மனைவியை மட்டம் தட்டுவது !!

உங்கள் மனைவியை மட்டம் தட்டுவது, குறை கூறுவதால் அவருக்குள் ஏற்படும் மாற்றங்கள்!!
பெண்கள் என்னதான் பட்டங்கள் முடித்தாலும், உலகே போற்றும் அளவில் திகழ்ந்தாலும் தன் கணவனிடம் தான் முதல் பாராட்டுதலை எதிர்பார்ப்பாள். இதை யார் ஒருவராலும் ஈடுயிணை செய்ய முடியாது. சில ஆண்கள் மனைவியை திட்டுவதும், குறைக் கூறுவதும் தங்கள் கவுரவம் என்பது போல கருதுகிறார்கள் போல. ஆனால், உண்மையில் இது ஆண்மகனாக இருப்பதற்கான இழுக்கு.
உங்கள் மனைவி தவறே செய்தாலும் கூட, அடிக்கடி அவர் செய்யும் செய்களில் தவறுகள் நிகழ்ந்தாலும் கூட அதை நீங்கள் தான் அரவணைப்புடன் எடுத்துக் கூறி அவருக்கு புரியவைக்க வேண்டும். அதற்கு மாறாக அவரை மட்டம்தட்டி குறைக் கூறுவதால், அவருக்கு இல்வாழ்க்கையில் நாட்டம் குறைந்து, குடும்பத்தார் மீது வைத்திருந்த காதல் சிதைந்து போகிறது…
தன்னம்பிக்கை இழப்பு
திருமணத்திற்கு பிறகு ஓர் பெண்ணுக்கு தன்னம்பிக்கையும், பாராட்டுதலும் அதிகமாக கணவனிடம் இருந்து தான் கிடைக்கும். மற்றவரை விட தன் கணவனின் பாராட்டை தான் ஓர் பெண் மிகவும் எதிர்பார்க்கிறாள். அது கிடைக்காமல், அடிக்கடி தன் கணவன் தன்னை மட்டம்தட்டி குறைகூறினால் அவள் மனதளவில் தன்னம்பிக்கை இழந்துவிடுகிறாள்.
விரக்தி
நிறைய பெண்கள் திருமணத்திற்கு பிறகு விரக்தியடைய பெரும் காராணமாக இருப்பது இந்த மட்டம்தட்டுவது தான். இது அவர்களை எதிர்மறை செயல்களில் ஈடுபட தூண்டுகிறது. எனவே, எக்காரணம் கொண்டும் உங்கள் மனைவியை மட்டம்தட்டவோ, குறைகூறவோ வேண்டாம்.
பாசம் குறையும்
மட்டம்தட்டுவதால் கணவன் மீது மட்டுமின்றி குழந்தைகள், உறவினர் என அனைவரின் மீதும் அந்த பெண் வைத்திருக்கும் பாசம் குறைகிறது.
தனிமை
தான் என்ன செய்தலும் மட்டதட்டினால், தான் எந்த செயலுக்கும் லாயக்கு இல்லை என்பது போல உணரும் அந்த பெண் தனிமையை உணர ஆரம்பிக்கிறார்.
மன அழுத்தம்
யாரும் தன்னை மதிக்காமல் இருப்பது, தனிமை போன்றவை அந்த பெண்ணுக்கு மன அழுத்தம் அதிகரிக்க பெரிய வாய்ப்பாக அமைகிறது.
இல்லற வாழ்க்கையில் நாட்டம் குறையும்
நீங்கள் உங்கள் மனைவியை மட்டம்தட்டி குறைகூறிக் கொண்டே இருந்தால், அவருக்கு தாம்பத்திய உறவில் ஈடுபடும் நாட்டம் குறைந்து விடும். மனதளவில் பாதிக்கபடுவது தான் இதற்கு காரணமாக அமைகிறது.
எரிச்சல்
வீட்டில் சின்ன, சின்ன சண்டைகள் ஏற்பட்டாலோ, குழந்தைகள் சிறிய தவறுகள் செய்தாலோ கூட எரிந்து விழ தொடங்குவார்கள். காரணமே இன்றி கோவம் வர ஆரம்பிக்கும். இதற்கு காரணம் நீங்கள் மட்டம்தட்டுவது தான்.
பாராட்டுதலின் அவசியம்
பாராட்டுதல் தான் சிறந்த ஊக்கமளிக்கும் செயலாகும். அதிலும் மனைவிகளுக்கு தன் கணவனிடம் இருந்து கிடைக்கும் பாராட்டு தான் மிகவும் முக்கியமானது. புதியதாக அவர் உங்களுக்காக சமைக்கும் போது, வேலை இடங்களில் அவர் முன்னேற்றம் காணும் போது, சிறிய அளவில் அவர் சாதித்தாலும் கூட பாராட்ட வேண்டும்.
பண்பாக பேசுதல்
தவறுகள் ஏற்படுவது சாதாரணம் அதற்காக கோவமாக நடந்துக் கொள்வது என்றுமே தீர்வளிக்காது. பொறுமையாக எடுத்துக் கூற வேண்டும். பண்பாக பேசுங்கள், நீங்கள் தான் அவருக்கு அரவணைப்பாக இருந்து எது நல்லது, எது கேட்டது. எதை எப்படி செய்ய வேண்டும் என்று கூற வேண்டும்.
இல்லறம் சிறக்கும்
வீணாக மட்டம்தட்டி, குறை கூறி அவரை மனதளவில் பாதிப்படைய செய்து இல்லற வாழ்க்கையை சீர்குலைக்காமல். பண்பாக பேசி, பாராட்டி, அரவணைத்து உங்கள் இல்லறம் சிறக்க உதவிடுங்கள்!

2015-12-31 12:22:45 by Sanju

Related Tufs

Manaiviyai Vittu Kudukkatha Kanavan

Manaiviyai Vittu Kudukkatha Kanavan

default thumb image

Husband Honey I will take

default thumb image

Actor Surya voices his support

You dont have to have

You dont have to have

Wish You Happy New Year

Wish You Happy New Year

Happy New Year SMS In

Happy New Year SMS In

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Right Face Mask To Protect

Right Face Mask To Protect

user

Popular Tufs

new plans

new plans

Happy birthday super star

Happy birthday super star

default thumb image

Everyone in this group please

For your information

For your information

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.