*கல்லை காதலிக்கும் மனிதர்களே!*

மும்பையில் நரேந்திர மோடி அவர்களின் கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்ட *வீர சிவாஜியின்* சிலை உலகிலேயே மிக உயர்ந்த சிலையாக உள்ள *சீனாவின் புத்தர் சிலையின் சாதனைகளை முறியடிக்க உள்ளதாம்!* இந்தியாவில் வீர சிவாஜி நினைவுச்சிலை! மும்பை கடலில் *பல ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டு* கட்டப்படுகின்றது!

சும்மா கிடக்கும் கல்லை தூக்கி நிறுத்த இதற்காக *இந்தியா செலவிடும் மக்களின் வியர்வை ரத்தம் உழைப்பு வரிப்பணமாக சுமார் - ₹.3,600 கோடிகள்* கடலில் கொட்டி செலவிடப்படுகின்றது! *மும்பையில் குடிசையில் (சோன்ப்டா) வாழும் மக்களுக்கு சுமார் ₹.1 லட்சம் வீதத்தில் வீடுகட்டி கொடுத்தால் சுமார் 3,60000 ஆயிரம் வீடுகள்* கட்டி கொடுக்கலாம்!

*சீனாவில் புத்தர் சிலை சாதனையையை இந்தியாவில் வீர சிவாஜி சிலையைக் கொண்டு முறியடிப்பது தான் இந்தியாவின் சாதனையா? இல்லை நலிந்த இந்திய ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது சாதனையா?*

சாதனைகள் முறியடிக்க வேண்டியது *நார்வேயின் சாதனைகளை!* நார்வே உலகிலேயே *தங்களின் நாட்டு மக்களை மகிழ்சியாக வைத்துள்ளனர் உலகில் அவர்கள் NO.1 இந்தியா NO.121 இடங்கள் பின் தங்கியுள்ளது* இதையல்லவா முறியடிக்க வேண்டும்

சாதனைகள் முறியடிக்க வேண்டியது *இங்கிலாந்தின் சாதனையை!* உலகில் மக்களுக்கு *சிறந்த மருத்துவ வசதிகளை செய்துதருவதில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது!*
இதையல்லவா இந்தியா முறியடிக்க வேண்டும்!

சாதனைகள் முறியடிக்க வேண்டியது *டென்மார்க் சாதனையை!* உலகில் *ஊழல் செய்யும் நாடுகளில் இந்தியா 76 வது இடத்தில் உள்ளது! ஊழலற்ற நாடுகளில் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது* முறியடிக்கவேண்டியது டென்மார்க் சாதனையை! இதையல்லவா இந்தியா முறியடிக்க வேண்டும்!

சாதனைகள் முறியடிக்க வேண்டியது *பின்லாந்து சாதனையை!* உலக அளவில் *இந்தியா கல்வியில் 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது!* உலக அளவில் *கல்வியில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது!* முறியடிக்க வேண்டியது! பின்லாந்து சாதனைகளை இதையல்லவா இந்தியா முறியடிக்க வேண்டும்!

சாதனைகள் முறியடிக்க வேண்டியது *அமெரிக்காவின் சாதனையை!* அமெரிக்கா உலகில் *மிகப்பெரிய விவசாயம் செய்யும் நாடு! விவசாயம் செய்வதில் உலகில் முதலிடத்தில் உள்ளனர்!* விவசாயிகளை மகிழ்ச்சியுடன் வைத்துள்ளனர்! இதையல்லவா திரு.மோடி அவர்களே முறியடிக்க வேண்டும்!

ரத்தமும் சதையும் உயிரும் இதயமும் உள்ள மனிதர்களை புறம்தள்ளிவிட்டு *கல்லை காதலிக்கும் மனிதர்களே-ஆட்சியாளர்களே!* உங்கள் நெஞ்சம் என்ன இதயமே இல்லாத கல்லால் வடித்த சிலைகளா?????????????

2017-08-10 10:22:19 by SekarGV

Related Tufs

Good Message

Good Message

default thumb image

Related Tuf

default thumb image

This calculation will help you

default thumb image

First time in Indian History

Dams built during Late Chief

Dams built during Late Chief

Jio 5G service

Jio 5G service

default thumb image

August Birthdays Celebrities Born

Gorakhpur tragedy Inquiry report blames

Gorakhpur tragedy Inquiry report blames

user

Popular Tufs

Indias Independence Day  August

Indias Independence Day August

Wishing A Happy Independence Day

Wishing A Happy Independence Day

Jio Release lets Airtel force

Jio Release lets Airtel force

default thumb image

Tik Tik Tik

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.