"உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.."

சரி.என்ன சொல்லனும்...

"உன் முடிவைச் சொல்லு.."

எட்டு வருசம் கழிச்சு சொல்றேன்..

.......................

என்ன முழிக்கறே...

"எட்டு வருசமா..."

ஆமாம்.. பி. ஈ. முடிச்சு எம்.ஈ. போகனும்.வேலைக்கு போகனும்.
பேங்க்ல லோன் வாங்கிதான் வீட்ல படிக்க வைக்கறாங்க.
அந்த கடனை அடைக்கனும்.

"அதனால் என்ன.. காதலிக்கலாம் இல்லே.. "

நான் கிராமத்தில பிறந்து வளர்ந்தவ.. அந்தந்த வயசுல கிடைக்க வேண்டியது எதுவும் எனக்கு அப்போது கிடைக்கலை. ஸ்கூல் பீஸ் கட்டாம எழுந்து நின்னுருக்கேன்.

என் கிளாஸ்மேட் காரிலிருந்து இறங்கறப்போ , நான் சைக்கிள்ல வருவேன்.காய்ச்சல் சளின்னு வந்தா அஞ்சு கி.மீ . தாண்டி இருக்கற டாக்டரை பார்க்க அக்கம் பக்கம் கடன் வாங்கி கூட்டி போவாரு அப்பா..

ஸ்கூல்ல நான்தான் முதல் மார்க்கு. எங்க ஊர்ல எல்லார்க்கும் சாக்லெட் கொடுத்தேன்.என்னைப் பார்த்து எங்க ஊர் பிள்ளைகளுக்கு படிப்பு மேல அக்கறை வரலாம்.

நான் படிக்கனும். சாதிக்கனும்.

"மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கற மாதிரியிருக்கு..."

அப்பா அம்மாவை விட்டு தனியா இருக்கறது இதன் முதல் தடவை..
என்னை பேச வச்சு என் குரலை சிடியில பதிவு பண்ணி வீட்ல கேட்கறாங்க..அவ்ளோ பாசம். காலேஜ் வரதுக்கு முன்னாடியே வீட்ல நாள் கணக்கில பேசியிருக்கோம். எதிர்கால திட்டம் என்னன்னு..

நீ சொல்ற காதல் எப்பவும் வரலாம்.
படிப்பு இப்போ மட்டும்தான் வரும்.

சக மாணவனாக பழகு. நான் சாதிச்ச பிறகு.. உனக்கு பொறுமையிருந்தா வந்து எங்க வீட்ல பேசு. ஏத்துப்பாங்க.

எனக்கு தொந்தரவு கொடுக்காத..
சின்ன பிரச்சினை வந்தாலும் பெத்தவங்க நிம்மதி போயிடும்.
பிளஸ் 2 முழுக்க என் கூட கண் முழிச்சிருந்த அம்மா தூங்கனும்.
தம்பி படிக்கனும். சைக்கிள்ல போற அப்பா வீட்டுக்கு பத்திரமா திரும்பி வரனும்..

மன்னிச்சுடு இப்படில்லாம் பேசறதுக்கு..என் நிலைமையிலிருந்து நீயும் வந்திருக்கலாம். நல்லா யோசி...
பை...

* இந்தப் பதிவின் நாயகி தற்போது அமெரிக்காவில்...பெற்றோருடன் ஸ்கைப்பில் பேசுகிறாள். பேத்தியைக் காட்டுகிறாள்.

அந்த மாணவன் கல்லூரி முடிந்ததும் காணாமல் போனான்.

2016-03-20 09:21:38 by Vaishu

Related Tufs

default thumb image

1

default thumb image

Related Tuf

Related Tuf

Related Tuf

default thumb image

One liners about India that

Lonely Quotes in Tamil

Lonely Quotes in Tamil

default thumb image

Kadal Thandi Pokum Katal Song

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

user

Popular Tufs

What are you doing here

What are you doing here

Q

Q

Ranks of Indian Army

Ranks of Indian Army

Salute to our Brave soldier

Salute to our Brave soldier

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.