பாலை வனத்தில் பனை மரம்
வளராது. ஆனால் பனை மரம் ஒரு வறண்ட நிலப் பயிர்.
ஆயிரம் அடிக்கும் கீழே சென்று தண்ணீரை உரிந்து வைத்து
கொள்ளும். ஒரு கிணற்றை
சுற்றி பத்து பணை மரம் இருந்தால் கடைசி வரைக்கும்
அந்த கிணற்றில் தண்ணீர் வற்றாது. வற்ற விடாது.அந்த
பனை மரம் கழுத்து முறிந்து
சாகிறதென்றால் உன் நாடு
பாலை வனமாக மாறி
கொண்டிருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்
- நம்மாழ்வார்

2017-07-12 10:30:12 by SekarGV
HOT

      700 2100  766000    65  5

மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்., ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்.
மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது., ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது..,
அப்படி என்றால் நாம் மரங்களுக்கு
எந்த அளவிற்கு முக்கியத்துவம்
கொடுக்க வேண்டு,
மரங்கள் இயற்கை மனிதனுக்கு தந்த
பொக்கிஷம்....,
இனியும் மரங்கலை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.

2016-10-21 18:00:56 by arul unique
HOT

    1                                                                        5            10       80   90                                                                 60 20

மீத்தேன் எமன்! --- பாலைவனமாகும் பரிதாப டெல்டா - பகுதி 1 - விகடன்

அந்தத் தெருவில், பாழடைந்த வீடு ஒன்று இருந்தது. அதை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட நினைத்தார், வீட்டுக்காரர். அஸ்திவாரம் போடுவதற்காக குழி தோண்டியபோது, செப்புக் குடம் ஒன்று கிடைத்தது. அதில் தங்கக் காசுகள், வெள்ளி ஆபரணங்கள் தகதகத்தன. இந்தத் தகவல், அந்தத் தெரு முழுவதும் பரவியது.

பக்கத்து வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்த ஒகு. ராமகிருஷ்ணன்ருவன், 'இங்கேயும் கண்டிப்பாக புதையல் இருக்கும்... தோண்டிப் பார்க்கலாம்’ என்று நினைத்தான். இரவோடு இரவாக அந்த வீடு முழுக்க ஆழமான குழிகளைத் தோண்டி, கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஒட்டம் எடுத்தான். மறுநாள் கனமழை... ஆங்காங்கே குழியெடுக்கப்பட்டதால் அந்த வீட்டின் சுவர்கள் ஆட்டம் கண்டு, ஒட்டுமொத்த வீடும் இடிந்து... அந்தக் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தது.

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், டெல்டாவின் நிலையும் இப்படித்தான் மாறும். எது எங்கு சாத்தியமோ, அதை அங்குதான் செய்ய வேண்டும். எதுவும் விளையாத பாலைவனப் பகுதிகளில் பெட்ரோல், கேஸ் எடுக்கிறார்கள் சரி. ஆனால், முப்போகம் விளையும் செழிப்பான விளைநிலங்களில், குடியிருப்புப் பகுதிகளில் எல்லாம், 'எண்ணெய் எடுக்கிறேன்...', 'மீத்தேன் எடுக்கிறேன்' எனச் செய்யப்படும் விஷப்பரீட்சைகளை மூடத்தனம் என்பதா? இல்லை, 'இதனால் நமக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாது. அழியப்போவது யாரோதானே...' என்ற எண்ணத்தில் நடைபோடும் ஆட்சியாளர்களின் அரக்கத்தனம் என்பதா?

நாளைக்கு எடுக்கப்பட இருக்கும் மீத்தேன் ஆபத்துக்கு ஒரு சோறு பதமே... கடந்த இருபது, ஆண்டுகளுக்கும் மேலாக இதே டெல்டா பகுதியில், 'பெட்ரோல் எடுக்கிறோம்' என்கிற பெயரில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. (இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம்), நடத்திக் கொண்டிருக்கும் அழிவு வேலைகள்!

திருவாரூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது... வெள்ளக்குடி கிராமம். பாண்டவை ஆற்றின் கிளை வாய்க்கால்களால் பாசனம் பெறும் இந்த ஊர், ஒரு காலத்தில் மிகமிக செழிப்பான விவசாய பூமி. வளம் மிக்க வண்டல் மண் பூமி என்பதோடு, 10 அடி ஆழத்திலேயே நிலத்தடி நீர் தவழ, ஆண்டுக்கு மூன்று போகம் சாகுபடி செய்து, பொருளாதாரத்தில் தன்னிறைவோடு திகழ்ந்தனர், விவசாயிகள். 80-களின் இறுதி வரை நீடித்த இந்த நிலை... 90-களின் தொடக்கத்தில் தலைகீழாக மாறிப்போனது... பெருங்கொடுமை! ஆம்... ஓ.என்.ஜி.சி. நிறுவனம், அப்போதுதான் இங்கே அடியெடுத்து வைத்தது.

அதன் கோர முகத்தை, அப்போது உணராத டெல்டா வாழ் விவசாயிகள், விவசாயக் கூலிகள் என அனைவருமே... 'நம்ம ஊர்ல பெட்ரோல் எடுக்கப் போறாங்களாம்... துபாய், குவைத் மாதிரி நம்ம ஊரும் உலகம் முழுக்க ஃபேமஸாகி, பணக்கார ஊராயிடும். வழவழப்பான விசாலமான ரோடெல்லாம் வந்துடும். ஊர்ல நிறைய பேருக்கு வேலை கிடைச்சுடும்’ என்றெல்லாம் வெள்ளந்தியாகவே பேசிக் கொண்டிருந்தனர். மீடியாக்களிலும், 'காவிரி டெல்டாவில் பெட்ரோல் ஊற்று... ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பெட்ரோல் பல ஆண்டுகளுக்குக் கிடைக்கும்... இதன் காரணமாக காவிரி டெல்டா முழுக்க தொழில்கள் பெருகும்' என்றே செய்திகள் பரப்பப்பட்டன!

அன்றைக்கு இதையெல்லாம் ஆச்சர்யமும்... பெருமையும் பொங்க உள்வாங்கிக் கொண்டிருந்தவர்கள்தான் வெள்ளக்குடி மக்கள். ஆனால், இன்று இந்தப் பசுமை பூமியின் நிலை... கொடுமையிலும் கொடுமை! நேரில் பார்த்த அதிர்ச்சியிலிருந்து நம்மால் விலகவே முடியவில்லை.

ஒரே வரியில் சொன்னால்... 'நவீன சாலைகளைக் கொண்ட நரகம்தான் வெள்ளக்குடி'.

''ஒவ்வொரு நாளும் செத்துப் பொழைச்சுக்கிட்டு இருக்கோம். ஓ.என்.ஜி.சி-யோட எண்ணெய்-கேஸ் சேமிப்பு நிலையம் இங்கதான் இருக்கு. கேஸை தனியா பிரிக்கக்கூடிய சார்பு நிறுவனமான கெயில் இந்தியா நிறுவனமும் இங்க செயல்பட்டுக்கிட்டு இருக்கு. தேவைற்ற நச்சு வாயுக்கள் இருபத்தி நாலு மணிநேரமும் வெளியாகும். அதை அப்படியே எரிய விட்டுடுவாங்க. அதனால, ஆண்டு முழுக்க அணையா ஜோதியா அது எரிஞ்சிக்கிட்டே இருக்கு. இதனால வர்ற புகை, கரித்துகள் எல்லாம் விளைநிலங்கள்ல படியுது. நீர்நிலைகளும் விஷமாயிடுச்சு. எண்ணெய்க் கழிவுகளை திறந்தவெளியில வயல்கள்ல கொட்டி வெச்சுருக்காங்க. 60 அடி சுற்றளவு

20 அடி ஆழத்துக்கு கிணறுகளை அமைச்சி, அதுலயும் நச்சுக்கழிவுகளைக் கொட்டி வெச்சுருக்காங்க. இந்த கிணறுகளோட பக்கவாட்டுச் சுவர்கள் சிதிலமடைஞ்சு கிடக்கறதால, நச்சுக் கழிவுகள் மண்ணுல பரவி, ஊர் முழுக்க ஊடுருவியிடுச்சு.

