*படித்ததில் மிகவும் பிடித்தது: இன்றைய காலகட்டத்தில் 100 கோடிக்கு மேல் வைத்து எடுக்கும் எவ்வுளவோ திரைப்படங்களை பார்கின்றோம் ஆனால் நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு அதனால் என்ன பயன்?????சற்று யோசியுங்கள், பாலற்றின் மொத்த நீளம் 347KM கர்நாடகாவில் 93 கிலோ மீட்டர் பாய்கிறது. ஆந்திராவில் 33 கிலோ மீட்டர் மட்டுமே பாய்கிறது ஆனால் அதில் 25க்கும் மேல் தடுப்பணைகள் உள்ளன கர்நாடகத்திலும் பல தடுப்பணைகளும் ஏரிகளும் இந்த நீரை தேக்கிக் கொள்கின்றன.இந்த பாலாறு நதி நமது தமிழகத்தில் மட்டும் தான் 222 கிலோ மீட்டர் பாய்கின்றது ஆனால் அதில் ஒரு தடுப்பணை கூட இல்லை . மேலும் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீரும் பாலாற்றில் தான் கலக்கின்றன. தமிழகத்தில் பாலாறு செல்லும் இடங்களில் சரியான கரைகளே இல்லை மேலும் தண்ணீர் செல்லக் கூடிய இடங்களில் வெறும் முள் புதர்களும் கருவேல மரங்களே உள்ளன.சரி எவ்வுளவு தான் செலவு ஆகும் இந்த பாலாற்றை சீரமைக்க?? 200கி.மீ உள்ள இந்த பாலாற்றை ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு ஜே.சி .பி இயந்திரத்தை கொண்டு கரைகளை அமைக்க மற்றும் முள் புதர்களை சீரமைக்க நாளொன்றுக்கு சராசரியாக ரூ2500+ வீதம் 5 நாட்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ12,500+/ வீதம் 200 ஆட்களுக்கு ரூ25 லட்சம் ஆகிறது. மேலும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 5 உதவி ஆட்கள் நபர் ஒருவருக்கு அதிக பட்சமாக ரூ1000 வீதம் 5 நாட்களுக்கு 5000ரூ . 200x5= 1000 ஆட்களுக்கு 10 லட்சம் ஆகிறது.200கி.மீ யில் தற்சமயத்திற்க்கு ஒவ்வொரு 25கி.மீ க்கும் 40அடி உயர தடுப்பணை அதாவது 8 தடுப்பணைகள் கட்ட , தடுப்பணை ஒன்றுக்கு சராசரியாக 25லட்சம் வீதம் 8 தடுப்பணைக்கு 2கோடி மட்டுமே . மொத்தத்தில் பாலாற்றை சீரமைக்க மற்றும் ஒழுங்கு படுத்த தோராயமாக 2 முதல் 3 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவாகும்.ஆனால் தமிழகத்தில் இவ்வுளவு மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவணங்கள் இருந்தும் பாலாறு செய்யாறு போன்ற பழமை வாய்ந்த முக்கிய நதிகள் கேட்பாரற்றும் கழிவுநீர் கலந்தும் மாசுபட்டு கிடக்கின்றன.மாற்றுவோம் இந்த நிலைமையை !! நமது தமிழ்நாட்டின் நீர் நிலைகளை காப்போம்... நம்மால் முடிந்தவரை இந்த தகவலை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்போம் அரசு நடவடிக்கை எடுக்கும் வரையில்* good evening

2016-09-18 08:17:42 by Sanju

பெத்தவங்கள ஏன் ...............
"அம்மா"
"அப்பா" ன்னு கூப்பிட்றோம்..!!
எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.?
அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?
அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...?
அ – உயிரெழுத்து.
ம் – மெய்யெழுத்து .
மா – உயிர் மெய்யெழுத்து.
அ – உயிரெழுத்து.
ப் – மெய்யெழுத்து .
பா – உயிர் மெய்யெழுத்து.
தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.
தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். .
இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.
நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!
"மம்மி -என்பது பதப்படுத்தப்பட்ட பிணம்.. ( படித்ததில் மனதில் நின்றது)

2016-09-18 08:02:58 by Sanju

*தமிழா முழுமையாக படி*


கூட்டி கழிச்சி பாருங்க... கணக்கு சரியா வரும்....

