நிம்மதியாக இருக்கும் வயதில்
மனைவியை தேடுவதும்,

மனைவி வந்தபின் நிம்மதியை
தேடுவதுமே...

ஆண்களின் வாழ்க்கையின் தேடல்...

2015-02-21 12:24:48 by Sanju

உண்மையான தோல்வி

2015-02-19 12:48:04 by Sanju

Boys vs Girls Boys vs Girls

2015-02-19 11:57:20 by Sanju

தன் மனைவியின் பிறந்தநாளை மறந்த
கணவன் இரவு வெகுநேரம்
கழித்து வீடு திரும்பினான்.
மனைவி அவனிடம் என்னை 4 நாட்கள்
பார்க்காவிட்டால் என்ன செய்வீர்கள்
என்று கேட்டாள்.
உடனே கணவன் சந்தோஷத்தில்
அவனையறியாமல்
குதித்து எழுந்து ஆஹா அருமை என்றான்.
முதல் நாள்.
மனைவியை பார்க்கமுடியவில்லை.
இரண்டாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில
்லை.
முன்றாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில
்லை.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நான்காம் நாள்.
வீக்கம் சிறிது குறைந்ததால்
இடது கண்ணோரம்
மனைவி சிறிது மங்கலாக தெரிந்தாள்..

2015-02-17 11:11:50 by Sanju

பாலிடெக்னிக் மாணவ மாணவியர்களின்
கவனத்திற்கு கவனிக்கவும்

பாலிடெக்னிக்
டிப்ளமா படித்து தேர்ச்சி பெற தவறிய

அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும்
தேர்வு எழுத 2 சிறப்பு
வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

தேர்வு கட்டணம் செலுத்த பிப்ரவரி-17
கடைசி நாள்.

உங்கள் நண்பர்களில் யாரேனும்
படித்து முடித்து அரியர்
வைத்திருந்து

தேர்வு எழுதாமல்
விட்டிருந்தால்
உடனே கல்லூரியை தொடர்பு கொள்ள
சொல்லவும்.

இது அனைத்து மாணவர்களுக்குமான
வாய்ப்பு.

Grace Chance
The Government of Tamil Nadu vide its G.O. Ms.
No: 14/Higher Education (B1) Department dated
23.01.2015, granted two special grace chances
(April 2015 and October 2015), to old diploma level
students who have exhausted all chances
(including additional chances) of OR, NR, RR, RS,
C, D, G, J and K schemes.

Application Form for Grace Chance students is
available in the DOTE’s website. Grace Chance
students should submit Xerox copies of mark
sheets for all the passed subjects.
source www.tndte.com \

2015-02-13 11:03:09 by Sanju

காதலர் தின கொண்டாட்டங்கள் தேவையா? எழுத்து.காம் eluthu.com

காதலர் தின கொண்டாட்டங்கள் தேவையா? எழுத்து.காம்

eluthu.com/view-poll/649/%E0%AE%95%E0%AE%BE%E0%...

2015-02-12 14:58:23 by Sanju

கணவன் மனைவி படிக்க வேண்டிய அழகான குட்டிக்கதை..

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார். ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்.

கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்.

வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே!

இலையில் வைத்த ‘ஜாங்கிரியை’ மூத்தவனுக்கு பிடிக்கும்என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்.

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்.

இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? எல்லாம் கியா முய என்று கத்தி தொலையுதுங்க அத்தனையும் குரங்குகள்.!

சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது.. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.. பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே... என்று பாய....

அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா... என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.!

விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், ‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற.. ஓஹோ, அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க...

அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.. இல்லாள் என்றும், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை.

இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்ஒரு பெண்ணின் பங்கு தலையாயது.

அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது..ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால் தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்...

2015-02-12 14:21:41 by Sanju

MARBURG மார்பெர்க்: இன்னொரு எபோலா?

மார்பெர்க் MARBURG

ரத்தக் கசிவு நோய்கள் பலவகை உண்டு. எபோலா, லிஸ்ஸா, கிரிமீயன் காங்கோ போன்றவை தீவிர மானவை. இருப்பதிலேயே மோசமானது எபோலா என்றால், அதைவிட இறப்பு வீதம் அதிகம்கொண்டது மார்பெர்க்தான்

மார்பெர்க் ரத்தக்கசிவுக் காய்ச்சல், எபோலாவின் சகோதரன் என்று சொல்லலாம். கிட்டத்தட்ட அதே அறிகுறிகள், அதே அளவிலான தொற்றும் தீவிரம், பரவும் வேகம், கொல்லும் குரூரம் என்ற வகையில், இது எபோலாவுக்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல. எபோலா முதன்முறையாகக் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிய இதே வருடத்தில், இது மீண்டும் தோன்றியிருக்கிறது என்றால், பரபரப்பின் காரணம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.மார்பெர்க் ரத்தக் கசிவுக் காய்ச்சலுக்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?


