1992     2009        200

உலகிலேயே மிகப்பெரிய மழை, வெள்ளநீர் வடிகால் திட்டம்!
ஜப்பான் நாட்டில் வெள்ளபெருக்கு மேலாண்மை திட்டத்தில் மாநகர எல்லையில் மிகப்பெரிய வடிகால் அமைப்பு ஒன்றை வடிவமைத்துள்ளார்கள். 1992 ல் கட்ட ஆரம்பிக்கபட்ட இந்த மாபெரும் வடிகால் திட்ட கட்டிடம் 2009 ல் தான் முடித்துள்ளார்கள்.
மூன்று மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்துவிட்டது என்று நம்ம ஊரு ஆட்சியாளர்களைப் போல சாக்கு சொல்லாமல்,
200 ஆண்டுக்கு ஒருமுறை வரும் மாபெரும் வெள்ளத்தையும் மனதில் கொண்டு அதை சமாளிக்கும் வகையில் இம்மாபெரும் வடிகால் அமைப்பை கட்டமைத்திருக்கிறார்கள்.
நம்ம ஊரில் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள சேதத்தை தவிர்க்க அதிமிகை நீரை யாருக்கும் பயன்படாமல் நாம் கடலில் கலக்கச் செய்கிறோம் ஆனால் ஜப்பானிலோ அந்த அதிமிகை நீரை இந்த வெள்ளப் பெருக்கு மேலாண்மை திட்டத்தின் மூலம் சேமிக்கிறார்கள்.
பெரும் மழைக் காலங்களில் வெள்ள நீர் டோக்கியோ நகரை சேதப்படுத்தாமல் பாதுகாப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு நதிகளில் இருந்து வரும் வெள்ள நீரை பாதாள கால்வாய்கள் மூலம் உள்வாங்கி பின்பு வறட்சி காலங்களில் நதிக்கே திருப்பி அனுப்பும் இயற்கைக்கு உகந்த திட்டமாக இது அமைந்திருக்கிறது.
அணுஉலை,நியூட்ரினோ போன்ற மக்களுக்கு வேண்டாத திட்டங்களை எல்லாம் வெளிநாட்டில் இருந்து ரெப்ளிக்கா செய்யும் நம்ம ஊரு விஞ்ஞானிகள், இந்த நீர் மேலாண்மை திட்டம் போன்ற மக்களுக்கு பெரிதும் பயன்படக்கூடிய திட்டங்களை நடைமுறைப் படுத்தினால் நம் வருங்கால சந்ததி இயற்கையுடன் இயைந்து வளர்சியை நோக்கி பயணிக்கும்.
-வீ.பிரபாகரன்.

2015-11-20 20:54:25 by Sasi

Related Tufs

Kanavan Manaivi Vazhkkai Husband

Kanavan Manaivi Vazhkkai Husband

default thumb image

1 2

Good Morning Greetings

Good Morning Greetings

SC orders panIndia stay on

SC orders panIndia stay on

Related Tuf

Related Tuf

Captain in BACK in Thamizhan

Captain in BACK in Thamizhan

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Related Tuf

Related Tuf

user

Popular Tufs

Related Tuf

Related Tuf

Amazing Butterfly Paper Arts

Amazing Butterfly Paper Arts

Related Tuf

Related Tuf

Virender Sehwag is a great

Virender Sehwag is a great

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.