இன்றைய சிந்தனை..(01.07.2017...)

"ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.

திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வர வில்லை.மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது.சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்.அந்த மரம் மகிழ்வுடன் அவனை பார்த்து ஏன்.. இவ்வளவு நாள் வர வில்லை? உனக்கு என்ன துன்பம் என்று கேட்டது.

என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்து இருக்கிறார்கள்.. ஆனால், என்னிடம் மட்டும் ஒன்றும் கூட இல்லை, என்றான்.

கவலைப்படாதே ?இந்த மரத்தில் உள்ள பழங் களை எடுத்துச் சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக் கொள்.
என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...
அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.

மறுபடியும் அவன் வர வேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான்.அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்து இருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக மகிழ்ச்சி.. வா என்னிடம் வந்து விளையாடு.. இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டுப் பாடு என்றது.

அதற்கு அவன் இல்லை இப்பொது எனக்கு வயதாகி விட்டது. எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை,

மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை.. அதற்கு பதில் என்னு டைய கிளை களை வெட்டி எடுத்துச் செல் அதில் ஒரு வீடு கட்டிக் கொள் என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல் என்றது.

வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச் சென்றான்.அதற்கு பின் பல வருடங்கள் வர வில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.

மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது.

அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான்.ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாததால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் துன்பப்படு கிறோம் என்றான்.

மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள். அதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது.

அவன் அடி மரத்தை வெட்டும் போது, மறக்காதே.. வருடத்தி ற்கு ஒரு முறை என்று இல்லாமல் எப்போ தாவது என்னை பார்க்க வா என்றது.

ஆனால் அவன் வர வேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.
அப்போது அவன் வந்தான். தலை யெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத் துடன் அவன்இருந்தான்.

அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.

இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை.. கிளைகள் இல்லை.. அடி மரமும் இல்லை.. உனக்கு கொடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது.

அவன் சொன்னான்.. நீ பழங்கள் கொடுத்தா லும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும், படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப் படுகிறது என்றான்.

அப்படியா ..இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக் கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக் கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறை வேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது..ஆம்..நண்பர் களே..

இது மரத்தின் கதை யல்ல.. இன்றைய பெற்றோர்களின் உண்மைக் கதை..இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடினோம்.. வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடு கின்றோம்.அதன் பின் ஏதாவது தேவை அல்லது துன்பம் என்றால் மட்டுமே அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அதுதான்..

2017-07-03 13:53:21 by SekarGV
HOT

பாரதியிடம் சொல்லாதீர்கள் ...
பொந்திலே அவன் வைத்த அக்கினி குஞ்சுகள் பொசுங்கிப் போனதென்று . . . பாவம் அந்த யானையிடம் மீண்டும் மிதி வாங்க ஏங்குவான் . .

ஆங்கிலேயன் முன்னால் சட்டை அவிழ்த்து முடிஞ்சா சுடுடா என்று நெஞ்சை காட்டிய ஜீவாவிடம் சொல்லாதீர்கள்...
நாங்கள் வார்டு கவுன்சிலரைக் கூட எதிர்க்கத் துணியவில்லை என்று! பாவம் நிமித்திய நெஞ்சை குறுகி மடிவான் . .

மனுநீதி சோழனிடம் சொல்லாதீர்கள்... நாங்கள் நீதியற்று சாகிறோமென்று, பாவம் மறு சக்கரத்தில் அவனும் படுத்து உயிர் விடுவான்

வேலுநாச்சியிடம் சொல்லாதீர்கள்...
எங்கள் பெண்கள் சித்திரவதை படுவதை, பாவம் ஏந்திய வாளை உறையில் வைத்துவிட்டு குமுறி அழுவாள் . .

சின்னமலையிடம் சொல்லாதீர்கள்...
நாங்கள் வெளிநாட்டுக்காரனுக்கு இரவு பகலாக வேலை செய்கிறோமென்று, பாவம் சமரசமில்லாமல் வெள்ளையனை எதிர்தவன், சாக உச்சிமலை தேடுவான் . .

