பெண் அழகிய தேவதையா,சூனியக்காரக் கிழவியா?


ஒரு குட்டிக்கதை

இரண்டு மன்னர்களின் சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் .”நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”

வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விடை சொன்னால்தான் திருமணம் எனச் சொல்லி யிருந்தாள்.கேள்வி”ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்”.

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான் விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்அவள் சொன்னாள்”விடை சொல்கிறேன். அதனால்அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்”

அவன் சொன்னான் “என்ன கேட்டாலும் தருகிறேன்”

அவள் சொன்னாள்”தன் சம்பந்தமான முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”

இப்பதிலை அவன் மற்ற மன்னனிடம் சொல்லி அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது;இவனுக்கு நாடும் கிடைத்தது.

கிழவியிடம் வந்தான் வேண்டியதைக்கேள் என்றான்.

அவள் கேட்டாள்”நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்

அவள் சொன்னாள்.”நாம் தனியாக இருக்கும் போது கிழவியாக இருந்தால் உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;தனியே இருக்கும்போது அழகிய பெண்ணாக இருந்தால் வெளியே செல்கையில் சூனியக்காரக் கிழவியாகி விடுவேன்.எது உன் விருப்பம்?”

அவன் யோசிக்காமல் சொன்னான்”இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீதான் எடுக்க வேண்டும்”

அவள் சொன்னாள்”முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!”

ஆம்!

பெண் அவள் சம்பத்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப் படும்போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

அனைவரும் புரிந்து செயல் படுங்கள்!

(சுகி சிவம் சொல்லக்கேட்டது)

2015-05-06 12:22:06 by Sanju

Related Tufs

Plant a tree to paint

Plant a tree to paint

Teachers Never taught this Math

Teachers Never taught this Math

Moon Phases Calendar

Moon Phases Calendar

default thumb image

August Birthdays Celebrities Born

default thumb image

This puzzle is called Lateral

We do

We do

Happy Friday Images Quotes

Happy Friday Images Quotes

Related Tuf

Related Tuf

user

Popular Tufs

default thumb image

Related Tuf

Reason for the baby crying

Reason for the baby crying

3D Ultra Sound for blind

3D Ultra Sound for blind

default thumb image

Tamil Nadu CM Jayalalitha Suffers

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.