மழை, வெள்ளக்காலங்கள்ல இந்த எண்ணெய்க் கழிவுகள் தண்ணீரோடு அடிச்சிக்கிட்டு வந்து, பரவலா எல்லா இடங்கள்லயும் வெளியில தேங்கிடுது. இதனால் இங்க உள்ள நிலங்கள்ல விளைச்சலே இல்லாம போயிடுச்சு. ஒருவேளை உயிர் புடிச்சி வந்தாலும், விதவிதமான நோய்கள் தாக்கி, பயிர்கள் செத்துடுது. அதனால, பெரும்பாலான நிலங்கள், தரிசாத்தான் கிடக்கு. விவசாயம் அழிஞ்சி போனதால, வெளியூர்களுக்கு கூலி வேலைக்குத்தான் நிறையபேர் போயிக்கிட்டு இருக்காங்க'' என்று சொல்லும் பரசுராமனின் வார்த்தைகள் முழுக்க... வருத்தம் இழையோடுகிறது!

''இந்த எண்ணெய் கம்பெனியால, நாங்க இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல...'' என பெருக்கெடுத்த கண்ணீரோடு, கதறி அழுத கமலா, ''மேய்ச்சலுக்குப் போற ஆடு, மாடுக கால்கள்ல, எண்ணெய்க் கழிவுகள் பட்டு, புண்ணாகி, இறந்துடுது. இந்தப் பகுதிகள்ல எப்பவும் எண்ணெய் வாடை, நச்சுப்புகை இதுங்களைத்தான் சுவாசிச்சுக்கிட்டு இருக்கோம். இதனால, ஏகப்பட்ட நோய்கள் எங்களுக்கு வருது. எப்பவுமே ஊருக்குள்ள வெப்பக் காத்துதான் வீசிட்டே இருக்கு. சின்னக் குழந்தைகள் எல்லாம் தாங்க முடியாம பலியாகுதுக.

குடிக்கக்கூட நல்ல தண்ணி கிடையாது. அடிபம்பு தண்ணியிலகூட எண்ணெய் வாடை அடிக்குது. இதையெல்லாம்விட பெரிய வேதனை... ஒ.என்.ஜி.சி கம்பெனிக்காரங்க, எங்க குடியிருப்புப் பகுதியை சுத்திலும் பெரிய காம்பவுண்ட் சுவர் கட்டிக்கிட்டு இருக்காங்க. 'ஏன் இதைக் கட்டறீங்க?'னு கேட்டதுக்கு, 'இங்க புதுசா ஃபேக்டரி வரப் போகுது'னு சொல்றாங்க. எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டா கூட நாங்க தப்பிச்சி ஓட முடியாது. இங்க இருந்து சில அடி தூரத்துலதான் எண்ணெய்-கேஸ் சேமிப்பு நிலையம் இருக்கு. 'எப்ப வேணும்னாலும் எது வேணுனாலும் நடக்கலாம்'னு இங்க உள்ள அதிகாரிகளே சொல்றாங்க'' என்று நடுங்கியவர்,

''அப்பப்ப ஒ.என்.ஜி.சி-யோட மீட்புப் படை அதிகாரிகளும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளும் அவசர அவசரமா இங்க ஓடி வந்து... 'விஷ வாயு கசிஞ்சுடுச்சி... இந்த சேமிப்பு நிலையம் வெடிக்கப் போகுது. சிக்கீரம் கிளம்புங்க’னு பதற்றமா சொல்லுவாங்க. நாங்க பயந்து, உயிரைக் கையில புடிச்சிக்கிட்டு, குழந்தை, குட்டிகளைத் தூக்கிக்கிட்டு, கையில கிடைக்குற சாமான்களோடு வெளியில ஓடுவோம். ரொம்ப நேரம் கழிச்சி, எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமே இல்லாம, 'பயிற்சிக்காக ஒத்திகை பார்த்தோம்’னு அதிகாரிக சொல்லுவாங்க. இதுமாதிரி பல தடவை நடந்திருக்கு.

எங்க மேல அக்கறை இருக்கற மாதிரி பேசற சில அதிகாரிகள், 'இங்க எப்ப வேணும்னாலும் பெரிய அளவுல ஆபத்துகள் ஏற்பட லாம். இங்க இருந்து நீங்க வேற இடத்துக்கு போறது நல்லது’னு சொல்றாங்க. அதை எந்த அளவுக்கு நம்பறதுனு தெரியல.

