2   12  1  1   1               1520

வறுத்த தேங்காய் வெல்ல மோதகம்

கணபதிக்கு கொழுக்கட்டை, மோதகம் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக கொழுக்கட்டையை வேக வைத்து செய்வோம். ஆனால் மகாராஷ்டிராவில் கொழுக்கட்டை போன்று காணப்படும் மோதகத்தை பொரித்து, விநாயகருக்கு படைப்பார்கள். சரி, இப்போது மகாராஷ்டிரா ஸ்டைல் தேங்காய் வெல்ல மோதகத்தின் செய்முறைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
மைதா மாவு - 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 1 கப்
தேங்காய் - 1 கப் (துருவியது)
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

செய்முறை:

முதலில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து. 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்ற காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பௌலில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, கையால் தட்டையாக தட்டி, அதன் நடுவே தேங்காய் கலவையை சிறிது வைத்து, படத்தில் காட்டியவாறு செய்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான தேங்காய் வெல்ல மோதகம் ரெடி!!!

2016-01-07 08:43:18 by yamuna

Related Tufs

  1

1

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

Love

Love

Health benefits of daily foods

Health benefits of daily foods

Related Tuf

Related Tuf

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Related Tuf

Related Tuf

user

Popular Tufs

ISRO Indian Space Research

ISRO Indian Space Research

Problems to watch for children

Problems to watch for children

Pinarayi Vijayan of CPoIM WINS

Pinarayi Vijayan of CPoIM WINS

 1985 to 1990

1985 to 1990

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.