6   6   100         5

வெல்வெட் கேக் செய்வது எப்படி???

தேவையான பொருட்கள்:

1.பட்டுப்பூச்சி (வெல்வெட் இன்செக்ட்) ஒரு கிலோ,
2.பணக்காரங்களுக்குனே மந்திரிச்ச முட்டை-5
3.சாதாரண கேக்-6

செய்முறை:

முதலில் விருந்தாளி வாங்கி வந்த 6 கேக்கினை வேலைக்காரியிடம் கொடுத்து!
மூஞ்சி புக்கில் 100 லைக் தாண்டியதும் அந்த கேக்கை பிடுங்கி கொள்ளவும்!

பின்பு பட்டுப்பூச்சியை நன்கு பொடியாக அம்மியில் அரைத்து!
அதை அந்த சாதாரண கேக்கின் மேல் தடவி விடவும்!
மீதமிருக்கும் 5 முட்டையை மீண்டும் ஃப்ரீட்ஜிலேயே வைத்து விடவும்!

இப்போது சுவை மிகுந்த #வெல்வெட்_கேக் ரெடி

எல்லாரும் முயற்சித்து உங்கள் விருந்தினர் வீட்டிற்க்கு எடுத்துச் செல்லவும்!

2016-04-27 22:27:22 by Vaishu

   12     1   1  2    1   1        2

மைசூர் போண்டா !!

என்னென்ன தேவை?

உளுத்தம் பருப்பு - 1/2 கப்,
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது),
மிளகு - 1 டீஸ்பூன்,
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
அரிசி மாவு - 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகவும், ஓரளவு கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, தேங்காய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் நெருப்பை மிதமாக வைத்து, எண்ணெயில் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எடுத்து போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப்போன்று அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான மைசூர் போண்டா ரெடி!!!

2016-04-23 19:42:33 by yamuna

                             12  2  2     1   1  1  4  2   12   2   2   14  3     12  2    45                                                             5

நண்டு மசாலா

விடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாகவும், நிம்மதியாகவும் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட விரும்புவோம். அப்படி விடுமுறை நாட்களில் சமைத்து சாப்பிட நினைக்கும் போது, எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை எப்படி வித்தியாசமாக சமைத்து சாப்பிடலாம் என்ற யோசியுங்கள். இங்கு கடல் உணவுகளில் ஒன்றான நண்டை கன்னியாகுமரி ஸ்டைலில் எப்படி மசாலா செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கன்னியாகுமரி நண்டு மசாலாவின் செய்முறையைப் படித்து தவறாமல் செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
நண்டு - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - 1
ஏலக்காய் - 4
சோம்பு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு:

துருவிய தேங்காய் - 1/2 கப்
சோம்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 4-5

செய்முறை:

முதலில் நண்டை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து கிளறி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் மூடி வைத்து, எண்ணெய் தனியே பிரியும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்து அதில் நண்டு சேர்த்து நன்கு மசாலா நண்டில் சேரும் வரை பிரட்டி, பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து நண்டை வேக வைக்க வேண்டும்.

அதற்குள் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். நண்டின் நிறம் ஆரஞ்சு நிறத்தில் மாற ஆரம்பித்தால், நண்டு வெந்துவிட்டது என்று அர்த்தம். பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கன்னியாகுமரி நண்டு மசாலா ரெடி!!!

2016-02-04 21:58:44 by Sasi

  6        6

இட்லி ஃபிங்கர் சிப்ஸ்

தேவையானவை:
இட்லி - 6
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை:

இட்லிகளை ஃபிங்கர் சிப்ஸ் வடிவத்துக்கு நீளமாக ஒவ்வொரு இட்லியிலும் 6 பீஸ்கள் வரும்படியாக வெட்டிக் கொள்ளவும். உங்கள் வீட்டு இட்லியைப் பொறுத்து பீஸ்கள் மாறுபடலாம். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் வைத்து இட்லித் துண்டுகளைப் போட்டு அவற்றின் அனைத்துப் பகுதிகளும் பிரவுன் நிறம் ஆகும் வரை வதக்கி எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும்.

அதிகப்படியான எண்ணெயை பேப்பர் டவல் உறிஞ்சிக் கொள்ளும். பிறகு இட்லி ஃபிங்கர் பீஸ்களை எடுத்து ஒரு ப்ளேட்டில் வைத்து மேலே உப்பு, மிளகுத்தூள் தூவிப் புரட்டி பரிமாறவும். நீங்கள் எண்ணெயில் மிகச்சரியாக இட்லிகளைப் பொரித்தெடுத்திருந்தால் பேப்பர் டவலில் துளி எண்ணெய் கூட ஒட்டாது.

2016-01-23 14:58:36 by Sasi

தேவையானவை:

கேரட்- 6
வறுத்த, தோல் நீக்கிய நிலக்கடலை- 3 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
உதிர் உதிராக வேக வைத்த பாசுமதி அரிசி- 4 கப்

வறுத்துத் அரைக்க

வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்

கடலைப்பருப்பு- 1/2 ஸ்பூன்

மிளகு- 6
சீரகம்- 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை- சிறிதளவு
மிளகாய்வற்றல்- 5

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 ஸ்பூன்

கடுகு- 1 ஸ்பூன்

கடலைப்பருப்பு- 1 ஸ்பூன்

வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்

பெருங்காயம்- 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை- 1/2 இணுக்கு
செய்முறை:

1. பாசுமதி அரிசியை உதிர் உதிராக வேக வைத்து ஒரு பாத்திரத்தில் ஆற வைத்துக் கொள்ளவும்.

2.கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெயிட்டு தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு துருவிய கேரட்டை உப்பு சேர்த்து வதக்கவும்.

4. இன்னொரு கடாயில் வறுக்கக் கொடுத்தப் பொருட்கள வறுத்து மிக்சியில் போட்டு ஒரு அடிஅடித்து வைக்கவும்

5. கேரட் வெந்ததும் இந்தப் பொடியைச் சேர்த்து, தனியே வறுத்து வைத்திருக்கும் நிலக்கடலையையும் சேர்த்துக் கிளறவும்.

6. கேரட் கலவையைச் சிறிது ஆற விடவும், பின் ஆற வைத்திருக்கும் சாதத்துடன் சேர்த்துக் கிளறி கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுவையான, எளிதான, ஆரோக்கியமான கேரட் சாதம் தயார். 6  3     4  2  12  6 12  5 1  1  1  1  12  12

2015-12-05 15:27:26 by muthu
Back to Top

Popular Tufs

Related Tuf

Related Tuf

Banglalink Reactivation Offer 5GB free

Banglalink Reactivation Offer 5GB free

Proud Moments for Indians

Proud Moments for Indians

Indranil Sen of AITC WINS

Indranil Sen of AITC WINS

Samaiyal Seimuraigal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Samaiyal Seimuraigal category.