HOT

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக...

Apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது. யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன். அதிர்ச்சியாக இருந்தது. PLU code (price lookup number) இதனை வைத்து நாம்சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணுமாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

எவ்வாறு அறிவது:

1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதிஉரம் கலந்தது...

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" எனஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" எனஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.

பயனுடைய‬ தகவல் என நீங்கள் நினைத்தால் நண்பர்களோடும் பார்த்துக்கொள்ள மறக்காதீர்

2016-05-31 18:45:22 by Sanju

ஒரே ஒரு
ஷேர் பண்ணினால்

ஒரே ஒரு
மாணவனாவது

பயன்பெறமாட்டானா

2016-05-18 18:21:06 by Vishnu

உங்கள் டூத்பேஸ்டில் உப்பு இருக்கிறாத என்று பார்ப்பதைவிட...
என்ன கலர் என்று பார்த்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...

நாம வாங்கற டூத் பேஸ்டின் கீழ் பட்டையா கலர்கோடு ஒன்று இருக்கும் .

பச்சை ,ஊதா , சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும்.
அந்த கலர்களின் அர்த்தம் ,

பச்சை - இயற்கை
ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை .

இனி டூத் பேஸ்ட் வாங்கும்போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள். ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும்..

2016-05-09 17:31:00 by arul unique

தயவு செய்து: ஒரு இரண்டு நிமிடம் படியுங்கள் நண்பர்களே

விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?!

பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் , அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று .

இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன , பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள் . பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள் . புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர் . பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் பொறாமையாக பார்த்துகொண்டிருந்தனர். பணக்காரர் வந்தார் காரை புதைக்கும் ஏற்பாடுகள் துவங்கியது.சிலர் நேரிலேயே அவரின் பைத்தியக்காரத்தனத்தை திட்டிதீர்த்தனர். விலை உயர்ந்த பொருளை இப்படி வீணடிக்கிறீர்களே இது எப்படி உங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படும் அதற்கு பதில் யாருக்காவது தானமாக கொடுத்தால் அவர்களுக்காவது பயன்படுமே என்று கோபத்துடன் கேட்டனர்.

அப்போது திடீரென அந்த பணக்காரர் சொன்னார்.நான் காரை புதைக்கவில்லை யாராவது அந்த முட்டாள் தனத்தை செய்வார்களா , உங்கள் எல்லோருக்கும் ஒரு உண்மையை உணர்த்தவே இப்படி வித்யாசமாக விளம்பரப்படுத்தினேன் என்றார் . என்ன உண்மை என்றனர் அனைவரும். இந்த கார் பத்து லட்சம் யூஎஸ் டாலர்தான் இதை புதைக்கிறேன் என்றவுடன் கோபப்பட்டு கேள்வி கேட்கிறீர்களே நான் உங்களை ஒன்று கேட்கிறேன் இதைவிட விலை மதிப்பில்லாதது மனித உடல் உறுப்புகள் . இதயம் , கண் , நுரையீரல் , கிட்னி, தோல், என மனித குலத்துக்கு பயன்படும் மதிப்புமிக்க உடல் உறுப்புகளை புதைப்பதால் என்ன லாபம், யாருக்காவது தானமாக தரலாமே,

லட்சக்கணக்கானவர்கள் உடல் உறுப்பு தானத்தை நம்பி வாழ்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உடல் உறுப்புகள் பயன்படட்டுமே உடலுறுப்பு தானம் செய்யுங்கள் , அதை உணர்த்தவே இந்த நாடகம் என்றாராம் . பழைய விஷயம் தான் அதை மாற்றி யோசித்த அவர் ஆழமாக மனதில் பதியவைத்துவிட்டார்

2016-04-28 12:02:05 by arul unique

Protect environment

Protect environment

2016-04-27 10:40:50 by muthamil

உமிக்கரியுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினோம் அன்று !உப்பு இருக்கா எலுமிச்சை இருக்கா என்று தேடி அலைகிறோம் இன்று !ஒழுங்கா பல்விளக்கி குளிக்க தான் இந்த மெஸேஜ்...

2016-04-24 12:11:19 by arul unique

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???

1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது

2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்

3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்

4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது

5. ஆயில் புல்லிங்

6. காம்பிளான் குடித்தால் வளரலாம்

7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா

8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா

9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி

10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்

வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன் ????

நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின
அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்

அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமையம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச்சென்றது

பின்விளைவு

பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளிநாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று

சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்

பின்விளைவு

அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து
உணமையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா மைதா

சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல்

டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது

இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று உணராமல்

இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள் நாளை நீங்கள் உங்களையே இழந்துவிடுவீர்கள்

"அதற்கான இரண்டாவது ஏற்பாடுதான் கெயில் கேஸ் குழாய்கள்"

இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்

மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல
மருத்துவமனைகள் அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..

2016-04-24 10:51:54 by geethaa

இரவு நேர இரயில் பயனத்தின்போது இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டுவிடுவோம் என்ற பயம் இனி வேண்டாம்.. உங்கள் கைபேசியில் 139 க்கு டயல் செய்து வழிமுறைகளின்படி உங்கள் PNR எண்ணை பதிவு செய்தால் போதும். நீங்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும் உங்களுக்கு எச்சரிக்கை அழைப்பு வந்துவிடும்.
பலருக்கு பயன் தரக்கூடிய தகவல். பகிரலாமே..

2016-04-24 10:48:51 by geethaa

 Head Rest    head rest          Fire accident door lock    head rest    window      Non breaking coating     life saver

கார் Head Restன் அவசியத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..
கார் டாப் டக்ராக இருப்பினும் ஏன் head rest மட்டும் இரண்டு கம்பிகளோடு குச்சி வைத்து குத்தி புடுங்குவது போல் எல்லா கார்களிலும் டிசைன் செய்யப்பட்டு உள்ளது என்று யோசித்தது உண்டா?
கார், தண்ணீரில் மூழ்கினாலோ இல்லை Fire accident நடந்து door lock ஆகி அவதி பட்டாலோ நீங்கள் இந்த கார் head rest ட்டை சீட்டில் இருந்து கழட்டி உள் இருந்து கார் window வின் ஜன்னல் கண்ணாடியை எளிதாக உடைக்கமுடியும்.
அதைப் போல் கார் கண்ணாடியை உள் இருந்து உடைப்பதும் எளிது. Non breaking coating எப்போதும் கார் கண்ணாடியின் வெளிப்புறம் மட்டுமே பூசப்பட்டு இருக்கும்.அவசர காலங்களில் இது ஒரு life saver ராகவும் இருக்கலாம். ஜப்பான் சுனாமியில் காரில் மூழ்கி தவித்த பலர் தங்களை இப்படித்தான் காப்பாற்றிக் கொண்டார்களாம்.
இது ஜப்பானில் பள்ளி பாடத்தில் இருக்கிறதாம்.

2016-04-24 10:27:23 by arul unique

இந்தக் கொடுமையான வெயிலில் இருந்து நம்மையும் காப்போம் நம்மைப் போல் மற்ற உயிர்களையும் காப்போம்

2016-04-24 10:20:28 by arul unique
Back to Top

Popular Tufs

Good Morning

Good Morning

No love awesome pics

No love awesome pics

default thumb image

Seven rockets found on railway

Happy Republic Day Latest Images

Happy Republic Day Latest Images

Payanulla Thagavalgal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Payanulla Thagavalgal category.