பிரான்ஸ் நாட்டில் உள்ள பெர்துஸ்நகரை சேர்ந்த ஒரு நபர் தனது மகனை பள்ளியில் இருந்து காரில் அழைத்து வந்தார். அவனை காரின் பின்சீட்டில் அமர வைத்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
மலை குன்றுகள் நிறைந்த பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது வானத்தில் இருந்து சுமார் 500 கிலோ எடையுள்ள பசுமாடு ஒன்று கார் மீது ‘டமார்’ என்ற சத்தத்துடன் வந்து விழுந்தது.