பெண்கள் அதிகம் பேசுவது ஏன்?

பெண்கள் அதிகம் பேசுவது ஏன் என்பதற்கான பதில் அண்மைக் கால ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு உயிரியின் தோற்றம், செயல், பண்பு என்ற அனைத்தினையும் கட்டுப்படுத்தும் காரணிகளாக அவ்வுயிரியின் மரபணுக்கள் அமைகின்றன. இம்மரபனுவின் வெளிப்பாடனது உடலில் உற்பத்திச் செய்யப்படும் புரதத்தின் மூலம் அமைகின்றது. ஒரு உயிரியில் காணப்படும் மரபணுவானது அவ்வுயிரியின் பெற்றோர்களிடமிருந்து இனசெல்கள் வழியே பெறப்படுகின்றன. எனவே குழந்தைகளின் செயலும் தோற்றமும் அவற்றின் பெற்றோரைப்போல அமைகின்றது. இப்பண்புகளின் மாறுபாட்டில் சூழ்நிலையும் ஒரு குறிப்பிட்ட அளவில் தமது பங்கினைச் செலுத்தும் என்பதும் உண்மையே. ஒருசில பண்புகள் ஆண் பெண் என இனப்பாகுப்பாடுடன் காணப்படுகின்றன. ஆண் பெண்களுக்கிடையே உடல்ரீதியான அமைப்பு, நடை, குரல் முதலிய பண்புகளில் தெளிவான வேறுபாடுகள் காணப்படுகின்றன.

பொதுவாக பெண்கள் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகமாக பேசுபவர்களாக உள்ளனர். அறிவியலாரும் இதனை பால் (sex) சார்ந்த பண்பாக ஏற்றுக்கொண்டுள்ளனர். பெண்கள் ஆண்களைவிட அதிகம் பேசுவதற்கான காரணத்தினை அறிய மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால ஆய்வின் முடிவுகள் தற்பொழுது கடந்த வாரம் நியுரோசயன்ஸ் (Journal of Neuroscience) என்னும் ஆய்வுப் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தினைச் சார்ந்த நரம்பியல் ஆராய்ச்சியாளர் மார்க்ரட் மெக்கார்த்தி மற்றும் உளவியலார் ஜெ மைக்கேல் பவ்வர் மனிதன் மற்றும் எலிகளில் மேற்கொண்ட விரிவான சோதனைகளின் முடிவின்படி பாக்ஸ்பி2 (Foxp2) என்னும் புரதமே இவ்வேறுபாட்டிற்கு காரணம் எனக் கண்டறிந்தனர். பாக்ஸ்பி2 புரதத்தினை “மொழிப் புரதம்” என அறிவியலார் அழைக்கின்றனர். இப்புரதம் உற்பத்தி செய்யக் காரணமான பாக்ஸ்பி2 மரபணுவானது 2001 ஆண்டு கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்க்கொள்ளப்பட்ட பல சோதனைகளும் மொழி குறித்த வேறுபாட்டிற்கான காரணத்தினை உறுதி செய்தன.

பாக்ஸ்பி2 மரபணுவின் வெளிப்பாட்டினால் சுரக்கப்படும் பாக்ஸ்பி2 புரதம் பெண்களின் மூளையில் அதிகம் காணப்படுவதால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பேசுகின்றனர். பெண்குழந்தைகளும் தமது வயதினை ஒத்த ஆண்குழந்தைகளைக் காட்டிலும் விரைவாக அதிக வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதும் இதனால்தான்! சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 13000 வார்த்தைகளை ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பேசுகின்றனர் என்பது புள்ளி விவரம்.                                         sex         Journal of Neuroscience             2 Foxp2   2     2 2001      2  2             13000

2015-11-30 16:23:15 by muthu

Related Tufs

Kanavan Manaivi Vazhkkai Husband

Kanavan Manaivi Vazhkkai Husband

default thumb image

1 2

10 endrathukulla vs naanum rowdy

10 endrathukulla vs naanum rowdy

Fantastic SnapDeal birthday wishes from

Fantastic SnapDeal birthday wishes from

Related Tuf

Related Tuf

default thumb image

Do Read its beautiful The

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

Kitchen Gadgets You Wont Believe

Kitchen Gadgets You Wont Believe

Most famous Catroon

Most famous Catroon

default thumb image

Related Tuf

These days were gone away

These days were gone away

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.