எங்கள் ஊர் கோவை மாவட்டம் செட்டிபாளையம் கிராமம். GAIL pipeline எங்கள் விவசாய நிலம் வழியாக செல்கிறது. அந்த gas pipeஐ பதித்துவிட்டால் அந்த இடத்தில் 30 அடி அகலத்திற்கு எதுவுமே செய்ய முடியாது. அங்கே மரம் நடக்கூடாது, ஆழ உழவு செய்யக்கூடாது, வீடு கட்டக்கூடாது, bore well அமைக்கக்கூடாது, அந்த இடத்தை விற்கவோ வாங்கவோ முடியாது, அனுமதியின்றி எதுவுமே செய்யக்கூடாது. அந்த pipelineல் சேதம் ஏற்பட வாய்ப்பே இல்லையாம் ஆனால் ஏதோ ஒரு வகையில் சேதமோ, பாதிப்போ ஏற்பட்டால் விவசாயி சிறையில் அடைக்கப்படுவானாம்.
Cochinல் இருந்து Coimbatore வரை சாலையோரம் வரும் pipeline, Coimbatore முதல் Mangalore வரை விவசாய நிலத்தில் புகுந்து செல்வது ஏன்???. இங்கேயும் சாலையோரம் கொண்டுசெல்லலாமே. 40% சதம் இழப்பீடு என்ன? 400% இழப்பீடு தந்தாலும் எங்களுக்கு வேண்டாம். இத்திட்டத்தினால் தமிழகத்திற்கு எந்தப் பயனும் இல்லை. இந்த pipeline, Cochin to Mangalore point to point.
எங்களுக்காக குரல் கொடுப்பீர்களா?
We need support from you Chennai and city mates. Forwd 2 many groups
2016-02-09 09:34:39 by satheesh