eluthu.com/kavithai/355359.html
நீ இன்னும் பேசவில்லை
உண்ணும் மனதில்
உனது நிழலின் கண்ணீர்.
நீ நிரம்பியது நினைவில்
அதுவோ உன் காதல்.
....அது
நடுக்குளத்து முதலை.
யூகிக்கும் ஆர்வங்கள்
அலைகளை இழுக்கும் வீடு.
நீ...
இனி...
வரலாம்...
அல்லது...
பனியில் தூங்கும் தேள்
உன் மர்மம்.
சொல்லாத மர்மங்களில்
காதலை உதிர்த்து
உதிர்த்த காதலை
பிடித்தும் வைக்கிறது
காமத்தின் சுளுக்கை
மந்திரிக்கும் யௌவனங்கள்.
பெருகிப்பெருகி
கனன்று அடங்கிப்புகையும்
ஏதோ ஒரு சொல்
ஒலியற்று மொய்க்கிறதா...
அது
என் இரவில் பிழிந்த
அமிலத்தின் கசப்பு...
கொட்ட கொட்ட ஓடி
அயர்ந்து நின்ற உன்னிடம்
தொப்பியேந்தி இரவல் கேட்கும்
என் காதலை மிச்சமிருந்தால்..
eluthu.com/kavithai/355093.html
கிழியுமோ மேப் துண்டுகளாக
புறக்கணிக்கப்பட்ட
அதன் ஆன்மாவில் இருந்து
வெளியேறின பறவைகள்.
தொடங்கப்படுமுன்
முடிக்கப்பட்ட பொய் வரிகள்.
ஓலைக்குடிசையின் சிரங்கில்
காற்று நிரம்பிய் குடங்களில்
கருவறுக்கும் கயமைகளில்
தலை வெளுத்து
அலையும் என் தேசம்.
பசியில் அது தின்றது
கனவுகளையும்...
எடுத்தெறிந்த கற்பனைகளும்.
ஓயாது தின்ற என் தேசம்
அமைதியற்ற குடலுடன்...
விடுதலை வேள்வியில்
சிந்திய ரத்தங்களில்
கால் கழுவியவர்கள்
மட்டும் அரியணையில்.
ஒரு கேள்விதான்
என்று மலரும் சுதந்திர தாகம்?..
மரணம் வரும் வழியில் - ஏனைய கவிதைகள் eluthu.com
eluthu.com/kavithai/354838.html
மரணம் வரும் வழியில்
நீங்களும் எழுதலாம்.
நான் சோர்வுற்றேன்
தளரும் என் மனதில்
பெயர் தருவிக்காமல்
ஒளிந்து எழுதுங்கள்
இரவில் ஓசையாக
உங்கள் வருகையில்
ஒன்றும் நேரப்போவதில்லை
என்றாலும் வரவேற்பேன்.
கீழே கிடக்கும் சொற்கள்
உற்றுப்பாருங்கள் அவை
ஆவிகளின் மாயத்தில்
புனையப்பட்ட புண்கள்.
அடுக்குங்கள் எதிரெதிராக.
சபிக்கப்பட்ட தேவதைகள்
கிளைகளில் நெளிகின்றனர்.
வருவோரின் பிய்த்துப்போட்ட
கனவுகளை அப்பமாக்கி உண்டபடி
அப்பத்தில் வார்த்தைகள் உதிரும்
எழுதுங்கள் கைப்பற்றினால்
வேறென்ன சொல்வது...
இனி காத்திருப்பதெல்லாம்
மரணம் மட்டுமே..
eluthu.com/kavithai/354679.html
பேனா என சொல்லும்போது
அந்தப்பேனா எழுதும்
என் கவிதையை.
எழுதும் அந்தப்பேனா
எனதுபேனா போலல்ல.
இரண்டு வார்த்தைகளில்
மூன்று அரக்கர்களின்
மரணம் குறித்தும் எழுதியது.
இன்னும் சொன்னால்..
