அட மாறினா கூட தப்பில்லப்பா ஆனா அர்த்தமே அபத்தமாயில்ல ஆயிடுச்சு

நாம் பல பழமொழிகளை அவ்வப்போது பேச்சு வழக்கில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பல பழமொழிகளை இப்போது தவறுதலாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

உண்மையான பழமொழி என்ன? அவற்றில் சிலவற்றை காண்போம்


"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"

சரியான பழமொழி :
***********************
"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".

விளக்கம் :
**********

இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.

கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.

இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.

கடவுளை நாயாக்கிய பெருமை தமிழர்களையே சேரும்.

மற்றும் சில பழமொழிகள்:
*****************************1. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.

ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - சரி.


2. படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.
************ ************

படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் - சரி.
************* *************


3. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.
*****

ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொண்டவன் அரை வைத்தியன் (கொண்டவன் என்றால் வைத்திருப்பவன்) - சரி.
******


4. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - தவறு.
***

நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு - சரி.
****
( சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு...
அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். )


5. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் - தவறு.

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். - சரி

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.

மாறுவோம்...பிறரை மாற்றுவோம்....

2016-01-11 21:44:57 by prasath
Back to Top

Popular Tufs

Related Tuf

Related Tuf

New year resolutions This year

New year resolutions This year

Shoe Thrown At Rahul Gandhi

Shoe Thrown At Rahul Gandhi

Demonetisation

Demonetisation

Tamil Proverbs Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Tamil Proverbs category.