ஊழியர் : முதலாளி, நான் வேலையை விட்டு நின்னுடுறேன்.

முதலாளி : ஏன்?... என்னாச்சி?

ஊழியர் : எனக்கு வேற வேலை கிடைச்சிடுச்சி

முதலாளி : எங்கே?

ஊழியர் : பஜாஜ் அல்லையான்ஸ்

முதலாளி : என்ன சம்பளம்?

ஊழியர் : மாதம் 3000 ரூபாய் மட்டும்.

முதலாளி : பைத்தியமா உனக்கு... இப்போ நீ மாதம் 30000 ரூபாய் வாங்கிகிட்டிருக்க.

ஊழியர் : பணம் மட்டுமே ஒருவனுக்கு திருப்தியை தந்துவிடாது முதலாளி. இந்த படத்தை பாருங்க... நீங்களே புரிஞ்சிப்பீங்க!!!             3000    30000

2017-06-29 10:19:02 by SekarGV

செய்தி: வைரஸ் தாக்குதலால் 100 நாடுகளின் கணிணிகள் செயல் இழந்தன......

முக்கிய செய்தி.: தமிழகத்தில் உள்ள அனைத்து கணிணிகளுக்கும் நிலவேம்பு கஷாயம் கொடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு உத்தரவு......

2017-05-18 09:56:21 by Katrin Valentina

#அமைச்சர்செல்லூர்ராஜீ வின் அடுத்த திட்டங்கள்

1. கடல்நீர் ஆவியாவதை தடுக்க குடை பிடிக்கும் திட்டம்...

2. ஒசோனில் உள்ள ஒட்டையை cello tape கொண்டு ஒட்டும் திட்டம்..

3. வெப்பத்தை குறைக்க சூரியனை கம்பளி போர்வையால் போர்த்தும் திட்டம்...

4. அடிபம்பில் இருந்து ஆயில் எடுக்கும் திட்டம்

5. வெயிலின் தாக்கத்தை குறைக்க தமிழகம் முழுவதும் பந்தல் போடும் திட்டம்...

6. ஆற்றுநீர் கடலில் கலப்பதை தடுக்க வாட்டர் பாட்டலில் சேமிக்கும் திட்டம்...

7. அனல்காற்றை தடுக்க தமிழகத்தில் 4 மூலைகளிலும் Ac வைக்கும் திட்டம்...

8. சாக்கடையில் இருந்து சால்னா எடுக்கும் திட்டம்.

9. கொசுவுக்கு குடும்பகட்டுபாடு திட்டம்...

10. மழை நீரை சேமிக்க ஆற்றில் மணல் அள்ளும் திட்டம்...

11. சாலை விரிசலை அடைக்க சிமெண்ட் போட்டு ஒட்டும் திட்டம்...

2017-04-27 07:20:01 by Zhang Wei

Fresher and Manager Funny Conversation Fresher and Manager Funny Conversation

2017-04-03 16:20:01 by Priyadharshini

பசங்க எல்லாரும் பப்ளிக் எக்ஸாம் எழுதிட்டு இருக்காங்க. நீங்க மட்டும் சும்மா இருந்தா எப்படி? அதனாலதான் உங்களுக்கும் ஒரு கொஸ்டீன் பேப்பர் கொடுத்திருக்கோம். எக்ஸாமுக்கு நீங்க ரெடியா மக்களே..?

மொத்த மதிப்பெண்கள் : 100
நேரம் : நல்ல நேரம்

5*2= 10 மதிப்பெண்கள்:
I) சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக:

1. ம.தி.மு.க.விலிருந்து விலகி எத்தனைபேர் ஓ.பி.எஸ் அணியில் இணைந்தனர்?
அ)மூவாயிரம் ஆ)இரண்டாயிரம் இ)ஆயிரம் ஈ)பிம்பிலிக்கா பிலாக்கி

2. தீபா தொடங்கிய பேரவையின் பெயர் என்ன?
அ)ஜெயலலிதா- அம்மா- வேதா பேரவை ஆ)எம்.ஜி.ஆர்- அம்மா -தீபா பேரவை இ)எம்.ஜி.ஆர்- அம்மா- சத்யா பேரவை ஈ)தீபா -அம்மா- விஜயலக்‌ஷ்மி பேரவை

3. இவர்களில் யாரை தனக்கு யார் என்றே தெரியாது என்றார் தம்பிதுரை?
அ)தீபக் ஆ)தீபா இ)நடராஜன் ஈ)தமிழக மக்கள்

4. இவற்றில் எந்தப்படம் 2017ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது?
அ) இங்க்லீஷ் புக் ஆ) ஃபேஸ்புக் இ) நோட்புக் ஈ) ஜங்கிள் புக்

5. பின்வருபவற்றுள் சட்டசபையில் நிகழ்ந்த சட்டை கிழிப்புக்கு காரணமாக விளங்கியது?
அ) ஸ்டாலின் ஆ) அவைக்காவலர்கள் இ) ஆளும்கட்சி ஈ) சட்டை
______________________________________________

6*2 =12 மதிப்பெண்கள்:
II) பொருத்துக
1.சிங்கம் - ஐ.பி.எல்
2.பொதுச்செயலாளர் - சூர்யா
3.மிக்சர் - - விஷால்
4.நடராஜன் - - நாட்டாமை
5.அ.தி.மு.க - - கறிவேப்பிலை
6.சரத்குமார் - - ஓ.பி.எஸ்
- சசிகலா
________________________________________