ஒரு பகல் பொழுதில்
அசை போடும் பசுவின்
வால் நிறம் பற்றியும்...
நீண்ட சாலையில்
இரவை தேய்த்தபடி
ஒருநாளில் இருந்து
இன்னொரு நாளுள் புகுந்து
வீறிட்டு செல்லும்
கருப்பு வாகன மேற்கூரை பற்றி...
நாளை வரவிருக்கும்
தந்தையின் மரணம் குறித்து
புரிதல் அறியாத ஒரு
குழந்தையின் பால்பவ்டர் பற்றி...
ஹெலிகாப்டரின்
அந்தரங்கம் பற்றி...
விண்டோஸ் பைரஸியில்
சங்கேத குறியீட்டியல் பற்றி...
மெதுக்கீடும் முயல்கள் பற்றி...
பேனா எழுதும் ஒரு கையால்..
eluthu.com/kavithai/354374.html
சிலையும் சில பலிகளும்
அந்தத்தெரு முனையில்
ஓரிரு உடல்கள்.
நான்கு கைகள்
மூன்று தலைகள்
ஏழு கால்கள்
சில அரிவாள்கள்
கொஞ்சம் ஈக்கள்
நாக்குடன் நாய்கள்
காய்ந்த குருதி திட்டுகளும்
ரத்ததுளிகளும் நீரும்...
புரியாத மொழியில்
கிழிக்கப்பட்ட ஆடைகள் கூட.
தெரு அப்படியே இருந்தது.
தெருவில் இருந்த அந்த
அபத்தமான சிலை
ஓரமாய் சின்னதாய்
உடைந்துபோய் இருந்தது.
ஒரு அசட்டு கொத்தனார்
அரைமணிகூரில் சரி செய்வார்.
சரி செய்து விட்டார்.
திமிர் பிடித்த தெருவோ
காமத்தில் முடங்கியதாய்
அப்படியே இருந்தது
எல்லாம் மறந்தது போல்...
eluthu.com/kavithai/354346.html
கொடியில் காயும் ப்ராக்கள்
மாடி கடக்கும்போதெல்லாம்
பட்டுத்தொலையும் கண்களில்
கொடியில் காயும் ப்ராக்கள்.
தொலைவது துரத்தும் மனதை
விடப்போகும் சனியாய்.
நம்பமுடியாத சரித்திர புளுகு
சாத்தான் விண்ட நகத்துண்டு
என்றெல்லாம் சொன்னாலும்
சோர்ந்து பார்க்கும் என் மனம்.
கொடியில் காயும் அதனுடன்
காயக்காய காயும் மனம்
அமிலம் அருந்திய அனலாய்.
நழுவும் சூரியன் எரிப்பது
ஈரம் மட்டுமல்ல எனில்...
நரநரக்கும் விரக்தியில்
கால்கள் தளரும் நடை உடைய.
வெளிறிய நிறங்களில்
இத்தனை சுருக்கங்களா?
குழம்பும் தேனீ கொட்டும்.
மாடியில் ஏறி இறங்கி...
இறங்கி ஏறி ...
மனதில் தொங்கி காயும்!
யார் சொன்னது வேதாளங்கள்
விக்கிரமாதித்தனுக்கு மட்டுமென்று..
eluthu.com/kavithai/354341.html
காதல் சான்றுடன் விளக்குக
நெகிழ்ந்த இரவென
விழுந்த உன் கூந்தலில்
ஒரு கணம் கமழ்ந்து
மணந்த மலரின் வாசனை.
உனது வெயில் குளம்
என் கால் நனைத்தது
பருவத்தில் இடி விழ...
சுவரற்ற வீடுகளில்
தடம் பதித்த உன் பாதம்
இதயத்தில் நீ நடக்கிறாய்.
கனவிலும் கேட்கிறது
உன் குரல்கள் மந்திரங்களாக.
அமிழ்தில் வற்றவில்லை
முதிர்ந்து வரும்போது
யாதும் உன் சொற்கள்.
