12  1 14   34 1  14      3  2               3     12                    1

தீபாவளி இனிப்புகள்

திருநெல்வேலி கோதுமை அல்வா

தே.பொருட்கள்

முழு கோதுமை - 1/2 கப்
சர்க்கரை - 1 1/4 கப்
கேசரி கலர் - சிறிதளவு
நெய் - 3/4 கப்- 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கு

செய்முறை

*கோதுமையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் கிரைண்டரில் அரைத்து 3 முறை பால் எடுக்கவும்.

*அரைத்த பாலை 2 மணிநேரம் அப்படியே வைத்திருந்தால் கெட்டிபால் அடியில் தங்கி நீர் மேலோடு தங்கியிருக்கும்.அந்த நீரை மேலோடு ஊற்றிவிடவும்.

*குக்கரில் வைக்கும் அளவில் ஒரு பாத்திரத்தில் கோதுமைபால்+சர்க்கரை+கேசரி கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.

*குக்கரில் தேவையான நீர் ஊற்றி அதனுள் இந்த மாவு பாத்திரத்திஅ வைத்து மூடி போட்டு 3 விசில் வரை வேகவிடவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரின் உள்ளே இருக்கும் பாத்திரத்தை எடுத்து 1/2 கப் நீர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைக்கவும் அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

*கடாயில் சிறிது நெய் ஊற்றி வெந்த மாவை ஊற்றி சிறு தீயில் கிளறவும்.இடையிடையே நெய் ஊற்றவும்.

*மாவு நன்கு வெந்து கெட்டியாகி நெய் விட ஆரம்பிக்கும் நேரத்தில் ஏலக்காய்த்தூள்+முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.

*விரும்பினால் தட்டில் சமப்படுத்தி துண்டுகள் போட்டு பரிமாறலாம்.

பி.கு

பாலை குக்கரில் வேகவைக்காமல் சர்க்கரை பாகு 1 கம்பி பதம் வைத்து மாவை ஊற்றி இடைவிடாமல் கிளறியும் செய்யலாம்.இந்த முறையில் இடைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.இதைவிட மேலே நான் சொன்ன செய்முறை ரொம்ப ஈசியானது.

2015-12-22 23:32:25 by yamuna

Related Tufs

  1

1

Related Tuf

Related Tuf

Mathivanan U of DMK WINS

Mathivanan U of DMK WINS

Vivekanadhas first picture in America

Vivekanadhas first picture in America

Ever bubbly jo

Ever bubbly jo

Related Tuf

Related Tuf

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

We are grateful to share

We are grateful to share

user

Popular Tufs

We are grateful to share

We are grateful to share

default thumb image

84

Related Tuf

Related Tuf

Fan made poster

Fan made poster

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.