சாலை பாதுகாப்பு வாசகங்களில் சிலவற்றை படிப்போம்.

(1)நடைபாதையில் நடப்போம்! நலமுடனே பயணிப்போம்!!
(2)பொறுமையாக ஓட்டுவோம்! பிறரை பொருட்படுத்தி ஓட்டுவோம்!!
(3)விதிகளை மதிப்போம்! வேதனைகளை தவிர்ப்போம்!!
(4)சிக்னலை மதிப்போம்! சிக்கலை தவிர்ப்போம்!!
(5)கவனமாக ஓட்டுவோம்! காலமெல்லாம் வாழ்வோம்!!
(6)வாகனத்தை நிறுத்தி செல்போன் பேசுவோம்!
(7)தலைக்கவசம் அணிவோம்!சீட் பெல்ட் அணிவோம்!!
(8)படியில் பயணம்! நொடியில் மரணம்!!
(9)இடைவெளி காப்போம்! இன்னலை தவிர்ப்போம்!!
(10)போதையில் பயணம்! பாதையில் மரணம்!!
(11)வேகம் சோகத்தை தரும்! நிதானம் நிம்மதியை தரும்!!
(12)வளைவில் முந்தினால் மரணம் வருவது உறுதி!!
(13)தூக்கத்தில் ஓட்டினால்! துக்கமே வரும்!!
(14)சாலையில் அலட்சியம்! சாவது நிச்சயம்!!
(15)முறையான இயக்கம்! முத்தான பயணம்!!
(16)பொறுப்புடன் ஓட்டுவோம்! சிறப்புடன் வாழ்வோம்!!
(17)விதி மீறாமல் ஓட்டுவோம்!விதி மீறுபவர்களையும் வீழ்த்தாமல் ஓட்டுவோம்!!
(18)பாதுகாப்பாக ஓட்டுவோம்! பிறரையும் பாதுகாத்து ஓட்டுவோம்!!
(19)சாலையில் கவனமாக ஓட்டுவோம்! சந்திப்புகளிலும் கவனமாக ஓட்டுவோம்!!
(20)பொறுமையுடன் ஓட்டுவோம்! பொறுமை இல்லாதவர்களையும்
காப்போம்!!
(21)அனுசரித்து ஓட்டுவோம்! அனைவரையும் காப்போம்!!
(22)சகிப்புத்தன்மை கடைப்பிடிப்போம்! சண்டைக்காரர்களையும் திருத்துவோம்!!
(23)எதிர்பார்த்து ஓட்டுவோம்! எந்த சூழலிலும் காப்போம்!!
(24)மனமே கவனம்! மனது அறியாததை கண்களும் பார்ப்பதில்லை! காதுகளும் கேட்பதில்லை!! மூளையும் உணருவதில்லை!!!
(25)மன நலமும்,உடல் நலமும் உயிருள்ளவரை அழியாத சொத்து!
(26) மது,போதை, புகைப் பழக்கத்தை விட்டொழிப்போம்!மனதையும் உடலையும் காப்போம்!!
(27)சாலைவிதிகளை மதித்தால், விபத்தில்லா பயணம் சாத்தியமே!!
(28)சாலை பாதுகாப்பு! சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு!!
(29)சாலை பாதுகாப்பு! நமது உயிர் பாதுகாப்பு!!
(30)வாகன அறிவும்,சாலை அறிவும்! வாழ்நாள் பாதுகாப்பு!!
(31)புத்தாக்கப்பயிற்சி பெறுவோம்! புதுப்பித்தல் கல்வி பெறுவோம்!!
(32)பொது வாகனத்தை பயன்படுத்துவோம்! தனி வாகனத்தை தவிர்ப்போம்!!
(33)காவலர்கள் நமக்கு தோழர்கள்! மதிப்போம் மனித நேயம் காப்போம்!!
(34)முதலுதவி முக்கியமாக கற்போம்!!
(35)ஆயுள் காப்பீடு,மருத்துவ காப்பீடு,வாகன காப்பீடு ,விபத்து காப்பீடு அனைவருக்கும் அவசியம்!!
(36)ஓய்வின்றி ஓட்டாதீர்! உயிருடன் வாழ்வீர்!!
(37)ஒற்றை விளக்குடன் ஓட்டாதீர்! ஒழுக்கத்தை கடைப்பிடிப்பீர்!!
(38)இரவில் வெளிச்சத்தை தாழ்த்துவீர்! வாழ்நாளை நீட்டிப்பீர்!!
(39மறைவுப்பகுதிகளிலும்,வளைவுப்பகுதிகளிலும் விழிப்புடன் பயணிப்பீர்!!

2017-07-20 21:40:01 by Zhang Wei

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...
அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.

உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

மருத்துவம் தவிருங்கள்!

ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......!

2017-03-31 16:09:33 by William James

Easy way to quit

Easy way to quit smoking..

2017-02-24 12:29:40 by priyaganesh

Thamizh

Thamizh Pazhamozhi..