இது எங்களோட பட்டா நிலம். காலகாலமா, தலைமுறை தலைமுறையா இங்கதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். இப்ப எங்களோட வாழ்க்கை, நடைப்பிணமா நகர்ந்துக்கிட்டு இருக்கு'' என்று அழுதார், கமலா.

இங்குள்ள அத்தனை விவசாயிகளிடமும் இதுபோன்ற கதறல் கதைகளே நீக்கமற நிறைந்திருக்கின்றன.

--vikatan.com

2016-10-14 18:19:30 by sekar
HOT

தாமிரபரணி

Share பண்ணிட்டு படிங்க ✔

தாமிரபரணி நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் தோன்றி தூத்துக்குடி கடலில் கலக்குது. தமிழ்நாட்டில் தோன்றி தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்குற நதி இது. நெல்லை தூத்துகுடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுகிறது!

இப்படி சிறப்பு மிக்க தாமிரபரணிக்கு இப்போ என்னாச்சினு!!! கேக்குறீங்களா?
சில பேருக்கு தெரிஞ்சிருக்கும்..... எல்லாருக்கும் தெரியனும்னு நினைக்கிறேன்.
நம்ம தமிழ்நாடு அரசு அடுத்த 99 வருசத்துக்கு 3600ரூபாய்க்கு தண்ணிரை குத்தகைக்கு விட்டிருக்கு?!!?

ஒரு நாளைக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணிர் Pepsi கம்பெனி உறிஞ்சி எடுக்க போகுது,,.. கங்கை கொண்டான்ல அமையப் போற Pepsi கம்பெனிக்காகத் தான் இதெல்லாம், இதுனால எவ்வளவு பாதிப்பு ஏற்படும் தெரியுமா??? எத்தனை லட்சம் விவசாயிகள் பாதிக்கபடுவாங்கனு யோசிச்சாங்களா? இரண்டு மாவட்டத்தோட வாழ்வாதாரப் பிரச்சனை இது

1000 லிட்டர் தண்ணியை வெறும் 36 ரூபாய்க்கு வாங்கீட்டு அதை பாட்டில்ல அடைச்சி ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விக்குறான்!

இதே இந்தியாவுல வேற எந்த மாநிலமும் இதை❌ அனுமதிக்கல. தமிழக அரசு அனுமதிச்சிருக்கு❗
Pepsi கம்பனியோட CEO ஒரு தமிழப் பெண். .அவங்களுக்கு இதைப் பத்திக் கவலை இல்ல⁉ அமெரிக்கால ஜாலி யா இருக்காங்க.

ஏற்கனவே தண்ணிர்க்காக பக்கத்து மாநில காரன்கிட்ட பிச்சை எடுக்குறோம்.
இதுல இருக்குற தண்ணியை
கொடுத்துட்டா அப்புறம் எப்படி விவசாயம் நடக்கும் ⁉
கன்னியாகுமரிக்கு கூடன்குளம்...
தஞ்சாவூர் க்கு மீத்தேன் திட்டம..... சென்னை க்கு தொழிற்சாலைகள்.....
இப்படி இருக்குற
எல்லா G மாநிலத்தையும் கார்பரேட் கம்பெனிக்காரன் சீரழிச்சிட்டு இருக்கான்❗

நடிகர் சங்க தேர்தலை 24 மணி நேரமும் காட்டின ஊடகங்கள, இதைக் கண்டுக்கவே இல்ல❗
நாம கண்டிப்பா எதாவது பண்ணியே ஆகனும் ✔
நான் அந்த மாவட்டத்துக்காரன் இல்ல, அப்புறம் ஏன் நான் கவலைபடனும் னு நினைக்காதிங்க.

