை நமக்கு நாமே அழுதுகொள்வோம். அனுபவிக்கவேண்டிய தண்டனைகளை இனி நாம்தானே அனுபவிக்கப்போகிறோம்?
இனி நம்மால் அவரை வேதனைப்படுத்த முடியாது. இனி நம்மால் அவரை அவமானப்படுத்த முடியாது. பட்டதுபோதும் என்று போய்விட்டார் அந்த நல்ல மனிதர்.... படவேண்டியது இனி நாம்தான்.....நன்றி துக்ளக்

2017-06-27 10:45:46 by SekarGV
HOT

கண்டிப்பாக கிடைத்து இருப்பார்.

2017-01-30 17:41:34 by Sasi
HOT

ஒரு நாய்க்கு ஒரு எலும்பு கிடைத்தது.

அந்த நாய் எலும்பு துண்டை கடித்து பார்த்தது.

எலும்பு பழசு என்பதால் கல்லு மாதிரி இருந்தது.

அதுல இருந்து எதுவும் வரவில்லை.

இருந்தும் அந்த நாய் அத விடாம கடித்துக் கொண்டே இருந்தது.

அதனால் வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது.

அந்த நாய்க்கு அது தன்னோட ரத்தம் தான் என்று தெரியவில்லை.

ரத்தம் ரொம்ப சுவையாக இருக்கிறதே, நம்ம ரொம்ப சிரமப்பட்டு கடித்ததினால் தான் இதுல இருந்து ரத்தம் வருவதாக நினைத்தது...
அதை மேலும் மேலும் கடித்துக் கொண்டே இருந்தது.

அதனால் வாயில் காயம் பெரிதாகி ரத்தம் அதிகமாக வர ஆரம்பித்தது.

நாயோ ஆஹா எவ்வளவு ரத்தம் எவ்வளவு சுவை என்று பெருமைபட்டுக் கொண்டது.
தன்னுடைய ரத்தம் தான் என்று தெரியாமால் மீண்டும் மீண்டும் சுவைக்க ஆரம்பித்தது...

இப்படியே நிறைய ரத்தம் வெளியேறியதால் ஒருநாள் நாய் செத்து போச்சு...

நாமும் இப்படிதான் இலவசங்கள் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலேயே நம்ம ரத்தத்தை நாமே சுவைத்துக் கொண்டு இருக்கிறோம்...

அரசால் வழங்கப்படும் அனைத்து இலவசங்களும் நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகளாகிய
Professional Tax,
Sales Tax,
Central Sales Tax,
Custom Duty,
Income Tax,
Service Tax,
Dividend Distribution Tax,
Excise Duty ,
Municipal & Fire Tax,
Staff Professional Tax,
Cash Handling Tax,
Food & Entertainment Tax,
Gift Tax,
Wealth Tax,
Stamp Duty & Registration Fee,
Interest & Penalty,
Road Tax,
Toll Tax ,
Vat & etc
போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் பணமே. அதாவது ஒருவர் பயன்பெற மற்றொருவர் தோளில் சுமக்கும் நிலை.

“பசியோடு இருப்பவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது"

யாரும் இலவசமாய் தரவில்லை என்பதை உணருங்கள்...
Please Forward All...

2016-07-23 15:58:26 by Sanju

சட்டசபையில் இனி...

2016-05-19 21:26:31 by Vaishu

Information

Information

2016-05-17 19:36:47 by sundu

ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். எங்களை அழைத்த வனத்துறை அதிகாரி, "குரங்குகளுக்குமனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார். ஆச்சர்யமாய் இருந்தது..விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்..."சுற்றிப் பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில்தான்குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள். ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாககைவிட்டுக் கொண்டிருக்கின்றன.. இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்த பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக் குரங்குகள் மாறி விடுகின்றன... வரிசையில் உட்கார்ந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சை எடுக்கும் ஜீவன்களாக மாறி விடுகின்றன...

இப்படி உழைக்காமல் சும்மா வருவதை வாங்கி உண்பதைப் பழக்கமாகக் கொண்ட குரங்குகள், நாளடைவில் எவரேனும் ஏதும் கொடுக்காமல் சென்றுவிட்டால், அவர்களை துரத்தி, மிரட்டி, தாக்கியாவது பிடுங்கி உண்ண முற்படும்...

...எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளர விடுவதே அவற்றுக்கு ஆரோக்கியமானது" என்று பதில் சொன்னார்...

நிறைய யோசிக்க வைத்தது...! -

இலவச அரிசி வாங்கி, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து, இலவச கிரைண்டரில் இட்லிக்கு மாவாட்டி, இலவச மின்விசிறியைப் போட்டு இளைப்பாறி, இலவச டிவியில் படமும் சீரியல்களும் பார்க்கும் நம்மஊர் மக்களுக்கும், இது தான் நடக்கிறது!உழைக்கவே மனம் வருவதில்லை!

"மேட்டர்" என்னவோ குரங்கு பற்றித்தான்.

☆☆☆படித்ததில் பிடித்தது.

2016-05-16 20:38:25 by Sanju
Back to Top

Popular Tufs

Ram Pal Verma of BJP

Ram Pal Verma of BJP

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

Thamizhaga Arasiyal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Thamizhaga Arasiyal category.