Unavu pazhakkam...
மைசூர் போண்டா !!
என்னென்ன தேவை?
உளுத்தம் பருப்பு - 1/2 கப்,
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது),
மிளகு - 1 டீஸ்பூன்,
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
அரிசி மாவு - 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகவும், ஓரளவு கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, தேங்காய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் நெருப்பை மிதமாக வைத்து, எண்ணெயில் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எடுத்து போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப்போன்று அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான மைசூர் போண்டா ரெடி!!!
“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்…
* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல
* தன் காயம் காக்க வெங்காயம் போதும்
* வாழை வாழ வைக்கும்
* அவசர சோறு ஆபத்து
* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை
*இருமலை போக்கும் வெந்தயக் கீரை
* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி
* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்
* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை
* சித்தம் தெளிய வில்வம்
* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி
* சூட்டை தணிக்க கருணை கிழங்கு
* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு
* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை
* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
* வாத நோய் தடுக்க அரைக் கீரை
* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்
* பருமன் குறைய முட்டைக்கோஸ்
* பித்தம் தணிக்க நெல்லிக்காய்
” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.
நலம் உடன் வாழ்வோம்.
மேலும் தகவல்கள்@
www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
www.facebook.com/groups/siddhar.science/
Maruthuva kuripugal
Health tips honey
நண்டு மசாலா
விடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாகவும், நிம்மதியாகவும் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட விரும்புவோம். அப்படி விடுமுறை நாட்களில் சமைத்து சாப்பிட நினைக்கும் போது, எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை எப்படி வித்தியாசமாக சமைத்து சாப்பிடலாம் என்ற யோசியுங்கள். இங்கு கடல் உணவுகளில் ஒன்றான நண்டை கன்னியாகுமரி ஸ்டைலில் எப்படி மசாலா செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கன்னியாகுமரி நண்டு மசாலாவின் செய்முறையைப் படித்து தவறாமல் செய்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
நண்டு - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - 1
ஏலக்காய் - 4
சோம்பு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு:
துருவிய தேங்காய் - 1/2 கப்
சோம்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 4-5
செய்முறை:
முதலில் நண்டை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து கிளறி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் மூடி வைத்து, எண்ணெய் தனியே பிரியும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்து அதில் நண்டு சேர்த்து நன்கு மசாலா நண்டில் சேரும் வரை பிரட்டி, பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து நண்டை வேக வைக்க வேண்டும்.
அதற்குள் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். நண்டின் நிறம் ஆரஞ்சு நிறத்தில் மாற ஆரம்பித்தால், நண்டு வெந்துவிட்டது என்று அர்த்தம். பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கன்னியாகுமரி நண்டு மசாலா ரெடி!!!
Popular Tufs
Unavumurai Kuripugal Related Sharing
Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Unavumurai Kuripugal category.