நாளைக்கு உங்க மாநிலத்துக்கும் இதே நிலமை வரலாம்❗
அன்னைக்கு வெள்ளைகாரன் கொள்ளையடிச்சான்❗ இன்னைக்கு கார்பரேட் காரன் கொள்ளை அடிக்குறான் ❗

30 வருசத்துக்கு முன்னாடி குடிக்குற
தண்ணிய காசு கொடுத்து வாங்கணும்னு யாரும் நினைச்சிருக்க� மாட்டாங்க❗ எதிர்காலத்துல இன்னும் மோசம் ஆகாம இருக்கனும்னா, நாம சேர்ந்து எதாவது பண்ணனும்✔✔✔

இன்னைல இருந்து Pepsi தயாரிப்புகள் எதையும் வாங்காதீங்க.❌❌❌
இதுக்கும் மேல Pepsi குடிச்சா,
அது நம்ம தமிழ்நாட்டுக்கு செய்யுற துரோகம்⁉
இதுக்காக எதாவது பண்ணனும் னு நினைக்குக்றவங்க இந்த Link யை கிளிக் பண்ணி உங்க எதிர்ப்பை பதிவு செய்யுங்க
இனிமே Pepsi தயாரிப்புகளை வாங்காதீங்க ❌❌❌

தமிழனா இருந்தா உங்க எதிர்ப்பைப் பதிவுப் பண்ணுங்க ❗

இது,
எல்லாருக்கும்ப் போய்ச் சேரணும்❗
ஆகவே, தவறாம
மறக்காம
உங்க group களுக்கு
Share பண்ணுங்க

2016-07-16 09:29:54 by Sanju
HOT

இன்று ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கி போராடும் Peta அமைப்பின் கோர முகம்....

யார் இந்த பீட்டா?
--------------------------
PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.

(எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி... அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.

அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.

இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

அதிர்ச்சி அடைய வேண்டாம்...
35000. ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம் !!!

இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...

நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!
கொம்பைப் பிடிக்கிறாய்!
கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!
அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!
'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்... பீட்டா செய்வது அதுவே தான்!!

பீட்டா - மிருகவதை வியாபாரம்
-----------------------------------------------
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?

அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா? இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்!

அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.

எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை.

சரி.
அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.

நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது.

போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை!

சரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?

பீட்டா - தோலிருக்க சுளை முழுங்கும் ஆளு !
-----------------------------------------------------------------
நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.

பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும்.

நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.

காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.

இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள்.

பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்றலாம்.

தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே?

மூன்றரை இலட்சம் கோடிகள்!

சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?

இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.

அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.

இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை.

சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும்.

ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.

வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!

எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.

உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.

அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.

அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள் !

அதற்கு இந்த மானங்கெட்ட ஆட்சியாளர்களும், நீதித்துறையும் துணை போகிறார்கள் என்பது மிகவும் கேவலமான ஒன்று.....

நன்றி Via @Whatsapp

2016-07-02 11:53:19 by Sasi
HOT

கடைகளில் தேன்,காத்திருக்கும் ஆபத்து..!!!

அதிர்ச்சியூட்டும்_உண்மைசெய்தி-பகிர்ந்து தடுப்போம் முடிந்தால் விழிப்புணர்வு கொடுப்போம்

இந்தியர்களின் உயிரை பற்றி எங்களுக்கு கவலை இல்லை... இப்படி கூறுவது அமெரிக்காவோ, சீனாவோ, பாகிஸ்தானோ அல்ல... நம்மை ஆளும் மத்திய அரசுதான். என்ன அதிர்ச்சியா இருக்கா ? அதைவிட பெரிய அதிர்ச்சி நம்ம உடலுக்கு நல்லது என்று நாம் விரும்பி சாப்பிடும் தேனால்தான் பெரிய ஆபத்தே இருக்கு.

டெல்லியில் இருந்து செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழல் மையம் சமீபத்தில் நமது நாட்டில் விற்கப்படும்

ஆய்வு

12 பிரபல நிறுவனங்களின் தேன்களை ஆய்வு செய்தது. அது என்னென்ன நிறுவனங்கள் என்று முதலில் பார்ப்போம்.
டாபர் (Dabur),
பைதியான்ந் (Baidyanth),
பதஞ்சலி ஆயுர்வேதா (Patanjali Ayurveda),
காதி(Khadi) மற்றும்
ஹிமாலாயா (Himalaya) உள்ளிட்ட நிறுவனங்கள்தான்.