ராச ராசனிடம் சொல்லாதீர்கள....
நாங்கள் அரேபிய மன்னர்களுக்கு அடிமையாக வேலை பார்கிறோமென்று, பாவம் பெரிய கோயில் உச்சியிலிருந்து குதித்து மாண்டுபோவான் . .

கட்ட பொம்மனிடம் சொல்லாதீர்கள...

நாங்கள்
வெளிநாட்டு கம்பெனிக்கு கப்பம் கட்டுகிறோமென்று, பாவம் மீண்டும் ஒருமுறை தூக்கில் தொங்கிடுவான் . .

சேதுபதியிடம் சொல்லாதீர்கள்...
நாங்கள் கடலில் சுடுபட்டு சாகிறோமென்று, பாவம் நடுக் கடலில் குதித்து சாவான் . .

வ.உ.சி யிடம் சொல்லாதீர்கள்....
நாங்கள் அடிமையாய் வாழ்கிறோமென்று, பாவம் செக்கை தலையில் போட்டு கொண்டு மடிவான் . .

உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுங்கள்.... நாம் அடிமை வர்க்கமில்லை என்று, பாவம் அவர்கள் சுதந்திரமடையட்டும் . . . ✊✊


படித்ததில் பிடித்தது

2017-06-28 18:08:42 by SekarGV
HOT

நீ . . .நீயாக இரு !*

தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்ய முடியாது . . .
அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
*எனவே நீ . . .நீயாக இரு !*

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
*நீ . . .நீயாக இரு !*

காகம் மயில் போல் அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
*நீ . . .நீயாக இரு !*

நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
*நீ . . .நீயாக இரு !*

பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
*நீ . . .நீயாக இரு !*

ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
*நீ . . .நீயாக இரு !*

நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !
*எனவே நீ . . .நீயாக இரு !*

அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாபம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

அடுத்தவனுக்காக மாறி உனக்காக உள்ளோரை இழக்காதே ! ! !
*நீ . . .நீயாக இரு !*
*நீ . . .நீநீயாகவே இரு !*

2017-06-28 10:22:17 by SekarGV
HOT

காமராஜர் மறைவையொட்டி துக்ளக் இதழில் ஆசிரியர் சோ அவர்கள் எழுதிய தலையங்கம் !!

இன்றும் இது பொருந்தும்.

