"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு."வருத்தப்படாதே,என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு."என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது.அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்."அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார்.காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான்வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோதுஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது.இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான்.இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான்.ஆனால் ஆச்சர்யம்!பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.இதே போல் இன்னொரு சம்பவம்.அதிலும் டாக்ஸி ஓட்டுனர்,பொறுமை இழக்கவில்லை.ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார்.இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு.இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார்."எப்படி இவ்வளவு பொறுமையாய்,யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?"அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர்,"என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது.வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும்குப்பைகளையெல்லாம் என் மனதில்சேர்த்துக்கொள்ளவில்லை.அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டுபதில் சொல்லிக்கொண்டிருந்தால்நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்யவேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது.ஆமாம்,நண்பர்களே,நமக்கு இலக்குதான்முக்கியமே தவிரஇடையில் வரும்,கொஞ்ச நஞ்சஇடைஞ்சல்கள் அல்ல..

2015-09-18 20:10:01 by Priyadharshini

Related Tufs

default thumb image

Related Tuf

default thumb image

Award Winning Short Film

default thumb image

Child in Iraq is kidnapped

Amazing Heart Lake

Amazing Heart Lake

default thumb image

EDEN Movie TRAILER thriller survival

default thumb image

Related Tuf

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

default thumb image

Narendra Kumar Niraj of JDU

Exercise that eliminate cellulite

Exercise that eliminate cellulite

Veambaazhvaar

Veambaazhvaar

Raising a Kid Is Not

Raising a Kid Is Not

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.