அதிர்ச்சி_முடிவுகள்

இந்த நிறுவனங்கள் சார்பில் விற்கப்படும் தேன் பாட்டீல்களில் தடை செய்யப்பட்ட ஆன்டி பயாடிக் எனப்படும் குளோரோபெனிகல், சிப்ரோ பிளாக்சின் மற்றும் எரித்ரோமைசின் போன்றவற்றின் குண நலன்கள் அதிகளவில் காணப்படுகின்றன என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த வகை ஆன்டி பயாடிக்கினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர் சத்யா அச்சத்துடன் எச்சரிக்கிறார்.

வெளிநாடுகளில்_தடை

இதனால்தான் இந்திய வகை தேன்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை உள்ளதாகவும், சர்வதேச தரத்திற்கு இந்திய நிறுவனங்களின் தேன்கள் இல்லை என்றும் அறிவியல் மற்றும் சுற்றுபுறத்துறை மையத்தின் துணை இயக்குனர் சந்திர பூஷன் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்.
ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 2 நிறுவனங்களின் தேனிலும் இதுபோன்று மனித உடலை பாதிக்கும் வகையில் உள்ளது என்றும், அதனை அந்நாட்டு அரசே தடை செய்துள்ளது என்றும், ஆனால் அவை சர்வசாதரணமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது என்றும் அவர் கவலையுடன் கூறுகிறார்.

இப்பிரச்சினை குறித்து மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களிடம் எடுத்து கூறியபோது, நாங்கள் தேனை தயாரிப்பதில்லை என்றும், அதனை வெளி மார்க்கெட்டில் வாங்கி எங்களது நிறுவனங்களின் ஸ்டிக்கரை மட்டும் ஒட்டி விற்பனை செய்வதாக அந்நிறுவனங்களின் அதிகாரிகள் தங்களிடம் அலட்சியமாக தெரிவிக்கின்றனர் என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குனர் சுனிதா நரேன் கூறினார்.

இந்த தகவல் எல்லாம் மத்திய அரசுக்கு தெரியும் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார். இதனால்தான் மேலே கூறியபடி இந்திய உயிர்களை பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை என்று நாம் ஆணித்தரமாக கூறினோம். சரி இவர் எப்படி ஆணித்தரமாக மத்திய அரசுக்கு தெரியும் என்று கூறுகிறார் என பார்ப்போம்.

கடந்த 5 ஆண்டுகளாக இந்திய தேன்கள் சர்வதேச தரத்திற்கு இல்லை என ஏற்றுமதி நிறுவன ஆய்வில் கூறப்பட்டுள்ளது என்றும் ஆனால் அதனை பற்றி மத்திய அரசு சிறிதும் கவலைப்படவில்லை என்றும் சுனிதா நரேன் தெரிவித்துள்ளார். ஆனால் இவைகளை உள்ளூர் சந்தையில் விற்க மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என அவர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

இந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் உள்ள 27 நாடுகளும் இந்திய வகை தேன்களுக்கு தடை விதித்துள்ளன. ஆனால் இந்தியாவில்...? எதை நம்பி வாங்குவது எதை சாப்பிடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு பதில் அளிக்குமா மத்திய அரசு ? பொறுத்திருந்து பார்ப்போம்.
உங்களுக்காக இருவன் உங்களில் ஒருவன்
சரவணக்குமார் வே கிராமத்து இளைஞன்
உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என தெரிந்தே இத்தகைய பொருட்களை தடைசெய்யாமல் விற்க மத்திய,மாநில அரசுகள் அனுமதிப்பது ஏன்
மக்களாட்சி நடக்கும் நாட்டில் மக்களின் நலன் மீது அக்கறை இல்லாமல் இருப்பதேன்

நாம் சற்றே விழிப்புணர்வோடு இருந்து கொள்ள வேண்டியது நம் கடமை பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்
இதுபோல் கடைகளில் கிடைக்கும் தேன் பாட்டில்களை வாங்காமல் முடிந்தளவு இயற்கை முறையில் கிடைக்கும் தேனை பயன்படுத்த முயற்சிசெய்வோம்...                        12      Dabur Baidyanth Patanjali AyurvedaKhadi Himalaya                                    2                                               5                      27

2016-05-27 18:49:20 by Vishnu
HOT

பொது குளியல் அறை, ஹோடல், துணிக்கடைகளின் உடை மாற்றும் அறைகளில் இந்த மாதிரி ஆங்கர் இருந்தால் உஷார்!

