HOT

ஒரு பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?

தமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு:

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.

"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்

"கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

ஓர் பலாப்பழத்தை பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

கணக்கதிகாரம்

விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.

2017-11-23 15:22:34 by SekarGV

படித்தேன்.. பகிர்ந்தேன்.

இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போங்க...

அன்றைய தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒருவன் உலகத்திற்கே நெறி வகுத்துக் கொண்டிருந்தான். அவன் தாடியோடு இருந்தானா, அவன் வீட்டுத் திண்ணையில் இருந்து அதை எழுதினானா, மாளிகையில் இருந்து எழுதினானா, அவன் எந்தச் சாதியைச் சேர்ந்தவன், அவன் எந்த மதம், அவன் அடையாளம் என்ன, அவன் ஆண்ட பரம்பரையா, முற்றும் துறந்த சித்தனா, பித்தனா..? என்றெல்லாம் அடையாள ஆராய்ச்சியில் ஈடுபடும் ஓர் இழிவான தமிழ்ச் சூழலில் அவன் பிறக்கவில்லை.

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்..

அவன் படைத்த திருக்குறளில் எங்கும் தமிழ் என்ற வார்த்தை இல்லை, ஒரு தெய்வத்தின் பெயர் இல்லை, ஒரு மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டுப் பதிவுகள் இல்லை, ஓர் அரசையோ ஆளும் வர்க்கத்தையோ உயர்த்தியோ தாழ்த்தியோ ஒரு பதிவும் இல்லை. இப்படி எந்த ஒரு அடையாள அரசியலுக்குள்ளும் சிக்காமல் ஒரு நெறி வகுக்கக் கூடிய பக்குவம் அன்று எம் முப்பாட்டனுக்கு இருந்தது.

எந்த ஒரு மதமும் போதிக்காத மனிதத்துடனும் , எந்த ஓர் அடையாளத்துக்குள்ளும் அடங்காத நடுநிலைமையுடன் எழுதப்பட்ட
இப்படி ஒரு பொது மறை நூலை வேறெங்காவது காண முடியுமா?

பிற்காலத்தில் நாற்பொருளில் மையம் கொண்ட தமிழர்கள் அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்ற அடிப்படையில் தம் வாழ்வியல் நெறியைக் கட்டமைத்தாலும், வீடு என்ற தனி மனித பகுத்தறிவுக்கு மட்டுமே புலப்பட வேண்டிய கருத்தியலையும் தவிர்த்து ஒரு நன்னெறி வகுத்த பெருந்தகை எங்கள் வள்ளுவன்.

இவ்வளவு தெளிவான ஒரு படைப்பைப் படைக்க ஒருவன் எப்பேர்ப்பட்ட ஞானியாக இருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள். மதங்களின் வேத நூல்களில் இல்லாத பக்குவமும் தெளிவும் திருக்குறளில் இருக்கிறது.

அப்படி என்றால் அந்தக் காலம் எப்படி இருந்திருக்கும். இத்தகைய படைப்பைப் படைக்க அவனுக்கு எது ஊன்றுகோலாய் இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். மாளிகையிலும் திண்ணையிலும் இருப்பவனால் இப்படிப் பட்ட நூலை எழுத முடியுமா?

இதைப் படைத்தவன் கண்ட காட்சிகள் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்

அவன் சுற்றுச் சூழல்,
அவன் சொந்தங்கள்,
அவன் நண்பர்கள்,
அவன் கண்ட அரசர்கள்,
அவன் கொண்ட காதல்,
அவன் கற்ற கல்வி,
அவன் பெற்ற செல்வம்,
அவன் வாழ்ந்த மண்,
அவன் நெறி கற்ற ஆசிரியர்கள்,
அவன் மொழி கற்ற அறிஞர்கள்,
அவன் உண்ட உணவு,
அவன் கண்ட கனவு

எல்லாம் எவ்வளவு மேன்மையானது என்று எண்ணிப் பாருங்கள்.

எங்கிருந்தோ வந்த இலக்கியங்களையும், சித்தாந்தங்களையும் படித்துப் பூரிக்கும் நம்மவர்கள் நம் முப்பாட்டன் விட்டுச் சென்ற இச்செல்வத்தைப் புறக்கணிக்கலாமா...

