HOT

Learning is a gift..! Learning is a

2015-03-15 03:40:06 by sekar

ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர்.

அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க,
அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய்.

பல நிமிடங்களுக்குப் பிறகுதான் அரசரை விட்டு,
தான் தூரத்தில் வந்து விட்டதையும், வழியைத் தவற விட்டுவிட்டதை உணர்ந்தது அந்த நாய்.

அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டு, அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது
என்பதையும் உணர்ந்து, தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில்
சில எலும்புத் துண்டுகளைக் கண்டது.

சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் .
புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின்
முன் அமர்ந்தது.

புலி அருகில் வந்தவுடன்,
"ஆஹா...புலியின் மாமிசம் என்ன,என்ன சுவை..!
இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே"
என்றது நாக்கைச் சுழற்றியபடியே தனக்குத்தானே பேசியது..

அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து,

'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்'
என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.
இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று,

நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது.

அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.

குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும்
கோபம் கொண்ட புலி,
"என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடுபடுகிறது
என்பதைப் பார்"
என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.

குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய்,
பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது
போல பாசாங்கு செய்து கொண்டு,
"இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன
குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...

பின் என்ன நடந்திருக்கும் சொல்ல வேண்டியதில்லை,
நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்..

இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது,
எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும் முயற்சியையும்
விட்டுவிட கூடாது.
ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலைப் படுவதாலோ வருத்தப்படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப் போவதில்லை.

அதை நினைத்து கவலைப் படுவதற்கு பதிலாக
அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தால்
நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்.

2015-03-11 19:00:53 by sekar

2015-03-09 10:53:16 by sekar

Nokia 1100 may return with Android Lollipop and Quad-Core Processor..? Nokia 1100 may return with Android Lollipop and QuadCore

2015-03-06 10:58:22 by sekar
HOT

Optical Illusion of Tamil famous actor Optical Illusion of Tamil famous actor

2015-02-18 16:06:19 by sekar

அமெரிக்காவில் குறைந்த உயரத்தில் விமானம் பறந்தபோது விமானி 'செல்பி' எடுத்தபோது அவரது கவனம் சிதறி விபத்து ஏற்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது

செல்போன் மூலம் தங்களை தாங்களே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் 'செல்பி' மோகம், தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இது அவ்வப்போது விபரீதத்தில் முடிவதும் உண்டு. அந்தவகையில் அமெரிக்காவில் நடந்த விமான விபத்து ஒன்றுக்கும், செல்பி மோகமே காரணம் என தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

'செஸ்னா 150 கே' எனப்படும் சிறிய ரக விமானம் ஒன்று கொலராடோ பகுதியில் பறந்து கொண்டிருந்தது. விமானியும், ஒரு பயணியும் இருந்த அந்த விமானம் வாட்கின்ஸ் அருகே திடீரென விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இருவரும் உயிரிழந்தனர்.

இது குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
இதில், விமானம் குறைந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமானி செல்பி எடுத்துக்கொண்டதும், இதனால் அவரது கவனம் சிதறி விபத்து ஏற்பட்டது என்றும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அம்ரித்பால் சிங் என்ற அந்த விமானியின் செல்பி மோகத்தால், அவரது உயிர் மட்டுமின்றி
ஜதிந்தர் சிங் என்ற பயணியின் உயிரும் போய்விட்டது.

2015-02-09 14:37:21 by sekar

YOU CAN.... YOU

2015-02-09 14:27:11 by sekar
You may soon be able to turn your skin into a smartphone display - IBNLive

You may soon be able to turn your skin into a smartphone display - IBNLive ibnlive.in.com

A wearable device that projects the image of a Android tablet on your skin will be a reality soon.

You may soon be able to turn your skin into a smartphone display

ibnlive.in.com/news/you-may-soon-be-able-to-tur...

2014-12-29 19:04:56 by sekar
.. படம் (Padam) - பா ஆ ஞானசேகர்

.. படம் (Padam) - பா ஆ ஞானசேகர் eluthu.com

.. படம் (Padam) . பா ஆ ஞானசேகர்.

eluthu.com/view-photo/8169

2014-12-26 10:32:37 by sekar
Back to Top