காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கார்ப்பரேட்
கம்பெனியின் ரெஸ்ட் ரூம்புக்குள்
நுழைந்துவிட்டது.

பதட்டத்துடன் இருந்த
அந்த புலி டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது.

மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது.

நான்காவது நாள் பசி தாங்க முடியாமல்
ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த
ஒருவரை அடித்துச் சாப்பிட்டது.
அவர், அந்த நிறுவனத்தின்
அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர்.

அவர் காணாமல் போனது அலுவலகத்தில்
யாருக்கும் தெரியாது,
யாருமே கண்டு கொள்ளவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து, இன்னும்
ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.

அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர்.

அவரையும் யாரும்
தேடவில்லை, கண்டுகொள்ளவும்
இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில்
இல்லையே என்று சந்தோஷப் பட்டவர்கள்தான் அதிகம்!).

இதனால் குளிர்விட்டுப் போன புலி,
நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது.

அடுத்த நாள் வழக்கம்போல்
ஒரு நபரை அடித்துக் கொன்றது.
அவர் அந்த அலுவலகத்தின் பியூன்.

அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்குவதற்காக
பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார்.

சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற
பியூனைக் காணவில்லையே என்று மொத்த
அலுவலகமும்
சல்லடை போட்டு தேடியது.

நெடுநேர
தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில்
உயிரிழந்து கிடந்த. பியூனையும்,
அந்த ஆட்கொல்லி புலியையும்
கண்டுபிடிக்கிறார்கள்.

புலி பிடிபடுகிறது

பாடம்

உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ, வசதி வாய்ப்போ அல்ல.

நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.

2015-02-06 15:57:40 by Sanju

Related Tufs

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

babaji

babaji

Lacking in Stimulated Thoughts

Lacking in Stimulated Thoughts

default thumb image

A very rich man took

There are solutions even to

There are solutions even to

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

theriyuma

theriyuma

Thokchom Satyabrata Singh of BJP

Thokchom Satyabrata Singh of BJP

Hanging bed

Hanging bed

Good Night

Good Night

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.