இவனுக்கு அடையாளமாக மதம் இல்லை, சாதி இல்லை, வெறும் தமிழே இவன் அடையாளமாக இருக்கிறது. அன்று அவன் ஏந்திய அடையாளம் தமிழ் மட்டும் தான். ஆனால் இன்று நாமோ, மதம், சாதி, தேசம் என்ற கண்ட கண்ட அடையாளங்களை ஏற்றுப் பெருமை பேசிக்கொண்டு திரிகின்றோம், ஆனால் தமிழன் என்று சொல்ல மட்டும் தான் தயக்கம்,... தமிழன் என்று சொன்னால் அங்கே மதத்திற்கும் சாதிக்கும் வேலை இல்லாமல் போய் விடும், அங்கு ஒரு சமத்துவம் வந்து விடும் என்ற அச்சமா?

நான் தமிழன் என்ற திமிர் ஒவ்வொரு தமிழனுக்கும் வரும் வரை, வள்ளுவன் எம்மிடம் இருந்து அன்னியப்பட்டுத் தான் இருப்பான் போல...
*வள்ளுவம் படிப்போம்*

2017-07-06 10:18:28 by SekarGV
HOT

மூதுரை
வெண்பா : 6
உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்

விளக்கம் 
தூண் ஓரளவுக்கு மேல் பாரத்தை ஏற்றினால் உடைந்து விழுந்து விடுமேயல்லாது, வளைந்து போகாது. அது போலவே மானக்குறைவு ஏற்பட்டால் உயிரை விட்டு விடும் தன்மையுள்ளவர்கள் எதிரிகளைக் கண்டால் பணிவதில்லை.

2016-12-09 16:04:57 by thulasi

“நீர்சான்று உயரவே நெல் உயரும் – சீர்சான்ற
தாவாக் குடிஉயரத் தாங்கு அருஞ்சீர்க் கோ உயர்தல்
ஓவாது உரைக்கும் உலகு.” - (சிறுபஞ்சமூலம்.44)

வயலில் நீர் உயரவே நெல் உயரும். நெல் உயர்ந்து வளங்கொழித்தால், அதனை நம்பிவாழும் சீர்பெற்ற குடிகள் உயரும். பல்வேறு குடிகளாகிய மக்கள் உயர்ந்தால் அரசர் உயர்வடைவார்.

2016-05-16 07:56:28 by Vaishu

“குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்” - (குறள்.549)

குடிமக்களை வருந்தவிடாமலும் தானும் வருந்தாமலும் மக்களைக் காத்து மக்களுக்குத் துன்பம் விளைவிப்பவரை அடையாளங்கண்டு அவர்க்கு தண்டனையளித்துத் தன் பணியைச் செவ்வனே செய்பவரே நல்ல ஆட்சியாளர் எனவும். குற்றத்தை கடிந்துரைத்தல் ஆள்பவருக்கு வடுவாகாது. மாற்றாக அது ஆள்பவரின் தொழிலே ஆகும்.

2016-05-16 07:40:34 by Vaishu

            5    50                50             5

தெரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே:-

ஒரு நாளிதழ் படிக்கும் போது படித்தது, இதுவரை கண்டுபிடிக்க பட்ட தமிழ் ஓலைசுவடிகள் 5 லட்சம், அதில் கிட்டத்தட்ட 50 ஓலை சுவடிகள் மட்டுமே படித்து விளக்க உரை எழுத்த பட்டு உள்ளது.

50 ஒலைசுவடின்னா திருக்குறள், புறநானூறு, தொல்காப்பியம், போன்ற பழமையான நூல்களே.... அந்த 50 ஓலைசுவடிய படிச்சத்துக்கே எத்தனை மருத்துவ குறிப்புகள் , தமிழர்களின் அடையாளங்கள், அறிவியல் ஆராய்ச்சிகள் நாம தெரிஞ்சிகிறோம்னா??? 5 லட்சம் ஓலை சுவடியையும் படிச்சா???? இந்த ஆராய்ச்சிகளே தமிழன் தான் மூத்தவன் என்று சொல்லும் பொழுது.. அவை இருந்திருந்தால்,, நினைத்து கூட பார்க்கவில்லை.. எந்த நாட்டு ராஜாவும் நம் காலடியில் தான்...

"தமிழன் என்று பெருமையுடன் சொல்லடா "

தமிழன் என்கிற திமிர் கொள்வோம்

2016-04-23 15:51:09 by arul unique
HOT

தமிழின் பெருமை!
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.
அவற்றைத் தெரிந்து கொள்வோம், இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக
விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
அ __எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த

2016-03-30 10:58:47 by Sasi
Back to Top

Popular Tufs

Aboorva Raagangal Rajinikanth Dialogue

Aboorva Raagangal Rajinikanth Dialogue

On This Auspicious Day Of

On This Auspicious Day Of

Thought of the day

Thought of the day

there are more bacteria in

there are more bacteria in

Thamizh Ilakkiyam Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Thamizh Ilakkiyam category.