ஊழல்

2016-05-07 22:39:31 by Vaishu

  50            50   25  25    40   15

ஸ்டாலின் : ஸ்கூட்டிக்கு 50% மானியம் தராங்களாமே, மக்கள் மயங்கி அவங்களுக்கு ஓட்டு போட்டுட்டா,

கலைஞர் : அதெல்லாம் எல்லார் வீட்லயும் ஒன்னு இரண்டு பைக் இருக்கு, மக்கள்லாம் அந்த அம்மாவுக்கு ஓட்டு போட மாட்டாங்கடா,

இல்லனே, ஒரு ஸ்கூட்டி 50 ஆயிரம்னா, அதை வாங்க மக்கள் 25 ஆயிரம் தரணும், அரசு 25 ஆயிரம் தரும், மக்கள் ஸ்கூட்டி வாங்கிட்டு அடுத்த நாளே 40 ஆயிரத்துக்கு வித்தா கூட, மக்களுக்கு 15 ஆயிரம் லாபம்னே, இதுல மக்கள் விழுந்துட்டா,

- ஏன்டா எனக்கே இதெல்லாம் தோணல, உனக்கு எப்படி தோணுச்சு,

அது நான் அவங்க தேர்தல் அறிக்கையை உத்து உத்து பாத்தேனா,

- டேய் உண்மைய சொல்லு,

போனா ஆட்சியில நாம டிவி கொடுத்தப்ப அதையும் அப்படி தான் வாங்கி வித்துடாங்க னே.

2016-05-06 22:42:21 by Vaishu

Ippadikku indhia

Ippadikku indhia kudimagan...

2016-05-06 19:32:34 by Sanju

Naam

Naam thamizhar...

2016-05-06 07:57:15 by Sanju

Namakku kidaippadhu amaidhipadai

Namakku kidaippadhu amaidhipadai ammavasai...

2016-05-06 07:55:06 by Sanju

கடந்த திமுக ஆட்சியில் வட்டசெயலாளர் முதல் அமைச்சர்கள் வரை நில அபகரிப்பில் ஈடுபட்டத்தை சுட்டி காட்டுகிறது.. திணமனி கார்டூன்....

அதே அமைச்சர்கள் மற்றும் அவரது வாரிசுகளுக்குதான் சீட் வழங்கியுள்ளார் கருணாநிதி......

சிந்தித்து வாக்களீப்பீர்

2016-05-05 20:42:40 by Vaishu

Ha ha funny

Ha ha funny

2016-05-05 18:40:37 by arul unique

சிரிப்போ சிரிப்பு

சிரிப்பு சேனல் பாக்குறவன்
செய்தி சேனல் பாக்குறான்..
தலைவருங்க காமெடிய
தாறுமாறா ரசிக்கிறான்!

விவசாயி நெலத்தை எல்லாம்
கவர்மென்டே வாங்குமாம்..
அரசாங்க ஊழியரா
அவுங்களையும் மாத்துமாம்!

மேம்பாலங்கள் அத்தனையும்
புல்டோசர் உடைக்குமாம்...
ஒட்டுமொத்த சென்னையையும்
சுரங்கப்பாதை இணைக்குமாம்!

விலைவாசி அத்தனையும்
ரிவர்ஸ் கியரில் இறங்குமாம்...
மக்கள்கிட்ட பணப்புழக்கம்
மடிநெறைய இருக்குமாம்!

செல்போனு இலவசமா
எல்லோருக்கும் கிடைக்குமாம்..
பல்லு போன எல்லாருக்கும்
மாசத் தொகை உறுதியாம்!

கவுண்டமணிய வடிவேலுவ
எலெக் ஷன் வரை மறக்கலாம்...
தலைவருங்க பேச்சக் கேட்டு
சந்தோஷமா சிரிக்கலாம்!

2016-05-03 17:58:11 by Vaishu

மன்னர் காற்றுவாங்கியபடி அந்தப்புர பூங்காவில் உலாத்திக்கொண்டிருந்தார். அப்போது ஏதோவொரு பொருள் காலில் தட்டுப்பட்டது. குனிந்து எடுத்தார். ஒட்டியிருந்த மண்ணை துடைத்துவிட்டுப் பார்த்தார். பழங்கால விளக்கு. அழுக்கு போக துடைத்தார். குபீரென்று புகை.

அது அலாவுதீன் விளக்கு என்று புரிந்துகொண்டார். 3 விருப்பங்கள் என்ன கேட்கலாம் என்று தீவிரமாக யோசித்தார். ‘மகனுக்கு 400 கிரவுண்டில் ஒரு வீடு. மருமகனுக்கு நாப்பதரை கோடியில் ஒரு கார். மனைவிகளுக்கு கோஹினூர் வைரம் பதித்த அட்டிகை..’ என்று லிஸ்ட் போட்டார்.

‘‘மன்னா! சார்ஜ் தீர்ந்துகொண்டிருக்கிறது. 3 விருப்பங்களுக்கு வழியில்லை. ஒரே ஒரு சாய்ஸ்தான்’’ என்றது பூதம்.

மன்னருக்கு என்ன கேட்பதென்று புரியவில்லை. சரி, ஒரே ஒரு விருப்பமாக இருந்தாலும் பல்க்காக கேட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்தார். ‘‘அரபு தேசத்தில் என் நண்பர் இருக்கிறார். அவரை அடிக்கடி போய் பார்த்துவர ஆசையாய் இருக்கிறது. அரபிக்கடலுக்கு அடியில் பில்லர் போட்டு அட்டகாசமாய் ஒரு ரோடு போட்டுக்கொடு’’ என்றார் மன்னர் அசால்ட்டாக.

ஜெர்க்கானது பூதம். ‘‘இளிச்சவாய் பூதம் கிடைச்சா, ஏறி மிதிப்பீங்களே. அதெல்லாம் முடியாது மன்னா. வேறு ஏதாவது சிம்ப்பிளா கேளு’’ என்றது பூதம்.

‘‘சரி, குற்றப் பின்னணி உள்ளவர்கள் பொது வாழ்க்கைக்கு வரக்கூடாது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் உண்மையான சொத்துக் கணக்கை காட்ட வேண்டும். நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் கூறவேண்டும். இவற்றை ஒரே விருப்பத்தில் நிறைவேற்றி வை’’ என்றார் மன்னர்.

‘‘அரபிக்கடலை குடைஞ்சு உனக்கு ரோடே போட்டுக் கொடுத்துடறேன். ஆள விடு சாமி’’ என்று கூறிவிட்டு தெறித்து ஓடிய பூதம், மீண்டும் விளக்கின் புகைக்குள் மறைந்தது.           3    400        3

2016-05-03 15:07:54 by Vaishu
Back to Top

Popular Tufs

Related Tuf

Related Tuf

India Won By 9 Wickets

India Won By 9 Wickets

default thumb image

Solve dis riddleI am a

Kagathara Lalitbhai of INC WINS

Kagathara Lalitbhai of INC WINS

Thamizhaga Arasiyal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Thamizhaga Arasiyal category.