கர்நாடகாவில் நடக்கிற வன்முறை செயல்களுக்கு எவ்வித எதிர்வினையும் புரியாமல் தமிழகம் அமைதியாக இருப்பதா என நம்மவர் சிலர் ஷோல்டரை தூக்குகிறார்கள். இதற்கு ஒரே வரியில் பதில் சொல்லவேண்டுமென்றால் அறிவிலித்தனத்துக்கு பதிலடியாக நாமும் அறிவை இழக்கவேண்டியதில்லை!

தமிழ்நாடு பதிலடி தரவேண்டும் என்றால் என்னவென்று புரியவில்லை! என்ன பன்னனும்? இங்குள்ள கர்நாடகா ரிஜிஸ்ட்ரேஷன் வண்டிகளை அடிச்சு உதைக்கனுமா? இல்லை கர்நாடகா நிறுவனங்களைத் தாக்கவேண்டுமா?

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால் மாநிலம் முழுவதற்குமான வளர்ச்சி. தமிழ்நாட்டில் சென்னையில் ஒருத்தர் எத்தகைய வாழ்க்கைத்தரத்தை அனுபவிக்கிறாரோ அதே தரத்தை கிட்டதட்ட மாநிலம் முழுவதுமே அவருக்கு கிடைக்கும். சென்னையை போன்ற கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி என மாநிலம் முழுவதும் சமச்சீரான வளர்ச்சி உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் அப்படி கிடையாது. அவர்களது எல்லா வளர்ச்சியும் பெங்களூரு மட்டுமே. பெங்களூருவில் கிடைக்கும் தரத்தை, அந்த வளர்ச்சியை அவர்களால் மாநிலம் முழுவதும் பெற முடியவில்லை.

கர்நாடகாவின் தொழில் வளர்ச்சி முழுக்க பெங்களூருவையே மையம் கொண்டுள்ளது. இதை வேண்டுமானால் எழுதிவைத்துக்கொள்ளவும். பெங்களூருவிலோ, கர்னாடகாவிலோ இதேபோல தொடர்ந்து வன்முறை நீடித்தால் கர்நாடகம் என்ன பெங்களூருவே கூட தொழிற்துறையில் பின்தங்கிப்போகும்! பெங்களூரு நகரத்தில் நிலவும் சீதோஷ்ணம் காரணமாக அங்கு குவிந்த ஐடி கம்பெனிகள் பெங்களூருவில் இனி புதிதாக யாரும் வரமாட்டார்கள். இருப்பவர்களும் அங்கிருந்து விலகவே பார்ப்பர்!

சில கன்னடர்களின் முட்டாள்தனமான செயல்களால் ஒட்டுமொத்த பெங்களூருவின் வளர்ச்சியும் பின்னுக்கு போக போகிறது. தமிழ்நாட்டையும் சரி தமிழர்களையும் சரி நம்முடைய சமயோசித சாதுர்ய நடவடிக்கைகளால் மட்டுமே நாம் தொடர்ந்து முன்னேற்ற முடியும். எல்லா மதத்தினரும், எல்லா சாதியினரும், எல்லா இனத்தவரும் வாழ்வதற்கு பாதுகாப்பான இடம் தமிழ்நாடு என்பது தான் நமக்கு பெருமையும், வளர்ச்சிக்கு காரணமே தவிர கன்னட பேருந்துகளை எரிப்பதோ, நிறுவனங்களை கொளுத்துவதோ அல்ல!

அன்புடன்
உங்களுக்காக. தமிழன்

2016-09-18 08:05:35 by Sanju

*தமிழா முழுமையாக படி*


கூட்டி கழிச்சி பாருங்க... கணக்கு சரியா வரும்....

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கலைக்கவும், விரைவில் நடைபெறப்போகும் தேர்தலில் பிஜேபி ஆட்சியை பிடிக்கவும் பிஜேபி கும்பல் அங்கே கலவரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை விரைவில் எதிர்நோக்கியுள்ள சொத்துகுவிப்பு வழக்கின் பிராதான மனுதாரரான இப்போதைய காங்கிரஸ் கர்நாடக அரசை பதவியிலிருந்து அகற்றுவது ஜெயாவுக்கு மிகவும் தேவையான ஒன்று (need of the hour). அங்கே பிஜேபியின் ஆட்சி அல்லது கவர்னர் ஆட்சி அமைத்தால், ஆச்சாரியாவுக்கு பதிலாக ஜெயாவுக்கு தோதான அரசு வக்கீலை நியமித்து சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து ஜெயா சுலபமாக வெளியே வந்துவிடலாம்..

எனவே, கூட்டி கழிச்சி
பாருங்க... கணக்கு சரியா வரும்....இப்ப தெரியுதா ஆத்தா ஏன் அமைதியாக உள்ளார் என்று...

பெங்களூரு கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. அதற்கு வசதியாக 600 கிரிமினல்கள் பெங்களூரு சிறைகளில் இருந்து வெள்ளிக்கிழமை மாலையில் விடுவிக்கப்பட்டனர். கலவரம் முடிந்த பிறகு அவர்கள் மீண்டும் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு தான் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

செய்தியாளர் அர்னாப், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் காவிரி விவாதத்தின் பொது வெளியிட்ட பரபரப்புத் தகவல்.

2016-09-18 08:01:31 by Sanju

Cauvery crisis: A long road ahead for business between Tamil Nadu and Karnataka... indiatimes.com

Cauvery crisis A long road ahead for business between Tamil Nadu and

CHENNAI: Ever since trouble broke out over the sharing of water from the Cauvery river, the movement of vehicles between Karnataka and Tamil Nadu has come to a near standstill, hitting business operations of companies ranging from...

2016-09-17 10:51:33 by Agnes Natalia
Back to Top

Popular Tufs

Happy Monday Motivational Quotes

Happy Monday Motivational Quotes

Well done India on winning

Well done India on winning

Related Tuf

Related Tuf

y girls should have all

y girls should have all

Karnataka Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Karnataka category.