4*2= 8 மதிப்பெண்கள்:
III) கோடிட்ட இடங்களை நிரப்புக
1. சிரிப்பது__ இயல்பு என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
2. ஒரு அளவுக்கு___தான் பொறுமையாக இருக்க முடியும் என்றார் சசிகலா.
3. போலீஸ்காரன் ஒதுங்குறான்னா__ அர்த்தம்___னா பாயப்போறான்னு அர்த்தம்.
4. தமிழகத்தில் _ இல்லாத ஆட்சி வரவேண்டும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
____________________________________________

5*2 = 10 மதிப்பெண்கள்:
IV) பின் வருவனவற்றுள் பொருத்தமில்லாததை எடுத்து எழுதுக:
1.எடப்பாடி,கூவத்தூர், மன்னார்குடி, தேனி, பெங்களூரூ
2.கமல்ஹாசன், சுப்ரமணியன்சுவாமி,சீமான், ஷேவாக்.
3.கையெழுத்து, முதல்வர், பழனிச்சாமி, அன்புமணி
4.மாஃபா பாண்டியராஜன்,தம்பிதுரை, நத்தம் விஸ்வநாதன், செம்மலை
5. ராயப்பேட்டை, கூவத்தூர் ,மன்னை, தென்னை
____________________________________________

2*20 = 40 மதிப்பெண்கள்
V)அனைத்திற்கும் விடையளி:
1.ம.தி.மு.கவிலிருந்து ஓ.பி.எஸ் அணியில் இணைந்தவர்களுக்கும் தே.மு.தி.கவிலிருந்து ஓ.பி.எஸ் அணியில் இணைந்தவர்களுக்குமான வேற்றுமைகளையும், ஒற்றுமைகளையும் விளக்குக.
2.உங்கள் ஊர் எம்.எல்.ஏக்கள் சென்றுவந்த இன்பச்சுற்றுலா குறித்து நீங்கள் ஒரு பக்கத்துக்கு கட்டுரை வரைக:
____________________________________________

2*10 = 20 மதிப்பெண்கள்:
VI) விரிவான விடையளி:
1.கூவத்தூர் கோல்டன் ரிசார்ட்டின் படம் வரைந்து அதன் லொகேஷன்களை குறிப்பிடுக:
(அல்லது)
சமாதி அரசியல் ஓ.பி்எஸ் தியானம் சுவாரஸ்ய நிகழ்வுகளையும், நடிப்பு திறமையையும் வரைக:
2. அ. 'பிரேக்கிங் நியூஸ்' படுத்திய பாடுகள் பற்றி முந்நூறு வார்த்தைகளுக்கு மேல் மீறினாலும் அதை எழுதுக:
(அல்லது)
ஆ. தலைவர், செயல்தலைவர் இரண்டுக்குமான வேற்றுமைகள் உண்மையிலேயே ஏதாவது இருந்தால் அதை எழுதுக:

2017-03-28 08:29:36 by Krishna Kumar

"பேங்க் உள்ளே இருந்து ஓசியில AC அனுபவிச்சதுக்கு ₹50,

வித்ட்ரால் ஸ்லிப்க்கு ₹25,

பேங்க்ல வைச்சிருந்த மினரல் வாட்டரை மடக்கு, மடக்கென குடிச்சதுக்கு ₹15,

மேனேஜரை பார்த்து பத்து நிமிடம் பேசியதுக்கு ₹60,

கேஷியர்(பெண்)கிட்ட தேவையில்லாமா டவுட் கேட்டதுக்கு ₹30..

ஆக மொத்தம் ₹180 உங்க அக்கௌண்டில் எடுக்கப்படும்" என வங்கிகள் விரைவில் அறிவிக்கக்கூடும்

2017-03-10 10:03:11 by Sharon

Funny Jokes || Dad And Son Funny Jokes Dad And Son

2017-03-05 03:50:01 by Priyadharshini

Tamil Funny Thought !! Tamil Funny Thought

2017-01-09 10:00:01 by Patricia Madison
HOT

Supreme Court Refusal of Jallikattu - Funny Memes Supreme Court Refusal of Jallikattu Funny Memes Supreme Court Refusal of Jallikattu Funny Memes Supreme Court Refusal of Jallikattu Funny Memes

2016-12-26 18:07:14 by Vaishnavi

ஒருத்தன் கஸ்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான். ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு..

“ஹலோ..! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்…மே ஐ ஹெல்ப் யூ !! . “நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ? . “வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் போட்டிங்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!

கோவப்படாதிங்க மேடம்…! கல்யாணம் ஆய்டிச்சா?” “இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?” . “இல்லை..!! நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?..” . “.சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..! ”

நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்னை லவ் மேரேஜ் பண்ணா… ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்… அரேஞ்சுடு மேரேஜ்ன்னா பாரிஸ் போலாம்..!

சார்..!! நான் தான் இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டேன்ல .. என்ன ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..?

இப்ப புரிதா !!.. நான் இஷ்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர் இருக்குன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!.. அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்..!

2016-12-26 14:42:00 by rajkumarr
Back to Top
tufing promo

Popular Tufs

default thumb image

Lipstick Under My Burkha Official

default thumb image

Two things to remember in

default thumb image

I found a Leaflet in

Anonymous Says NASA Is About

Anonymous Says NASA Is About

Tamil Funny Messages Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Tamil Funny Messages category.