இன்றைய சிந்தனை..(01.07.2017...)

"ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.

திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வர வில்லை.மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது.சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்.அந்த மரம் மகிழ்வுடன் அவனை பார்த்து ஏன்.. இவ்வளவு நாள் வர வில்லை? உனக்கு என்ன துன்பம் என்று கேட்டது.

என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்து இருக்கிறார்கள்.. ஆனால், என்னிடம் மட்டும் ஒன்றும் கூட இல்லை, என்றான்.

கவலைப்படாதே ?இந்த மரத்தில் உள்ள பழங் களை எடுத்துச் சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக் கொள்.
என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...
அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.

மறுபடியும் அவன் வர வேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான்.அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்து இருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக மகிழ்ச்சி.. வா என்னிடம் வந்து விளையாடு.. இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டுப் பாடு என்றது.

அதற்கு அவன் இல்லை இப்பொது எனக்கு வயதாகி விட்டது. எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை,

மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை.. அதற்கு பதில் என்னு டைய கிளை களை வெட்டி எடுத்துச் செல் அதில் ஒரு வீடு கட்டிக் கொள் என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல் என்றது.

வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச் சென்றான்.அதற்கு பின் பல வருடங்கள் வர வில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.

மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது.

அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான்.ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாததால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் துன்பப்படு கிறோம் என்றான்.

மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள். அதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது.

அவன் அடி மரத்தை வெட்டும் போது, மறக்காதே.. வருடத்தி ற்கு ஒரு முறை என்று இல்லாமல் எப்போ தாவது என்னை பார்க்க வா என்றது.

ஆனால் அவன் வர வேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.
அப்போது அவன் வந்தான். தலை யெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத் துடன் அவன்இருந்தான்.

அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.

இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை.. கிளைகள் இல்லை.. அடி மரமும் இல்லை.. உனக்கு கொடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது.

அவன் சொன்னான்.. நீ பழங்கள் கொடுத்தா லும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும், படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப் படுகிறது என்றான்.

அப்படியா ..இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக் கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக் கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறை வேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது..ஆம்..நண்பர் களே..

இது மரத்தின் கதை யல்ல.. இன்றைய பெற்றோர்களின் உண்மைக் கதை..இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடினோம்.. வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடு கின்றோம்.அதன் பின் ஏதாவது தேவை அல்லது துன்பம் என்றால் மட்டுமே அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அதுதான்..

2017-07-03 13:53:21 by SekarGV

Related Tufs

Kanavan Manaivi Vazhkkai  Husband

Kanavan Manaivi Vazhkkai Husband

default thumb image

1 2

Good Morning With Rose

Good Morning With Rose

Tamil quote on love and

Tamil quote on love and

Single Parents Day 2017

Single Parents Day 2017

Can you leave your parents

Can you leave your parents

default thumb image

1

default thumb image

Related Tuf

user

Popular Tufs

default thumb image

Commercial flights restored between Cuba

Avoid junk foods For healthy

Avoid junk foods For healthy

default thumb image

State first mark 1st

SaluteSelfie Bollywood celebs salute the

SaluteSelfie Bollywood celebs salute the

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.