பெருந்தலைவர் திரு. காமராஜர் மரணத்தின் போது அவர் எழுதிய இரங்கல் கட்டுரை இதோ!!!
''இனிமேல் என்ன இருக்கிறது?" என்ற கேள்விதான் மற்ற எல்லாக் கேள்விகளையும்விட முதலில் எழுந்தது . மீண்டும் மீண்டும் எழுகிறது.
யாராலும் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் தோன்றிவிட்டது என்ற எண்ணம்தான் மேலிடுகிறது...
மனம் சாய்ந்தபிறகுதான் சாய்ந்தது அந்த உடல். சந்தேகமில்லை. அந்த மனத்தைச் சாய்த்தவர்கள் பலரும் ஒன்றுகூடி சாய்ந்துபோன உடலுக்கு மரியாதை செலுத்தினோம். வாழும்போது அவர் மனத்துக்கு நாம் செய்த தவறுகளைப் பொறுத்துக்கொண்ட அந்த மனிதன், செத்த பிறகு அவர் உடலுக்கு நாம் செய்த மரியாதையையும் பொறுத்துக்கொண்டார் என்ற நினைப்புத்தான் நெஞ்சை அழுத்துகிறது.
''ஒரு சரித்திரம் முடிந்தது" என்று சொல்வார்கள் . "ஒரு சகாப்தம் முடிந்தது" என்று சொல்வார்கள். "ஒரு தியாக பரம்பரை முடிந்தது'' என்று சொல்வார்கள் . ''எல்லாமே முடிந்துவிட்டது" என்று சொல்வதுதான் உண்மையோ என்ற சஞ்சலம் வாட்டுகிறது.
மனவேதனை பெரிதாக இருக்கிறதென்றால் , வெட்கமும் அவமானமும் அதைவிடப் பெரிதாக இருக்கிறது. துக்கம் பெரிதாக இருக்கிறதென்றால் , விரக்தி அதைவிட அதிகமாக இருக்கிறது.
வருடத்திற்கு ஒருமுறை நாம் நினைத்துப்பார்க்கும் நல்லவர்கள் பட்டியலில் அவரும்
சேர்ந்தாகிவிட்டது. நாம் நினைத்துப்பார்க்கும் நம் வயிறுகள் மிஞ்சியிருக்கின்றன. கோடானுகோடி வயிறுகளின் நினைப்பையே தனது மனத்தில் நிறுத்தியிருந்த அந்த மனிதர் போய்ச்சேர்ந்துவிட்டார்.
மற்றவர்களையெல்லாம் வாழவைக்க நினைத்த அந்த மனிதனை , வாழவேண்டிய விதத்தில் வாழவைக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து "வாழ்க'' என்ற கோஷம் வானதிரக்கிளப்பி , அவரை வானுலகிற்கு அனுப்பிவிட்டோம்.
நேர்மை விடைபெற்றுக்கொண்டுவிட்டது. பொதுப்பணி , சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டுவிட்டது. தியாகம், நமது நன்றி தேவையில்லை என்ற எண்ணத்தில் நம்மைவிட்டு எங்கோ மறைந்துவிட்டது.
திரு.காமராஜ் அவர்களின் மறைவு நம்மை ஒரு சூன்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதை இப்போது நாம் உணரமாட்டோம். வருங்காலத்தில் "அவர்மட்டும் இப்போது இருந்திருந்தால்...!" என்ற வருத்தம் அடிக்கடி தோன்றத்தான் போகிறது. சந்தேகமில்லை.
காலம் நமக்குப்புகட்டாத பாடத்தை , காலதேவன் நமக்கு சொல்லிக் கொடுத்துவிட்டான். ''எடுத்துச் செல்கிறேன் இவரை! அனுபவியுங்கள் இனி!" என்று சாபமிட்டிருக்கிறான் காலதேவன். செய்த தவறுகளுக்கெல்லாம் அனுபவிப்போம்.... நமக்கு வேண்டியதுதான்.
யாரும் , யாருக்கும் அனுதாபம் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை. சொல்லவேண்டிய அனுதாபங்களை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம். அழவேண்டிய அழுகைகளை நமக்கு நாமே அழுதுகொள்வோம். அனுபவிக்கவேண்டிய தண்டனைகளை இனி நாம்தானே அனுபவிக்கப்போகிறோம்?
இனி நம்மால் அவரை வேதனைப்படுத்த முடியாது. இனி நம்மால் அவரை அவமானப்படுத்த முடியாது. பட்டதுபோதும் என்று போய்விட்டார் அந்த நல்ல மனிதர்.... படவேண்டியது இனி நாம்தான்.....நன்றி துக்ளக்

2017-06-27 10:45:46 by SekarGV

‍‍♀

*மனைவியின் அருமை:*

*நீரின்* அருமை *பயிரில்* தெரியும்!

*நிலத்தின்* அருமை *விளைச்சலில்* தெரியும்!

*கல்வியின்* அருமை *பதவியில்* தெரியும்!

*பணத்தின்*அருமை *வறுமையில்* தெரியும்!

*தாயின்* அருமை *அன்பினில்* தெரியும்!

*தந்தையின்* அருமை *அறிவினில்*தெரியும்!

*நண்பனின்* அருமை *உதவியில்*தெரியும்!

*அண்ணனின்*அருமை *அன்பளிப்பில்* தெரியும்!

*அக்காவின்*அருமை *அரவணைப்பில்* தெரியும்!

*தம்பியின்*அருமை *தயவில்*தெரியும்!

*தங்கையின்*அருமை *விருந்தில்*தெரியும்!

*மகளின்* அருமை *மரியாதையில்* தெரியும்!

*மகனின்* அருமை *சுமையில்* தெரியும்!

ஆனால்

*மனைவியின்* அருமையோ *அனைத்திலுமே* தெரியும்!

ஆனால்!... இது...
அவளின் மறைவிற்கு பின்பே பலருக்கும் புரியும்.

2017-06-26 11:01:18 by SekarGV

worlds made only for richest peoples only................................ worlds made only for richest peoples

2017-06-23 14:44:11 by Sivakumar594cd0a38d7b3
HOT

தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்!
பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்!
காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்.!
நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்...!

