525   78     79

அடுத்த ஐந்து வருடங்களில் மனிதர்கள் வாழ பொருத்தமற்ற நகரமாகும் பெங்களூரு!



பெங்களூரில் ரியல் எஸ்டேடின் அதிவேகமான மற்றும் தடையற்ற வளர்ச்சி சுற்றுசூழலின் மேல் நேரடி தாக்குதலை கொண்டுள்ளது. மரங்கள் இருந்த பெரும்பாலன இடங்களை தற்போது கட்டடங்கள் ஆக்கிரமித்துள்ளன. இந்த நிலை தொடர்ந்தால் பெங்களூரு விரைவில் மனிதர்கள் வாழ பொருத்தமற்ற நகரமாகும் என ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) நடத்திய ஆய்வில் கடந்த நாற்பதாண்டுகளில் கட்டிடங்கள் 525% வளர்ச்சியடைந்துள்ளதாகவும், மரங்கள் 78% குறைந்துள்ளதாகவும் மற்றும் நீர் நிலைகளில் 79% குறைந்துள்ளதாகவும் காட்டுகிறது. பெங்களூர் நகரை சுற்றி இருந்த மரங்கள் மற்றும் ஏரிகள் அமைதியாக நகரமயமாக்குதலின் விளைவாக காணாமல் பொயின.

முறையான திட்டமிடல் இல்லாமல் தொழிற்சாலைகளுக்கும் கட்டங்கள் கட்டவும் அனுமதி வழங்கப்பட்டதே இதற்கு காரணம் எனவும் இந்த நிலைமை தொடர்ந்தால் இன்னும் ஐந்து வருடங்களில் பெங்களூரு மனிதர்கள் வாழ பொருத்தமற்ற நகரமாகும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அறிவியல் கழகத்தின் உயிரினவாழ்வு அறிவியல் மைய பேராசிரியர் டி வி ராமச்சந்திரா இதனை ‘முட்டாள்தனமான வளர்ச்சி’ என கூறியுள்ளார்.

மேலும் அரசு பெங்களூரு நகரத்தின் நெரிசலை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நகரில் புதிய தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பேராசிரியர் ராமச்சந்திரா தெரிவித்தார்.

2016-05-03 16:02:13 by arul unique

Related Tufs

default thumb image

Related Tuf

default thumb image

Related Tuf

default thumb image

1

Never stop believing

Never stop believing

Clash of clansa appadina

Clash of clansa appadina

A very peaceful place

A very peaceful place

default thumb image

Bigg Boss Julie In Album

Last seen Whatsapp 2 Minutes

Last seen Whatsapp 2 Minutes

user
tufing promo

Popular Tufs

That Awesome MomentYou Look at

That Awesome MomentYou Look at

Gujarat floods Death toll rises

Gujarat floods Death toll rises

Funny Friends Quotes  Best

Funny Friends Quotes Best

Amit Shah Smriti Irani to

Amit Shah Smriti Irani to

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.