2017-02-24 12:27:57 by priyaganesh
HOT

                                                                                                                                                                                                                                                                      100

பேப்பர் கப்... உஷார்!

'என் நண்பர் ஒருவர் வயிற்று வலியால் ரொம்பவே சிரமப்பட்டார். பல பரிசோதனைகளுக்குப் பிறகு நண்பரின் வயிற்றில் மெழுகு படிந்து இருந்ததை டாக்டர் கண்டுபிடித்தார். வயிற்றில் எப்படி மெழுகு? சிற்றுண்டிச் சாலைகளில் பயன்படுத்தும் பேப்பர் கப்களில் அடிக்கடி டீ, காபி குடிப்பது நண்பரின் வழக்கம். அந்த கப்களில் இருந்த மெழுகுதான் நண்பர் வயிற்றுக்கு இடம் மாறி வயிற்று வலிக்குக் காரணமாகி இருக்கிறது. சூடான டீ, காபி ஊற்றும்போது, கப் கரைந்துவிடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில் ஒருவித மெழுகு பூசப்படுகிறது. இப்படி மெழுகு பூசப்பட்ட பேப்பர் கப்களில் சூடான டீ அல்லது காபி நிரப்பப்படும்போது, அந்த வெப்பம் காரணமாக, பேப்பர் கப்களில் இருக்கும் மெழுகும் கூடவே கொஞ்சம் உருகி, டீ - காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள்ளும் சென்றுவிடுகிறது. அது நாளடைவில் வயிற்றில் பல உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. டீ, காபி அருந்துவதற்குக் கண்ணாடிக் குவளைகளே சிறந்தவை. சில்வர் டம்ளர்களையும் உபயோகிக்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அனைவரும் இதைப் பின்பற்ற வேண்டும். தயவுசெய்து இந்தச் செய்தியை அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!''

- இப்படி ஒரு பதிவு சமீபத்தில் ஃபேஸ்புக் பக்கங்களில் வலம் வந்தது. படித்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி. பிளாஸ்டிக் தட்டுகள், டப்பாக்கள், டம்ளர்கள் ஆகியவற்றின் மூலம் உணவு உட்கொள்வதால், நம் உடலில், என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்? மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம்.

''பேப்பர் கப், டம்ளர் போன்றவற்றில் தண்ணீர் ஊற்றும்போது கரைந்துவிடாமல் இருக்க மெழுகு தடவப்படுவது உண்மைதான். மரப்பிசினில் இருந்து எடுக்கப்படும் மெழுகை மட்டுமே பேப்பர் கப் செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை அமெரிக்காவின் 'எஃப்.டி.ஏ’ ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இன்று பெரும்பாலும் நம் நாட்டில் 'பெட்ரோ-கெமிக்கல்’ மெழுகுதான் பயன்படுத்தப்படுகிறது. அது பல பின்விளைவுகளை உண்டாக்கும்.

பேப்பர் கப்பால் மட்டும் அல்ல. இன்று அதிக அளவில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேப்பர் பிளேட், பாத்திரம், டம்ளர் போன்ற பொருட்களால்கூட நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. உணவு வகைகளில், காரத்தன்மை அதிகமாக இருந்தால், அது பிளாஸ்டிக்குடன் சேர்ந்து நச்சுத்தன்மை உடையதாக மாறும். பிளாஸ்டிக் டப்பா அல்லது தட்டுகளில் வைத்து ஏதோ ஒரு நாளோ, இரண்டு நாளோ உணவு சாப்பிட நேரும்தான். ஆனால், அதுவே வழக்கமாக மாறும்போது ஒவ்வாமை முதல் புற்றுநோய் வரைக்கும் நம்மைக் கொண்டுபோய் நிறுத்திவிடும்!'' என்று எச்சரிக்கிறார் சித்த மருத்துவரான சிவராமன்.

''இதுபோன்ற மலிவான பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைக்கும்போது உணவில் இருக்கும் நுண் சத்துக்கள் அதாவது மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் சிதைந்துவிடும். ஆகையால் இவை தவிர்க்கப்பட வேண்டியவை'' என்பது கேஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்டான சந்திரமோகனின் கருத்து.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மற்றும் சுற்றுச்சூழல் நச்சு இயல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் கார்த்திகேயனும் இதே கோணத்தில்தான் பேசுகிறார். ''பிளாஸ்டிக் நெகிழும் தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்பதற்காக சில கூட்டுப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்தக் கூட்டுச் சேர்க்கையை 'பிளாஸ்டிசைஸர்’ என்பார்கள். சுமார் 100 விதமான பிளாஸ்டிசைஸர்கள் இன்றைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உணவுப் பொருட்களைச் சேமிப்பதற்கு என்றே 'ஃபுட் கிரேட் பிளாஸ்டிக்ஸ்’ என்ற தனி ரகம் உள்ளது. அதிலும் 'உணவுத் தரக் கட்டுப்பாடு’ முறையின் கீழ் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பேப்பர் கப்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், ஹோட்டல்களில் சாம்பார், ரசம், சட்னி போன்றவற்றைக் கட்டப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள் போன்ற அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டியவை. பிளாஸ்டிக் பொருளில் சில வேதிப் பொருட்கள் இருக்கின்றன. அதேபோல உணவுப் பொருட்களிலும் சில வேதிப் பொருட்கள் இருக்கின்றன. பிளாஸ்டிக்கில் இருக்கிற வேதிப் பொருள் உணவில் இருக்கும் வேதிப் பொருளுடன் கலப்பதை 'மைக்ரேஷன்’ என்போம். உணவு நச்சுத்தன்மை கொண்டதாக மாறுவதற்கு இதுதான் காரணம். உணவு வகைகளை பிளாஸ்டிக் பொருட்களில் சேமித்துவைப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது!'' என்கிறார் கார்த்திகேயன்.

''பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படுமா?'' என புற்றுநோய் நிபுணர் ராஜாவிடம் கேட்டோம். நம் பதற்றத்தை உணர்ந்துகொண்ட அவர், ''பிளாஸ்டிக் தட்டுகள், கப்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி உணவைச் சாப்பிடுவதால், புற்றுநோய் ஏற்படும் என்பதற்கான நேரடியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை என்றாலும், மினரல் வாட்டர் மற்றும் குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்யப் பயன்படுத்தும் பெட் பாட்டில்களைத் தொடர்ச்சியாக மாதக்கணக்கில் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கூடும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன'' என்கிறார்.
''40 மைக்ரான் அடர்த்திக்குக் கீழே உள்ள பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், இன்னும் பல ஹோட்டல்களில் அந்தச் சட்டத்தை மதிக்காமல், சாம்பார், ரசம், சட்னி போன்ற உணவு வகைகளை மிக மெல்லிய பிளாஸ்டிக் பைகளில்தான் கட்டித் தருகிறார்கள். இது மிகவும் தவறு. இதற்காக அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடியும்.
உணவு வகைகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டிக் கொடுப்பதைவிட, வாழை இலை, தேக்கு இலை போன்ற இயற்கையான பொருட்களில் கட்டிக் கொடுக்க நுகர்வோர் கட்டாயப்படுத்தலாம். பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தாமல் இருப்பது நுகர்வோரின் கைகளில்தான் இருக்கிறது!'' என்பது 'நுகர்வோர் ஆலோசனைக் குழு’ அமைப்பைச் சேர்ந்த சரோஜாவின் கருத்து.

நம் வசதிக்காகப் பயன்படுத்தும் பொருள்தான் பிளாஸ்டிக். ஆனால், அந்த வசதியே நம் உடல் நலத்துக்கு எதிராகத் திரும்புகிறது என்றால், நாம் விழித்துக்கொள்ள வேண்டாமா?

மண் பானை மகத்துவம்!

குடிநீரை பிளாஸ்டிக் கேன்களில் நிரப்புவதற்குப் பதிலாக, சில்வர் ஃபில்டர்களில் நிரப்பிவைத்துப் பயன்படுத்தலாம். தண்ணீரைக் காய்ச்சி, ஆறவைத்து அதை மண் பானைகளில் நிரப்பிக் குடித்தால்... குளிர்ச்சிக்குக் குளிர்ச்சி, ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!

கொழுப்புச் சத்து அதிகம் உள்ள அசைவ உணவுகளில் பிளாஸ்டிக் மிக வேகமாக 'மைக்ரேஷன்’ நடத்தும். அப்போது பிளாஸ்டிக்கின் வேதிப் பொருட்கள் அசைவப் பொருட்களுடன் கலந்து நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவிடும்.

பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்படும் உணவுப் பொருட்கள், குளிர்பானம் போன்றவற்றை முடிந்த வரை தவிர்த்துவிடுங்கள். அவற்றில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், 'மைக்ரேஷன்’ மிக வேகமாக நடக்கும்.

2016-12-20 18:11:59 by sundu
HOT

   18                                                                                           8                                                                                                                                                                             15          10          15            15

கணினியை பார்க்கும் கண்களுக்கு 18 ஆலோசனைகள்!

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

கண்களை பாதுகாக்க:

1. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.

2. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

3. கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

4. மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

7. முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம்.

8. பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

9. அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

10. அ‌ப்படி செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம்.

11. மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

12. புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன.

13. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

14. பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

15. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

16. அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது.

17. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது.

18. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

அவசியம் ஷேர் பண்ணுங்க...!!!

2016-12-10 15:34:01 by Sasi
HOT

  2 12

அம்மாவின் கருவறையில் 2 1/2 மாத கால கருவலரும் நிலை

2016-12-10 14:09:52 by sundu
Back to Top

Popular Tufs

Life is like a camera

Life is like a camera

Barcelona  Spain

Barcelona Spain

Amazing Health Benefits of Mint

Amazing Health Benefits of Mint

default thumb image

170

Payanulla Thagavalgal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Payanulla Thagavalgal category.