ரகசிய கேமரா!

2016-05-11 19:25:44 by arul unique

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???

1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது

2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்

3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்

4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது

5. ஆயில் புல்லிங்

6. காம்பிளான் குடித்தால் வளரலாம்

7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா

8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா

9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி

10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்

வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன் ????

நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின
அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்

அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமையம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச்சென்றது

பின்விளைவு

பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளிநாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று

சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்

பின்விளைவு

அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து
உணமையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா மைதா

சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல்

டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது

இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று உணராமல்

இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள் நாளை நீங்கள் உங்களையே இழந்துவிடுவீர்கள்

"அதற்கான இரண்டாவது ஏற்பாடுதான் கெயில் கேஸ் குழாய்கள்"

இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்

மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல
மருத்துவமனைகள் அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..

2016-04-24 10:51:54 by geethaa

நாம் கவனிக்க தவறிய பேராபத்து.

இன்று மராட்டிய மாநிலத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம் அம்மக்களை வேதனையின் உச்சத்திலும் விரக்த்தியின் விளிம்பிலும் தள்ளியுள்ளது.

மாரட்டியத்தில் லத்தூர்,பீட் மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகள் கடும் பஞ்சத்தில் சிக்கி தவிக்கின்றன். அறுவை சிகிக்க்சைக்கூட தண்ணீர் பற்றாகுறை என்கிறபோது நிலைமையின் தீவிரத்தை உணரமுடிகின்றது.

15 நாட்களுக்கு ஒரு ரயில்மூலம் தண்ணீர் கொடுக்க அரசு முடிவெடுத்துள்ள நிலையில் அம்மக்கள் படும் துன்பம் சொல்லிமாளாது.சராசரியாக மக்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் தண்ணிர் மட்டுமே விநியோகிக்க முடியும் என்ற நிலையில் அவர்களின் வாழ்வாதரம் கேள்விகுறியாகிஉள்ளது,

ஒரு வாரத்திற்க்கு ஒரு முறைதான் குளிக்கமுடியும் என்று அதற்க்கு 5 நாட்கள் கொஞ்சம்கொஞ்சமாக தண்ணீரை சேமித்துதான் குளிக்கமுடிகிறது என்றும் காலைகடனை கழிக்க பேப்பரையும் பழைய துணிகளையும் பயன்படுத்தும் நிலைமையை நினைத்தால் ஏன் பொழுதுவிடிகின்றது என அம்மக்களின் பேச்சு மனதை கிழிக்கின்றது,

இது அங்குமட்டுமல்ல நாளை இந்த உலகம் அனுபவிக்கபோகின்ற நிலையின் தொடக்கம்.தமிழ்நாட்டில் காவிரி தண்ணிர் பிரச்சனை..பாலாறுபிரச்சனை தாமிரபரணிதண்ணிரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கி தமிழகத்தை பாலைவனமாக்க தொடங்கியாச்சு,மீத்தேன் ,ஷேல் காஸ் போன்றதிட்டங்களால் விரைவில் காவிரி டெல்டா தண்ணிர் பஞ்சத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

தண்ணிரை பெட்ரோல் போலபயன்படுத்தவேண்டும் என்று கூறிய நமது முன்னாள் பிரமர் மன்மோகன் சிங்கும்,தண்ணிரை பண்டமாக பார்க்கவேண்டும் என்ற இன்றைய பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகளை நினைவில்கொள்வோம்.
விரைவில்தண்ணிரையும் தனியார்மயமாக்கி நம்மை குடிநீருக்காக கையேந்தும் நிலைக்கு தள்ள்ப்படலாம்.

சிந்திப்போம் தண்ணிரை சிக்கனமாக பயன்படுத்துவோம்.
நம் அடுத்த தலைமுறைக்கு தண்ணிரை விட்டுசெல்வோம்.

#latur #watercrisis

2016-04-16 14:28:38 by Sanju
Back to Top

Popular Tufs

Mount Aso volcano erupts following

Mount Aso volcano erupts following

Father of Singapore

Father of Singapore

Bern Switzerland How Our

Bern Switzerland How Our

Please learn to respect the

Please learn to respect the

Echarikkai Thagavalgal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Echarikkai Thagavalgal category.