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கலைக்கவும், விரைவில் நடைபெறப்போகும் தேர்தலில் பிஜேபி ஆட்சியை பிடிக்கவும் பிஜேபி கும்பல் அங்கே கலவரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை விரைவில் எதிர்நோக்கியுள்ள சொத்துகுவிப்பு வழக்கின் பிராதான மனுதாரரான இப்போதைய காங்கிரஸ் கர்நாடக அரசை பதவியிலிருந்து அகற்றுவது ஜெயாவுக்கு மிகவும் தேவையான ஒன்று (need of the hour). அங்கே பிஜேபியின் ஆட்சி அல்லது கவர்னர் ஆட்சி அமைத்தால், ஆச்சாரியாவுக்கு பதிலாக ஜெயாவுக்கு தோதான அரசு வக்கீலை நியமித்து சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து ஜெயா சுலபமாக வெளியே வந்துவிடலாம்..

எனவே, கூட்டி கழிச்சி
பாருங்க... கணக்கு சரியா வரும்....இப்ப தெரியுதா ஆத்தா ஏன் அமைதியாக உள்ளார் என்று...

பெங்களூரு கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. அதற்கு வசதியாக 600 கிரிமினல்கள் பெங்களூரு சிறைகளில் இருந்து வெள்ளிக்கிழமை மாலையில் விடுவிக்கப்பட்டனர். கலவரம் முடிந்த பிறகு அவர்கள் மீண்டும் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு தான் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

செய்தியாளர் அர்னாப், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் காவிரி விவாதத்தின் பொது வெளியிட்ட பரபரப்புத் தகவல்.

2016-09-18 08:01:31 by Sanju
HOT

காத்திருக்கப் பழகு !!!
-----------------
பசிக்கும் வரை காத்திரு
உடல் நீர் கேட்கும் வரை காத்திரு
காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு
சளி வெளியேரும் வரை காத்திரு
உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு
உலையில் அரிசி வேகும் வரை காத்திரு
பயிர் விளையும் வரை காத்திரு
கனி கனியும் வரை காத்திரு
மரம் மரமாகும் வரை காத்திரு
தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு
தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு
துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு
தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு
உணவு தயாராகும் வரை காத்திரு
"இது உன்னுடைய வாழ்க்கை"
"ஓட்டப்பந்தயம் அல்ல"
ஒடாதே
நில்
விழி
பார்
தேடு
ரசி
சுவை
உணர்
பேசு
பழகு
விரும்பு
உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததனாலேயே,
உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.
உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் நிர்ப்பந்திக்கப்படுகிறது.
அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதாதே.
"நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்"
காத்திருக்கப் பழகு....
வாழப்பழகுவாய்.
நன்றி

2016-09-17 10:54:31 by Sanju

நன்றி: விக்கியுலகம் வெங்கட்
==========================
#செம
====
கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி, கில்லெட் ரேசரில் சவரம் செய்து,
ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும், லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து ,
ஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு
ஜாக்கி ஜட்டியையும் , க்ரூசோ பனியனையும்
பீட்டர் இங்க்லெண்ட் சட்டையையும் , ஆக்சம்பர்க் பேன்ட்டையும் போட்டுக்கொண்டு,
மேகி நூடுல்சை சாப்பிட்டு, நெஸ்கபே காபியை குடித்துவிட்டு
ரீபோக் ஷூவை மாட்டிக்கொண்டு, நோக்கியா போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
ரேபான் கண்ணாடியையை அணிந்து, வெஸ்டார் வாட்சைக் கட்டிக்கொண்டு,
சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,
ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, கொக்கோ கோலா அருந்தி ,
மெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு ,
மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு கே எப் சி பர்கரும்,
குழந்தைகளுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு,
நண்பர்களோடு அமர்ந்து பக்கார்டி ஒய்ட் ரம் அடிக்கும்போது கேட்டான்:
"ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சி?"

2016-09-16 21:23:53 by Sanju

அதிகாலை 'உறவு' கொள்ளுங்கள்..அப்புறம் பாருங்க..? liveday.in

If you want to have a physical relationship with your lovable ones means early morning is the right time- Online Tamil News, General news in Tamil.

liveday.in/dont-miss-headline-news-today/early-...

2016-09-16 17:48:23 by OnlineTamilNews

ட்விட்டர்ல கொத்துக்குறீயிடு மூலமாக மட்டும் கண்டனம் தெரிவிப்போம்

2016-09-13 15:05:32 by rajkumarr
Back to Top

Popular Tufs

I dont care about the

I dont care about the

In Abu Dhabi

In Abu Dhabi

God and Mom

God and Mom

Small Perched Black Monkey

Small Perched Black Monkey

Tamil Messages Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Tamil Messages category.