விடியற்காலை 3 மணி.
மழை வேறு பெய்து கொண்டிருந்தது.
ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக்
கொண்டிருந்தனர்.
அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
கணவன் மட்டும் எழுந்து போனான்.
கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர்
நின்று கொண்டிருந்தார்.
“சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க
வந்து தள்ளி விட முடியுமா?”
என்று அந்த குடிகாரர் கேட்டார்.
கணவனோ “முடியவே முடியாது ஏம்பா விடியகாலை 3
மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை
சாத்திட்டு படுக்கப்
போய் விட்டான்.
“யாரது?” என்று மனைவி கேட்டாள்.
“எவனோ ஒரு குடிகாரன்,
வந்து காரோ எதையோ தள்ளி விட
முடியுமான்னு கேட்கிறான்”
“நீங்க உதவி செஞ்சீங்களா?”
“இல்லை, காலைல 3 மணி, மழை வேற
பெய்யுது எவன் போவான்?”
“பார்த்தீங்களா?
3 மாசம் முன்னாடி நம்ம கார்
ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப
இரண்டு பேர்
நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க
அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி?
கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்”
கணவன் எந்திரிச்சான், ட்ரஸ்
பண்ணிக்கிட்டு மழையில்
நனைஞ்சுகிட்டே வெளியே போனான்.
இருட்டுல, மழையில்
சரியா தெரியாதாதால
சத்தமா கேட்டான்.
“ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?”
“ஆமா சார்”
“ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே,
இப்ப செய்யலாமா?”
“ஆமா சார் வந்து கொஞ்சம்
தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்”
“எங்கே இருக்கீங் ?
“இங்கதான் ஊஞ்சல்
மேல
உட்கார்ந்திருக்கேன் வாங்க
வந்து தள்ளிவிடுங்க....”

2015-04-22 12:58:13 by Sanju

Related Tufs

Kanavan Manaivi Vazhkkai  Husband

Kanavan Manaivi Vazhkkai Husband

default thumb image

1 2

Husband Vs Wife Table mate

Husband Vs Wife Table mate

Blue Whale committed suicide

Blue Whale committed suicide

WhatsApp Voice Calling Finally Rolls

WhatsApp Voice Calling Finally Rolls

Related Tuf

Related Tuf

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Related Tuf

Related Tuf

user

Popular Tufs

Related Tuf

Related Tuf

actor vishal in nadigar sangam

actor vishal in nadigar sangam

We are grateful to share

We are grateful to share

Cute ball of fur

Cute ball of fur

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.