ஆக எது கெட்டுப்போகிறதோ!
புழு வண்டு வைக்கிறதோ!
எது அழுகி நாற்றமெடுக்கிறதோ!
எது ஊசிப் போய் வீணாகிறதோ!
எது வண்டு வைத்து குப்பைக்கு போகிறதோ!

அவைகள் மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான தீங்கில்லாத
உணவுப் பொருள்கள்.

3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் பாட்டில் வாட்டர் கேன் வாட்டர் எப்படி நல்ல தண்ணீர் ஆகும்??

பழமுதிர் சோலைகளிலும் ரிலயண்ஸ் பிரஸ் களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரமானாலும் கெடாமல் அழுகாமல் இளமை மங்காது பள பளப்பாக விற்கப்படும்
பழங்கள் காய்கறிகள்
நல்ல தரமான பொருட்களா??

இரண்டு மூன்று மாதத்தில் வீட்டில் அரைக்கப் படும் மிளகாய் பொடி, இட்லிப் பொடியிலேயே
கடும் காரத்தை உள்வாங்கி புழு வண்டு வைத்து கெட்டுப்போகிறது...

பூச்சிக் கொல்லி மருந்து கலந்து பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது மணமாக விற்பனை செய்யப்படும் சக்தி ஆச்சி மசாலா பாக்கெட்டுகள் நல்ல பொருளா??

இல்லவே இல்லை...!

ரெடி மேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சுதான் நஞ்சுதான்...

டி.வி.விளம்பரம் பார்த்து எந்த உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்களை வாங்கினால் அதைவிட மடமையும் முட்டாள்தனமும் வேறு எதுவுமில்லை...

கெட்ட உணவுப் பொருள்களை மெகா கடைகளில் வாங்குவது
ஒரு பொழுது போக்கு சமூக கௌரவமாக மாறி விட்டது...
அதை விடக் கொடுமை..
நோயைப்பற்றி மெகா மருத்துவமனை சிகிச்சை அதன் செலவுகள் பற்றி
உரத்து பேசுவதும் ஒரு சமூக கௌரவமாக கருதப்படும்
அவலமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உணவு முறை , நோய், நலம், மருத்துவம் , சமூகம்
பற்றிய புரிதல் கோளாறே இதற்கெல்லாம் காரணம் வரை முறையற்ற நுகர்வு பண்பாடும் இதற்கு அடிப்படைக்காரணம்...!

உண்மையை உணர்வோம்

2017-04-18 13:53:37 by Sharon
HOT

ரெண்டு அரசு அதிகாரிங்க எதோ பேசிட்ருந்தாங்களாம்...

அப்போ அங்க வந்த ஒரு பத்திரிக்கையாளர் எதப்பத்தி சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்ருக்கிங்கனு கேட்டாப்லயாம்...

அதுக்கு அவங்க,
ஆயிரம் விவசாயிகளையும் நயன்தாராவையும் கொல்ல போறதா அரசாங்கம் முடிவெடுத்துருக்குனு சொன்னாங்களாம்...

அதக்கேட்ட பத்திரிக்கையாளர் நயன்தாராவ எதுக்கு கொல்லனும்னு கேட்டாப்லயாம்...

அப்போ அந்த ரெண்டு அதிகாரிகள்ல ஒருத்தர் இன்னொருத்தர்கிட்ட சொன்னாப்லயாம்...

சொன்னேன்ல...
அந்த ஆயிரம் விவசாயிங்க சாகறதபத்தி இவனுங்க யாரும் கண்டுக்க மாட்டாங்கனு...!!!

சிரிக்க மட்டுமல்ல இது நண்பர்களே...

சிந்திக்கவும்!

2017-04-03 10:28:01 by Kurt Sherwood

Tamilnadu's Condition || Think About It Tamilnadus Condition  Think About It

2017-03-21 09:07:30 by William James
Back to Top

Popular Tufs

default thumb image

Tamil Nadu Live Elections Results

Funny Memes about Tamilnadu Current

Funny Memes about Tamilnadu Current

Gold Toilet Paper

Gold Toilet Paper

Nature says Love

Nature says Love

Tamil Messages Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Tamil Messages category.