2   5      2       14  2    1   1    2              3         4           5

மொறுமொறுப்பான... தட்டை

தென்னிந்தியாவில் நிறைய ஸ்நாக்ஸ்கள் பிரபலமாக உள்ளன. அவற்றில் பெரும்பாலும் நன்கு மொறுமொறுவென்று இருக்கும் ஸ்நாக்ஸ்களை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவர். அதுவும் மாலை வேளை வந்தாலே, டீ அல்லது காப்பியுடன் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்களை தான் சாப்பிட விரும்புவர். அத்தகைய மொறுமொறுப்பான ஸ்நாக்ஸில் முறுக்கைப் போன்றே, தட்டையும் ஒன்று. அது முக்கியமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சரி, இப்போது அத்தகைய தட்டையை எப்படி வீட்டில் எளிதாக செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
உளுத்தம் பருப்பு மாவு - 5 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - தேவையான அளவு
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு (பொறிப்பதற்கு)

செய்முறை:

1) முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும்.

2)பின்னர் ஒரு கடாயில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

3) பின்பு ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

4) பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள தட்டையைப் போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுக்க வேண்டும்.

5) இதேப் போன்று அனைத்து மாவையும் தட்டி, பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான தட்டை தயார்!!!

2015-12-22 23:35:45 by yamuna

Related Tufs

default thumb image

Making of Soan Papdi

Pongal Yummy Tummy Yellow

Pongal Yummy Tummy Yellow

How to make Thattai Murukku

How to make Thattai Murukku

Did u know

Did u know

Related Tuf

Related Tuf

something Behind this statement

something Behind this statement

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Related Tuf

Related Tuf

user

Popular Tufs

I am so middle class

I am so middle class

Puzzle to solve

Puzzle to solve

default thumb image

Stunning Waterfall Street Art by

default thumb image

Related Tuf

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.