Best Love Story in Tamil Language
எத்தனை முறை கேட்டிருப்பேன் என்னை நேசிக்கிறாயா என்று…. ஒரு முறை கூட சொன்னதில்லை உன் நேசத்தை… காலத்தின் சூறாவளி நம்மை எதிரெதிரே எறிந்தது…. இரண்டு மகாமகம் கழித்து இரவு நேர ரயில் பயணத்தில்
எதிர்பாராமல் சந்தித்தோம்…. நேரெதிரே இருந்தும் கூட மவுனம் மட்டுமே நம் பாஷையானது… சிலர் வாழ்க்கையில் விளையாட்டு வினையாகும்… நம் வாழ்க்கையில் விதியே விளையாடியது… நள்ளிரவு கடந்தும் கண்கள் மூடவில்லை…. ரயிலின் சப்தத்தைவிட உன் இதயத்துடிப்பின் ஓசைதான் அதிகமாய் கேட்டது… இது நாள் வரை புரியாமல் இருந்த புதிருக்கு அன்று விடை கிடைத்தது… நீயும் என்னை காதலித்ததை காலம் கடந்து உணர வைத்தது…..
2017-12-27 22:20:01 by Thomas Oliver