23              1  1  14  1  1  1

பேரீச்சம்பழ பாயசம்

இயற்கையின் மூலமாக இறைவன் மனிதர்களுக்கு அளித்துள்ள இனிப்புகள் பலப்பல. இயற்கை இனிப்பின் இயல்பான சுவையுடன் ஆரோக்கிய சுவையும் சேர்ந்தது பேரீச்சம்பழம். இது உணவை செரிக்க உதவி செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை போக்குகிறது. ஒரு பேரீச்சம் பழத்தில் 23 கலோரிகள் உள்ளன என்பது வரப்பிரசாதம். நாவை இனிக்க வைக்கும் இனிப்புகளான பேரீச்சம் பழம் மற்றும் வெல்லத்துடன் தன் அதிவாசனையால் மனதை ஈர்க்கும் ஏலக்காய்த் தூள் சேர்த்து இனிக்க இனிக்க பேரீச்சம்பழ பாயசம் செய்யலாமா....?

தேவையான பொருட்கள்:

பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 1 கப்
தேங்காய்ப் பால் - 1 கப்
வெல்லம் நறுக்கியது - 1/4 கப்
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

* கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை பொடிப் பொடியாக அரிந்து கொண்டு தேங்காய்ப்பால் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

* வெல்லத்தை சிறிது தண்­ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு கரைந்ததும், ஒரு உலோக வடிகட்டியில் தூசி நீங்க வடிகட்டிக் கொள்ளவும்.

* ஒரு வாணலி அல்லது நான்ஸ்டிக் தவாவில் தேங்காய்ப்பாலுடன் சேர்த்து அரைத்த பேரீச்சம்பழம் மற்றும் வெல்ல நீரை சேர்த்து ஒரு கொதி விடவும்,

* ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு மத்தியில் வைத்து நன்கு நெரித்து கொதிக்கும் பாயசத்தில் போட்டு ஏலக்காய் பொடி தூவி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.

குறிப்பு:

* தேங்காய்த் துருவலை சிறிது சுடுநீருடன் சேர்த்து மிக்சியில் அரைத்து ஒரு உலோக வடிகட்டியில் போட்டு கசக்கி எடுத்து வடிகட்டிய முதல் தேங்காய்ப்பாலை உபயோகிக்க வேண்டும். சூப்பர் மார்க்கெட்டுகளில் ரெடியாகக் கிடைக்கும் தேங்காய்ப்பாலையும் உபயோகிக்கலாம்.

* ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பதானது வெல்ல சுவையைத் தூக்கிக் காட்டும். வெல்லத்திற்கு பதிலாக தேவைப்பட்டால் சிறிது தேனும் உபயோகிக்கலாம்.

* மற்ற பாயசங்களில் இருந்து வேறுபட்ட சுவையுடன் இயற்கை இனிப்புடனும் கமகம மணத்துடனும் இருக்கும் பேரீச்சம் பழ பாயசம் சுவையும் ஆரோக்கியம் நிறைந்தது என்றால் சரிதானே!

2015-12-22 23:22:59 by yamuna

Related Tufs

  1

1

Related Tuf

Related Tuf

Guys Love

Guys Love

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

The Ashcovered spider web

The Ashcovered spider web

Memories are always special

Memories are always special

user

Popular Tufs

Happy Engineers Day India and

Happy Engineers Day India and

Kanavan Manaivi Vazhkkai Husband

Kanavan Manaivi Vazhkkai Husband

SOMEBODY FINALLY FOUND THE 89TH

SOMEBODY FINALLY FOUND THE 89TH

The Ashcovered spider web

The Ashcovered spider web

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.