பற்றலாம் கைத்தலம்
நிலவறிந்த ரகசியத்தின்
துருவில்லா தாழ் முறிக்க.
மன்மத மதத்தில்
கண்கள் எய்தன கணைகள்
பார்வைகள் சார்ந்தன...
இனி சந்திக்கட்டும்
கற்பூரக்கண்கள்
காத்திருந்த காதலில்
கவிதை பயிரிட..
eluthu.com/kavithai/354334.html
காதல் சான்றுடன் விளக்குக
நெகிழ்ந்த இரவென
விழுந்த உன் கூந்தலில்
ஒரு கணம் கமழ்ந்து
மணந்த மலரின் வாசனை.
உனது வெயில் குளம்
என் கால் நனைத்தது
பருவத்தில் இடி விழ...
சுவரற்ற வீடுகளில்
தடம் பதித்த உன் பாதம்
இதயத்தில் நீ நடக்கிறாய்.
கனவிலும் கேட்கிறது
உன் குரல்கள் மந்திரங்களாக.
அமிழ்தில் வற்றவில்லை
முதிர்ந்து வரும்போது
யாதும் உன் சொற்கள்.
பற்றலாம் கைத்தலம்
நிலவறிந்த ரகசியத்தின்
துருவில்லா தாழ் முறிக்க.
மன்மத மதத்தில்
கண்கள் எய்தன கணைகள்
பார்வைகள் சார்ந்தன...
இனி சந்திக்கட்டும்
கற்பூரக்கண்கள்
காத்திருந்த காதலில்
கவிதை பயிரிட..
eluthu.com/kavithai/354289.html
அடுத்த நிறுத்தத்தில் இறைவன்
பெயரற்ற வானத்தில்
நிறுத்தமற்ற மௌனம்.
இறைவன் என்பார்கள்.
உருவத்தில் ஸ்தம்பித்த மனம்
தனித்து தோற்றது
இருப்பின் மீது நகரும் இலையாய்.
நிறங்கள் ஜோடித்த பூமியில்
கண்ணீரில் முளைத்த ஆவியுடன்
பெயரற்ற அவனை அவளை
தேடி அலைகிறேன்
காண்கின்றனர் யாவரும்
ஒவ்வொரு நிறுத்தமும் வயதை
பிடுங்கி கொண்ட காட்சியை.
அருவம் ஊமையான உருவம்.
ஒலிகளில் தப்பிக்கும்
அவனும் அவளும்
பாய்ச்சல் உருகும் காலத்தில்
தொக்கிய நம்பிக்கையில்
தென்படக்கூடுமென்று
விசனம் பீடித்த மனம்.
காட்டப்படக்கூடும்
அடுத்த நிறுத்தத்தில்
அவனும் அவளும்
அவர்கள் என்பது இல்லை
என்பதன் சாட்சி படிமமாய்..
eluthu.com/kavithai/353810.html
மனதின் பொய் தகவல்கள்
அவை பயங்கள்தான்.
அன்றைக்கு தேவையான
அப்பம் முதற்கொண்டு
ஆரத்தி காட்டிடும்
சாதனைகள் வரையிலும்
ஒட்டி வளரும் சாருண்ணி.
யுக்திகள் கூறி குழப்பி பின்
அதிகாரம் செய்யும் மனதில்
பயம் நக்குகிறது விடாமல்.
சாய்ந்த இரவில்
பழி வாங்கும் இவை
மரண எரிச்சல்கள்.
ஆதரவற்ற கண்ணீரை
உறிஞ்சி குடிக்கும் இரவு
மெல்லும் என் துயிலை
காக்கையின் கொத்தலுடன்.
அரவமற்று எழுந்து செல்லவும்
அச்சத்தில் புகையும் கால்கள்.
உருண்டோடுகிறது
உறக்கம் படிகளில்.
காகிதம் பேனா
கற்பனை மனைவி(கள்)
இல்லாது போனால்
இல்லாமல் போயிருப்பேன்..
Tamil Kavithaigal Related Sharing
Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Tamil Kavithaigal category.