உகாண்டாவிலிருந்து வரும் பயணிகள், எபோலா கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதில்லை. மார்பெர்க் காய்ச்சலுடன் எளிதில் நோயாளிகள் கண்டங்கள் தாண்டி வந்துவிட முடியும். அவர்களுக்கு எபோலாவின் அறிகுறிகள் தோன்றி, அதற்கான மருந்து கொடுத்து அது பயன்பெறாமல் போகும் நேரமே மார்பெர்க் பற்றிச் சிந்திக்கத் தொடங்குவார்கள். அதற்குள் நிலைமை மோசமாகிவிட்டிருக்கும். அவர்களைக் கையாண்ட செவிலியரும் நோய் தாக்கம் கண்டிருப்பர். எபோலா போன்றே இதுவும் தீவிரமாகப் பரவுவதால், அறியாமைக்கும் அழிவுக்கும் இடையே உள்ள போராட்டமாக இது வெடிக்கும். ஒரே நேரத்தில் எபோலா, மார்பெர்க் என்று இரண்டு தீவிரமான தொற்று நோய்களை உலகம் சமாளிப்பது மிகக் கடினம். MARBURG    MARBURG

2015-02-02 12:52:50 by Sanju

கிரகணாதி கிரகணங்கட் | kiraganaathi kamal kavithai about God

கிரகணாதி கிரகணங்கட் கப்பாலுமே ஒரு
அசகாய சக்தி உண்டாம்
ஆளுக்கு ஆளொரு பொழிப்புரை கிறுக்கியும்
ஆருக்கும் விளங்காத தாம்
அதைப் பயந்ததை யுணர்ந்ததைத் துதிப்பதுவன்றி
பெரிதேதும் வழியில்லை யாம்
நாம் செய்த வினையெலாம் முன்செய்ததென்றது
விதியொன்று செய்வித்த தாம்
அதை வெல்ல முனைவோரைச் சதிகூடச் செய்தது
அன்போடு ஊழ் சேர்க்குமாம்
குருடாகச் செவிடாக மலடாக முடமாகக்
கரு சேர்க்கும் திருமூலமாம்
குஷ்டகுஹ்யம் புற்று சூலைமூலம் எனும்
குரூரங்கள் அதன் சித்தமாம்
புண்ணில் வாழும் புழுபுண்ணியம் செய்திடின்
புதுஜென்மம் தந்தருளு மாம்
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதி சேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்ப்பததன்
வாடிக்கை விளையாட லாம்
நேர்கின்ற நேர்வலாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதன்நின் செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர் கொல்லி
மன்னர்க்கு தரணிதந்தது காக்குமாம்
நானூறு லட்சத்தில் ஒருவிந்தை உயிர்தேற்றி
அல்குலின் சினை சேர்க்குமாம்
அசுரரை பிளந்தபோல் அணுவையும் பிளந்தது
அணுகுண்டு செய்வித்த தும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்ட தும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார் கருளிடும்
பரிவான பர பிரம்மமே
உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும்
உளமார தொழு சக்தியை
மற்றவர் வையுபயங் கொண்டுநீ போற்றிடு
அற்றதை உண்டென்று கொள்
ஆகமக் குளமூழ்கி மும்மலம் கழி
அறிவை ஆதிகச்சலவையும் செய்
கொட்டடித்து போற்று மணியடித்து போற்று
கற்பூர ஆரத்தி யை
தையடா ஊசியிர் தையனத் தந்தபின்
தக்கதை தையா திரு
உய்திடும் மெய்வழி ஊதாசினித்த பின்
நைவதே நன்றெனின் நை

2015-01-16 10:20:12 by Rajesh Kumar

உங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி eluthu.com

eluthu.com/view-ennam/14103
மிக எளிமையான கேள்வி தான்
IAS தேர்வில் கேட்கப்பட்டது...!

ஒருவர் ஒரு கடைக்கு வருகிறார், கடை காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார்.
கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்குகிறார் கடைகாரர்.

திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை பொருள் வாங்கியவரிடம் கொடுத்துவிட்டார்.
Read More

2014-12-05 11:38:55 by yamuna
Back to Top

Popular Tufs

Green revolution  Floriculture

Green revolution Floriculture

Replies for Ashwins Tweet

Replies for Ashwins Tweet

Govt to table Triple Talaq

Govt to table Triple Talaq

default thumb image

Related Tuf

Tamil Messages Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Tamil Messages category.